Today's Prophetic Message



                                                   
 அற்புதத்தின் இரகசியம்

 

மாற் 5:42

   உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

   கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்த சிறுபெண்ணை உயிரோடு எழுப்பினார். இந்த இயற்கைக்கு மேற்பட்ட அற்புதத்தினை செய்வதற்கு முன்பு சில கிரியைகளை வெளிப்படையாகச் செய்தார். அது என்ன என்ற இரகசியத்தினை அறிந்து கொண்டால் நம் வாழ்க்கையிலும் பெரிய அற்புதங்கள் எளிதாக நடக்கும்.

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அற்புதத்தினை செய்வதற்கு முன்பு முதலில் மரித்த சிறுபெண்னை சூழ்ந்திருந்த நகைப்பவர்களை வெளியே துரத்தினார். பின்பு, தகப்பன்-தாயையும், தன்னுடைய மிக நெருங்கிய சீஷர்களையும் மரித்த அந்த பெண் இருந்த அறைக்குள் அழைத்து கொண்டு சென்றார். சீஷர்கள் ஜெபிக்கின்றவர்கள் தேவபிரசன்னத்தை கொண்டுவருவார்கள். தகப்பன்-தாய்  பிள்ளையை உண்மையாக நேசிக்கின்றவர்கள். பிள்ளை உயிரோடு எழும்பினால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். அன்புள்ளம் கொண்டவர்கள். தேவப்பிரசன்னமும் அன்பும் அங்கே ஒன்று சேர்ந்தது. மரித்த பெண்ணை சுற்றி  சூழ்ந்து கொண்டது. கட்டளையிட்டார்… மரித்த பெண் உயிரோடு எழும்பினாள். மக்கள் அற்புதத்தினை பார்த்து தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

  தேவபிரசன்னமும் அன்பும் எங்கே ஒருமித்து இருக்கின்றதோ அங்கே இயற்கைக்கு மேற்பட்ட அற்புதம் தானாக நடக்கும். உங்கள் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நடக்க வேண்டுமா? தேவப்பிரசன்னத்தோடு அன்பை காட்டுங்கள் அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE 



                  Secrets of miracle 

Mark 5:42

      Immediately the girl stood up and began to walk around (she was twelve years old). At this they were completely astonished. 

  The Lord Jesus Christ raised the little girl from death. Before performing this supernatural miracle, He performed certain actions. If we know the secret of what it is, great miracles will easily happen in our lives too. 

  Before performing the miracle, the Lord Jesus Christ chased away the mockers who had surrounded the dead little girl. Then He took her father and mother and His closest disciples into the room where the dead girl was. Disciples are prayerful persons, they bring God's presence and father-mother who truly loves their child. They will be very happy if the child wakes up alive. God's presence and love are united there. It surrounded the dead child. Then Jesus Commanded… And the dead girl raised to life. People looked at this miracle and glorified God. 

   Where God's presence and love are united, supernatural miracles happen automatically. Do you want miracles to happen in your life as well? Show love with God's presence and you will receive miracles.

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

கானானியர் ஆவி

எது விபச்சாரம்? எது வேசித்தனம்?

சீரழிக்கப்பட்டவள்

வரன் தேடுபவர்களுக்கு..

அழுத்தம் வேண்டாம்