Posts

Showing posts from June, 2024

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
      புது மாதத்தை நம்முடைய வாழ்க்கையில் காணச் செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரமும்,   கனமும்,   மகிமையும் உண்டாகட்டும்.   ஒவ்வொரு புது நாளை காண்பதும் கர்த்தருடைய மகா பெரிய கிருபையே. ஒவ்வொரு முறையும் புதுப்புது வாக்குத்தங்களையும் வழிநடத்துதல்களையும் தந்து பரலோக தேவன் ஆசீர்வதிக்கின்றார். இந்த புதிய மாதத்திலும் உன் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் என்ற தீர்க்கதரிசன வாக்குத்தத்த வசனத்தின் படி ஆசீர்வதிப்பாராக. (உபாகமம் 28:1)    பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் மேன்மை என்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இதை சுதந்தரித்து கொள்ள   என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தியில் தியானிக்கலாம்.      இந்த பூமியில் அநேக மனிதர்கள் வாழ்கின்றார்கள்.   சிலருக்கு ஒரு சில ஆசீர்வாதங்கள் இருக்கும்.   வேறு சிலருக்கு மற்ற சில ஆசீர்வாதங்கள் இருக்கும்.   உதாரணமாக, சிலருக்கு கர்ப்பத்தின் கனிக்கான ஆசீர்...