Posts

Showing posts with the label All Messages

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
  நம்மை நேசிக்கின்ற பரலோக தேவன் ஒவ்வொரு நாளும் நம்முடன் பேசி புதுப்புது வாக்குத்தத்தங்களையும், அபிஷேகத்தினை கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கின்றார். ஒவ்வொரு புது நாட்களிளும் தேதி மட்டுமே மாறும். ஆனால், புது மாதம் வரும்போது தேதி மற்றும் மாதத்தின் பெயர் மாறும். அதே நேரத்தில் புது வருடம் என்றால் தேதி மற்றும் மாதத்தின் பெயர்,   வருடம் மாறும். இப்படி பெரிய பெரிய மாற்றங்கள் வரும்போது பெரிய பெரிய வாக்குத்தத்தங்களை கொடுத்து, பரலோகத்தின் பெரிய பெரிய ஆசீர்வாதங்களையும்   கொடுப்பார்.   சென்ற நவம்பர் மாதத்தினை முடித்து டிசம்பர் மாதத்திற்குள் வந்திருக்கின்றோம். 2024-ம் வருடத்தில் கடைசி மாதமாகும்.   இந்த நாட்களிலும் பரலோக தேவன் நமக்கு நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய   கர்த்தர்   உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக என்ற உபாகமம் 1:11 ம் வசனத்தினை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்.   இதன்படி ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தினை நமக்கு தந்து ஆசீர்வதிப்பாராக.   நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தே...

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
        நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாய் இருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 24:44) இந்த வார்த்தைக்கு கீழ்படிந்து திருடன் வருகின்ற விதமாக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் புதுப்புது வார்த்தைகளை வாக்குத்தத்தங்களாக தந்து, பரலோக தேவன் திடப்படுத்துகின்றார். அவர்களை பலப்படுத்துகின்றார்.    உற்சாகப்படுத்துகின்றார்.   அதன்படி, இந்த நாட்களிலும் கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்   என்ற ஏசாயா தீர்க்கதரிசி புத்தகம் 40 ஆம் அதிகாரம் 31 ஆம் வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்.   இதன்படி, இனி வரும் நாட்களை ஆசீர்வதிப்பார்.   நாம் அனைவருமே கர்த்தருக்காக காத்திருக்கின்றோம். அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றோம்.  வாக்குத்தத்தங்கள் நிறைவேற காத...

தீர்க்கதரிசன வாக்குத்தத்தம்

Image
           ஒரு நாளின் முதல் பகுதியோ, ஒரு மாதத்தின் முதல் பகுதியோ அல்லது  ஒரு வருடத்தின் முதல் பகுதியோ தேவசமூகத்திற்கு செல்லும் போது,  அந்த முழு நாட்களுக்கான பரலோக தேவனுடைய ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன், தேவ சமூகத்தில் சென்று ஜெபிக்கும் போது, அந்தக் காரியத்தினை குறித்த ஆலோசனைகளை பரலோக தேவன் கொடுப்பார். இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காரியம் ஒன்று உள்ளது. முதற்பகுதி தேவசமூகத்திற்குள் சென்றால்தான், தேவஆலோசனைகள் கிடைக்கும்.  மாறாக காரியத்தை நாமே தொடங்கி, நாமே செய்துவிட்டு, பிரச்சனைகள் என்று வந்தவுடன்  தேவ ஆலோசனைகளை பெற நினைப்பது அந்த அளவுக்கு ஆசீர்வாதமாக இருக்காது. ஏனென்றால், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணு என்று நீதிமொழிகள் 3:9 கூறுகின்றது.  ஒரு நாளில் முதல் நேரம், மாதத்தின் முதல் நேரம், வருடத்தின் முதல் நேரம் தேவனுக்கு கொடுப்பது அவரை கனம் பண்ணுகின்றோம் என்று அர்த்தம்.           இந்த வருடத்தின் புதிய மாதத...

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
      புது மாதத்தை நம்முடைய வாழ்க்கையில் காணச் செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரமும்,   கனமும்,   மகிமையும் உண்டாகட்டும்.   ஒவ்வொரு புது நாளை காண்பதும் கர்த்தருடைய மகா பெரிய கிருபையே. ஒவ்வொரு முறையும் புதுப்புது வாக்குத்தங்களையும் வழிநடத்துதல்களையும் தந்து பரலோக தேவன் ஆசீர்வதிக்கின்றார். இந்த புதிய மாதத்திலும் உன் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் என்ற தீர்க்கதரிசன வாக்குத்தத்த வசனத்தின் படி ஆசீர்வதிப்பாராக. (உபாகமம் 28:1)    பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் மேன்மை என்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இதை சுதந்தரித்து கொள்ள   என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தியில் தியானிக்கலாம்.      இந்த பூமியில் அநேக மனிதர்கள் வாழ்கின்றார்கள்.   சிலருக்கு ஒரு சில ஆசீர்வாதங்கள் இருக்கும்.   வேறு சிலருக்கு மற்ற சில ஆசீர்வாதங்கள் இருக்கும்.   உதாரணமாக, சிலருக்கு கர்ப்பத்தின் கனிக்கான ஆசீர்...

பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

Image
                            குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கின்றது (யோவான் 8:36). இன்றைய நாட்களில் பல்வேறு பாவங்களுக்கும், சாபங்களுக்கும் அநேக தேவனுடைய பிள்ளைகள் அடிமைகளாகவே உள்ளார்கள். இந்த உலகத்தில் வேசித்தனம், விபச்சாரம், காமவிகாரம், மதுபானம், புகைப்பிடித்தல்,   ஆபாச படங்களை பார்ப்பது, சினிமா பார்ப்பது, இச்சையான பார்வை, சுயபுணர்ச்சி, கள்ளக்காதல், ஆபாச சாட்டிங், போஜனபிரியராக இருப்பது, வாகனங்களை வேகமாக ஓட்டுதல் போன்ற பல அடிமைத்தனத்தின் பாவங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பாவங்களில் எளிதாக சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால், அவற்றினை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றார்கள். எவ்வளவு போராடியும் எவ்வளவு ஜெபித்தும் அவர்களால் கொஞ்சம் கூட வெளியே வர முடியாமல் இருக்கின்றார்கள். பாவங்களில் சிக்கி அடிமைத்தனத்தின் கட்டுகளில் இருப்பவர்கள் எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதை குறித்து இந்தச் செய்தியில் வ...

ALL Prophetic Messages Link-3

Image
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…                 தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! கர்த்தருடைய  கிருபையினால் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை பல தலைப்புகளில் தீர்க்கதரிசன செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்திகளின் விபரங்கள் ஏற்கனவே ஒரு பகுதியாக கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் அந்த செய்திகளை வாசிக்கவில்லையென்றால் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள்.  உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  பரலோக தேவன் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. முந்தைய பகுதியை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE 61. தடுக்கும்  ஆவி நம் சரீரத்தினை தாக்கி, கர்ப்பப்பை, கழிவு நீக்க உறுப்புகள், நுரையீரல் போன்ற உறுப்புகளில் பலவிதமான வியாதிகளை கொண்டுவரும் தடுக்கும் ஆவியைக்குறித்த சத்தியத்தினை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்ப...