மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2026

















1.இதை ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டுமா? Click Here 

2.தேர்வினைப்பற்றி அறிந்துக்கொள்ள வேண்டுமா? Click Here

3.தேர்வுக்கான விதிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டுமா? Click Here

4.பதிவு செய்ய வேண்டுமா? Click Here

5. பதிவு எண்ணை தெரிந்துக்கொள்ள வேண்டுமா? Click Here

6. உங்களுக்கு வரும் சந்தேகங்களும் அதற்கான எங்கள் விளக்கங்களும் Click Here 


கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…          

திரியேக தேவனுக்கே  மகிமை உண்டாகட்டும்! உங்களுக்கு என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்பின் வாழ்த்துகள். நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்று விசுவாசிக்கின்றேன். கர்த்தருடைய மகா பெரிய கிருபையினால் ஏழாம் வருடத்திலும் நடத்தப்படும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வுக்கான அறிவிப்பினை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

        பரலோக தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த வேதவசனத்தை வாசித்து, எழுதி, தியானிக்க வேண்டும். மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2019 ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக  வேதாகமம் எழுதும் தேர்வு  நடத்தப்படுகின்றது.  இதுவரை ஆறு வருடம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் உள்ளது. இந்த தேர்வுகளில் அநேகர் கலந்துக்கொண்டு தேவனுடைய பரிசுத்த வேதத்தினை சொந்தக் கையால் எழுதி, பரலோக தேவனுடைய ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்கள். சத்திய வேதத்தினையும் அறிந்துக்கொண்டார்கள். ஊழியத்தின் மூலமாக கொடுக்கும் பரிசினையும் பெற்றுக்கொண்டார்கள்.    

 கடந்த வருடங்களைப்போல இந்த 2026-ம் வருடமும்  வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.         

வீட்டிலிருந்தபடியே இந்த தேர்வில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும், எத்தனை முறை வேண்டுமென்றாலும், ஒரே குடும்பத்தில் உள்ள  எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் கலந்துக்கொண்டு எழுதலாம். இதற்காக எந்த விதமான கட்டணங்களும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம். கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து Long Size Note –ல் பிழையில்லாமல், சொந்தக்கரத்தினால் தெளிவாக எழுத வேண்டும். எழுதிய நோட்டை கடைசி  தேதிக்குள்  எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நீங்களும்  இத்தேர்வில் கலந்துக் கொண்டு வேதவசனத்தை சொந்தக் கையினால் எழுதலாம்.  

இந்த 2026-ம் வருடம் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே,  கொடுக்கப்பட்டுள்ள  விதிமுறைகளை  மிகக் கவனமாக வாசித்த பின்பு எழுதவும். ஏனென்றால் விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.

 தேர்வினை எழுதுவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் மற்றும் தேர்வுக்கான விதிமுறைகள், பரிசுகளுக்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை கவனமாக வாசித்த பின்பு தேர்வினை எழுத தொடங்குங்கள்.

 

தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடும் நாள் :  2026 ம் வருடம் ஜனவரி 5 –ம் தேதி (05-01-2026)

எழுதிய நோட் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :  2026 ம் வருடம் டிசம்பர் 31 –ம் தேதி (31-12-2026)

மொத்த நாட்கள் : 360

வேதப்பகுதி: யோசுவா முதல் 2 சாமுவேல் வரை

மொத்த வசனங்கள் : 2866

மொத்த அதிகாரங்கள் : 104

மொத்த புத்தகங்கள் : 05

ஒரு நாளைக்கு எழுதும் வசனங்கள் : 08

 

தேர்வினை எழுதுவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் :

 

1.ஒருமுறை எழுதுவது பத்து முறை வாசிப்பதற்கு சமம் என்று சொல்லுவார்கள். அதன்படி வசனத்தை எழுத எழுத பத்துமுறை வாசிப்பதற்கு சமம் ஆகும். இதனால் வசனமாகிய விதை இருதயத்தில் ஆழமாக பதிந்து, வளர்ந்து ஆவிக்குரிய கனிகளை கொடுக்கும்.

2.பரிசுத்த வேதவசனங்கள் இருதயத்தின் ஆழத்தில் இருப்பதினால் கடைசிக்கால வஞ்சகங்களுக்கு தப்பித்துக்கொள்ளலாம்.

 

3. சிறுவயதில் மற்றவர்கள் பேசிய வார்த்தைகளினிமித்தம் வந்த காயங்கள், தவறாக நடத்தியதினிமித்தம் வந்த  மனக்காயங்கள் மற்றும் சிறு வயதின் பாவங்கள் இருதயத்தில் ஆறாத வடுவாக இருக்கும். பரிசுத்த வேத வசனத்தை எழுத எழுத இந்த காயங்கள் சரியாகும், ஆறாத வடுக்கள் அழிக்கப்படும். ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.( எபிரெயர் 4:12)

 

4. பொருத்தனையோடு இந்த தேர்வினை எழுதும்போது, நீண்ட நெடிய நாட்களாக இருக்கும் ஆசீர்வாத தடைகள் மாறி அற்புதங்கள் நடக்கும். (கவனிக்க : கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் அநேகர் கலந்துக்கொண்டு கர்பத்தின் கனிக்கான ஆசீர்வாதங்கள், திருமணத்திற்கான ஆசீர்வாதங்கள், சரீரத்திற்கு அடுத்த ஆசீர்வாதங்கள் மற்றும் சொந்த வீட்டிற்கான ஆசீர்வாதங்களை பெற்று சுதந்தரித்துள்ளார்கள்.)

  

5.தேர்வில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்காக எங்களது ஜெபவீரர்கள் ஊக்கமாக கருத்தாக தினமும் ஜெபிப்பார்கள். உங்களுக்கு தேவையென்றால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான தீர்க்கதரிசன ஆலோசனைகள் கொடுக்கப்படும்.

 

6.தேர்வுக்கு பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் ஊழியத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி அனுப்பும் தீர்க்கதரிசன செய்திகள் அனுப்பப்படும்.

 

 

தேர்வு  எழுதுவதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள்:

 

மிக முக்கியமான விதிகள் :

 

1. இந்த தேர்வினை கண்டிப்பாக Long Size Note- ல் தான் எழுதவேண்டும். உங்கள் விருப்பப்படி Ruled  அல்லது Unruled நோட்டில் எழுதலாம். Paper-ல் எழுதியிருந்தால்  Reject செய்யப்படும். Paper-ல் எழுதி Long Size Note போல் Binding Or Spiral Binding செய்து அனுப்பலாம். அது ஏற்றுக்கொள்ளப்படும்.

2. முழுவதும் நீலம் மற்றும் கருப்பு நிறம் என்ற வித்தியாசம் இல்லாமல் எந்த  நிற பேனாவைக்கொண்டும் எழுதலாம். நிறங்கள் மாற்றி மாற்றியும் எழுதலாம் அல்லது ஒரே நிறத்தில் எழுதலாம்.  அது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது. ஆனால்,  தலைப்பை கருப்பு நிற பேனாவைக்கொண்டே எழுத வேண்டும். உதாரனமாக யோசுவா என்பதனையும் அதிகாரம் ஒன்று என்பதனையும் கருப்பு நிறத்தில் எழுத வேண்டும். அதே போல் எல்லா பக்கத்திலும் எந்த புத்தகம் என்பதனையும் எந்த அதிகாரம் என்பதனையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு எழுதப்படாமல் இருக்கும் நோட் Reject செய்யப்படும்.   (உதாரணமாக யோசுவா ஒன்றாம் அதிகாரம் எழுதும்போது, பரிசுத்த வேதத்தில் உள்ளது போல் யோசுவா என்பதனை எழுதி அதிகாரம் 1 என்றும், யோசுவா இரண்டாம் அதிகாரம் எழுதும்போது யோசுவா என்பதனை எழுதி அதிகாரம் 2 என்றும் எழுத வேண்டும். ஒவ்வொரு பக்கமும் மேல் பக்கத்திலும் வேதாகமத்தில் உள்ளது போல் யோசுவா 1, யோசுவா 2 என்று  எழுத வேண்டும். ஒரே பக்கத்தில் இரண்டு அதிகாரங்கள் வந்தால் யோசுவா 1, 2 என்று எழுத வேண்டும். இதை கண்டிப்பாக கருப்பு நிற பேனாவால் எழுதவேண்டும்.)

 

3. உங்கள் விருப்பத்தின்படி எந்த பேனாவை (Ball point or Ink Pen or Gel pen) பயன்படுத்தியும் எழுதலாம். பென்சிலைக் (Pencil) கொண்டு எழுதக்கூடாது.  எழுதியிருந்தால் உங்கள் நோட் எங்களால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.

 

4.தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். ஆங்கிலத்தில் எழுதினால் எந்த Version என்பதனை குறிப்பிட வேண்டும்.(Ex: NIV, NKJV, KJV & etc) எந்த Version என்பதனை குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் நோட் எங்களால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.

 

5.அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக பிழையின்றி  எழுதியிருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருந்தால் கண்டிப்பாக மதிப்பீடு செய்யும் போது Reject செய்யப்படும்.  ஏதாவது பிழை ஏற்பட்டால் அதை Correction Pen-ஐ பயன்படுத்தி(Whitener) அழித்துவிட்டு சரியாக மறுபடியும் எழுதலாம் அல்லது அந்த Paper –ஐ கிழித்துவிட்டு அடுத்த பக்கத்தில்  எழுதலாம்.

 

6. எந்த வசனத்தையும் மற்றும் எந்த அதிகாரத்தையும், எந்த புத்தகத்தையும் விடாமல் கண்டிப்பாக எல்லா வசனங்களையும் எழுத வேண்டும். (மொத்த வசனங்கள் : 2866 ,  மொத்த அதிகாரங்கள் : 104 , மொத்த புத்தகங்கள் : 05) எந்த ஒரு வசனத்தையாவது அல்லது அதிகாரத்தையாவது எழுதாமல் விட்டிருந்தாலும் கண்டிப்பாக Reject செய்யப்படும்.

  

7.நிறுத்தக்குறிகளான (Punctuation) முற்றுப்புள்ளி (Full stop), முக்காற்புள்ளி (Colon) அரைப்புள்ளி (Semicolon), காற்புள்ளி (Comma), உணர்ச்சிக்குறி (Exclamation point), வினாக்குறி (Question mark), ஒற்றைமேற்கொள்குறி (Apostrophe),  போன்றவை பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல் சரியாக இட வேண்டும். Random ஆக check  பண்ணும்போது இதில் தவறு கண்டுப்பிடிக்கப்பட்டால் Reject செய்யப்படும்.

 

8. துவக்கம் முதல் இறுதி வரை ஒரே Hand Writing-ல் இருக்க வேண்டும். வேறு நபர்கள் எழுதியிருக்ககூடாது. Hand Writing-ல் வித்தியாசம் இருந்தால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.

 

9.நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்கள் கஷ்டங்களை சொல்லி ‘எங்களுக்கு பரிசுகளைத் தாருங்கள்’ என்ற எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவேண்டாம். இவ்வாறு கோரிக்கை வைப்பவர்களின் நோட் Reject செய்யப்படும்.

 

10. கடைசி நாள்  2026  டிசம்பர் 31.  இந்த தேதிக்குள் எழுதிய Long Size Note எங்களுக்கு கிடைக்குமாறு  கொரியர் அல்லது போஸ்ட் மூலமாக அனுப்ப வேண்டும்.  அனுப்ப வேண்டிய முகவரி : Prophetic Words Trust, 5-13, Thip-Meenachipuram, Thippanampatti-PO, Tenkasi- 627 808. கடைசி தேதிக்கு பின்பு வரும் நோட் எங்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது Reject செய்யப்படும். நேரில் கொண்டு வந்து தரவேண்டும் என்று விரும்பினால் 2026 டிசம்பர் 20-ம் தேதிக்கு பின்பு கொண்டுவரவும். அதற்கு முன்பாக வரும் நேரில் கொண்டு வரும் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

 

மிக முக்கியமான விதிமுறைகள் :

 

தேர்வுக்கு பதிவு செய்யும் முறை:

 

1.கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கு பதிவு செய்து கலந்துக்கொண்டவர்கள் அதே பதிவு எண்ணை வைத்து இந்த வருடமும் எழுதலாம். பதிவு எண் இல்லாதவர்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.  

 

2.கடந்த வருடம் பதிவு  செய்து பதிவு எண் தெரியாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள   லிங்கை கிளிக் செய்து அறிந்துக்கொள்ளவும்.

 

3. ஒரே முகவரியில் வசிக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பதிவு எண்ணை வைத்துக் கொண்டு   எழுதலாம்.  ஆனால், ஒவ்வொருவரும் தனித்தனியாக  தனி நோட்டில் துவக்கம் முதல் இறுதி வரைக்கும் எழுத வேண்டும்.

 

4. வேறு வேறு முகவரியில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.

 

5. தேர்வுக்கு பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள   லிங்கை (Link) கிளிக் (Click) செய்து கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை நிரப்பி அனுப்பவும். விண்ணப்பபடிவத்தினை நிரப்பி Submit கொடுத்தவுடனே ஒரு தற்காலிக எண் கொடுக்கப்படும். அதை வைத்து தேர்வினை எழுத ஆரம்பித்துவிடலாம்.

 

6. லிங்கை (Link) கிளிக் (Click) பதிவு செய்ய தெரியாதவர்கள் ஒரு A4 சீட் பேப்பரில் உங்கள் முழு பெயர், வாட்சப் எண், மொபைல் எண், முகவரி, பிறந்த தேதி மற்றும் ’விதிமுறைகள் அனைத்தையும் வாசித்து தெரிந்துகொண்டேன்’ என்ற சுய உறுதி மொழி அறிக்கையும் தெளிவாக எழுதி எங்கள் முகவரிக்கு அனுப்பவும் அல்லது அந்த A4 சீட் பேப்பரை Photo எடுத்து எங்கள் வாட்சப் எண்ணுக்கு அனுப்புங்கள்.  

 

7.நீங்கள் அனுப்பும் விண்ணப்பம் எங்களால் பரிசீலிக்கப்பட்டு இரண்டு வாரத்திற்குள் பதிவு எண் கொடுக்கப்படும். உங்கள் பதிவு எண் Qz என ஆரம்பிக்கும். இரண்டு வாரத்திற்கு மேலாகியும் பதிவு என் கொடுக்கப்படாவிட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

 

8. இந்த தேர்வுக்காக எந்தவிதமான கட்டணமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கேட்பதில்லை. எனவே, யாரும் பணத்தைக்கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது பணத்தைக் கேட்டால் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள்.

 

தேர்வினை எழுதும் முறை:

 

1.உங்கள் விருப்பப்படி Ruled  அல்லது Unruled நோட்டில் எழுதலாம்.

 

2. உங்களுக்கு ஏதேனும் ஜெபக்குறிப்புகள் இருந்தாலும் அல்லது ஏதேனும் அற்புதத்திற்காக காத்துக்கொண்டிருந்தாலும் அதை உங்கள் நோட்டில் முதல் பக்கத்தில் எழுதி வையுங்கள். இந்த தேர்வினை எழுதி முடிப்பதற்குள் கர்த்தருக்கு சித்தமானால் அந்த காரியத்தில் ஒரு மாற்றத்தினை காண்பீர்கள்.

 

3.இது வேதாகமம் எழுதும் தேர்வு கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து  அப்படியே சொந்தக் கையால் எழுதவேண்டும். நாங்கள் எந்த கேள்வித்தாளும் அனுப்பமாட்டோம்.

 

4.பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல்  இரண்டாக பிரித்து எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் எழுதலாம்.

 

5. பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல்  லை, னை, னா  (etc)  போன்ற எழுத்துக்களை எழுத வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது உள்ளது போல் எழுதலாம்.

 

6. உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒவ்வொரு அதிகாரம் முடிந்த பிறகும் கோடு போடலாம்.

 

7. ஒரு நோட்டில் எழுதி முடித்துவிட்டால், தொடர்ச்சியாக மற்றொரு நோட்டில் எழுத தொடங்கலாம்.

   

நோட் அனுப்பும் முறை :

 

1.நீங்கள் எழுதிய நோட்டை அனுப்பும்போது  ஒரு பேப்பரில் உங்கள் பதிவு எண், பெயர் மற்றும் முழு முகவரி, மொபைல் எண், வாட்சப் எண் போன்ற விபரங்களை தெளிவாக எழுத வேண்டும். அதோடு கூட ஒருவர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் எழுதி அனுப்பலாம் என்பதால் நீங்கள் அனுப்பும் நோட் ஒன்றாவது முறையா (First Set) அல்லது இரண்டாவது முறையா (Second Set) என்பதனையும், . நீங்கள் எழுதி அனுப்பிய நோட் உங்களுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றால்  Return Note என்றும்,  எந்த மொழியில் எழுதியுள்ளீர்கள் என்பதனையும், ஆங்கிலம் என்றால் அதன் Version என்ன என்பதனையும், மொத்தம் எத்தனை நோட் அனுப்பியுள்ளீர்கள் போன்ற விபரங்களை தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.

 

2, எந்த மாவட்டத்திலிருந்து அதிகமானோர் எழுதுகின்றார்களோ அவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்பதனால் முகவரியை எழுதும்போது மறக்காமல் நீங்கள் வசிக்கும் தாலுகா மற்றும் மாவட்டம் எது என்பதனை குறிப்பிடுங்கள்.

 

3. நீங்கள் அனுப்பும் நோட்  எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்படமாட்டாது. அந்த நோட்டை நோட்டை ஏழை, எளிய மக்களின் உதவிக்காகவும், தகப்பன் தாயை இழந்த பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகவும், மருத்துவ செலவுக்காகவும் அறக்கட்டளை(Trust) மூலமாக பயன்படுத்தப்படும். யாருக்கு பயன்படுத்தினோம் என்ற விபரங்கள் பின்நாட்களில் உங்களுக்கு அனுப்பப்படும்.

 

4. நீங்கள் அனுப்பும் நோட்டை திருப்பி உங்களுக்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், அதற்கான கொரியர் அல்லது போஸ்ட் மூலமாக திரும்ப அனுப்புவதற்கான செலவுத்தொகையினை செலுத்த முடியுமென்றால், நோட்டை அனுப்பும்போது முதல் பக்கத்தில் NOTE RETURN என்று எழுதி அனுப்புங்கள். இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு  அதற்கான விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  (கவனிக்க : நோட்டை அனுப்பும்போது முதல் பக்கத்தில் NOTE RETURN என்று எழுதி அனுப்பியவர்களுக்கு மட்டுமே திருப்பி அனுப்பி வைக்கப்படும். எழுதவில்லையென்றால் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்படமாட்டாது. அது ஏழை மக்களுக்கு பயன்படுத்தப்படும்)

 

5. நீங்கள் அனுப்பும் நோட் எங்களுக்கு வந்து சேர்ந்தவுடனே Entry போட்டு,  உங்கள் நோட் வந்து சேர்ந்தற்கான Acknowledgement மற்றும் வந்து சேர்ந்ததற்கான எண் (Rv No ) நீங்கள் பதிவு (Register) செய்யும் போது கொடுத்த Whats App எண் மற்றும் E-mail க்கு அனுப்பப்படும். 

 

நோட் சரிபார்க்கும் முறை:

 

1.நீங்கள் எழுதின நோட்டை மிக நேர்மையான முறையில் சரிபார்ப்பதற்காக எழுதினது யார்? எந்த ஊர்? போன்ற  எந்த ஒரு தனிப்பட்ட விபரங்களும் சரிபார்ப்பவர்களுக்கு அறிவிக்கப்படாது. இதற்காக அதில் எழுதப்பட்டுள்ள உங்கள் சொந்த விபரங்கள் முழுவதும் கிழிக்கப்பட்டுவிடும்.

 

2.நீங்கள் அனுப்பும் நோட் மிக நேர்மையான முறையில் இரண்டு சுற்றுக்களாக தொடக்கம் முதல் இறுதி வரை திருத்தப்படும். முதல் சுற்றில் வெற்றிப்பெற்றவர்கள் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் சுற்றில் வெற்றிப்பெற்றவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

 

3.ஒவ்வொரு சுற்றிலும் ஏதேனும் தவறுகள் இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், அதன் Photo Copy-யும்  உங்களுக்கு அனுப்பப்பட்டு உங்கள் வேதாகமத்தில் சரிபார்க்க அனுமதி வழங்கப்படும். நீங்கள் சரிபார்த்து சரியா? அல்லது தவறா? என உறுதி செய்த பின்பே அது சரியாகவோ அல்லது தவறாக ஏற்றுக்கொள்ளப்படும். 

 

பரிசு விபரங்கள்

 

1. கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு சரியாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும்.அதிகமானோர்  விதிமுறைக்கு உட்பட்டு சரியாக எழுதியிருந்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று நபருக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். 

 

2. ஒரு நபர் எத்தனை முறை  வேண்டுமென்றாலும் எழுதலாம். கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக  அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக ரூபாய் 3000 வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக எழுதியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பரிசு வழங்கப்படும். (குறிப்பு: InComplete இல்லாமல் முழுமையாக எழுதி அனுப்பியவர்கள் மாத்திரமே கணக்கில் சேர்க்கப்படுவார்கள்)

3. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும். 

4. நீங்களும் இந்த தேர்வினை எழுத வேண்டும் மற்றவர்களையும் எழுத வைக்கவேண்டும் என்பதற்காக எந்த மாவட்டத்திலிருந்து (District) 500-க்கும் அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ  அவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும். இதில் சமநிலை ஏற்பட்டால் சீட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ( InComplete இல்லாமல் முழுமையாக எழுதி அனுப்பியவர்கள் மாத்திரமே கணக்கில் சேர்க்கப்படுவார்கள். மேலும் ஒன்றுக்கும் அதிகமான முறை(SET) எழுதி அனுப்பியிருந்தாலும் ஒன்று மாத்திரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்)

 

தேர்வின் முடிவுகளையும் Update –களையும் அறிய :

 

1.தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட   மெகா வேதாகமம் எழுதும் தேர்வுக்கான முடிவுகள் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துதான் அறிவிக்கப்பட்டது. எனவே, அனுப்பப்படும் அனைத்து நோட்டுகளை திருத்திய பின்புதான் முடிவுகள் அறிவிக்கப்படும்.

2. உங்கள் முடிவுகளை பார்க்க பதிவு எண் மற்றும் வந்து சேர்ந்ததற்கான எண் (Rv No ) மிகவும் அவசியமாகும். பதிவு எண் என்பது உங்கள் பெயர் மற்றும் சரியான முகவரி, Whats App எண் கொடுத்து  தேர்வுக்கு பதிவு செய்த பின்பு  எங்களால் பரிசீலிக்கப்பட்டு கொடுக்கப்படும். இது Qz என ஆரம்பிக்கும். இந்த எண்ணை வைத்து ஊழியத்தின் மூலமாக நடத்தப்படும் எந்த வேதாகமம் எழுதும் தேர்வுக்கும் பயன்படுத்தலாம். இது மாறாது.

3. ஆனால், வந்து சேர்ந்ததற்கான எண் (Rv No ) என்பது நீங்கள் நோட்டை அனுப்பும்போது உங்களுக்கு கொடுக்கப்படும். இது வருடத்திற்கு வருடம் மாறுப்படும்.  

 

4.தேர்வு சம்பந்தமான எந்த ஒரு தகவலும், முடிவுகளும் நீங்கள் பதிவு செய்யும் போது கொடுத்துள்ள உங்கள் Whats App எண், E-Mail மற்றும் முகவரிக்கு அனுப்பப்படும்.  போன்கால் மூலமாகவும் தெரியப்படுத்தப்படும்.

 

5.  வேதாகமம் எழுதும் தேர்வு-2026 சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள 8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் +91 8608833150, +91 8608096748 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

 

6. மேலும் எங்களது Whats App , Youtube, மற்றும் Telegram, சேனல்களை (Channal) கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து  Subscribe செய்யுங்கள்.

 

Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c

You Tube  : https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw

Telegram  : https://t.me/pwmin

 

7. இப்பொழுது தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக Prophetic words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது.  இதில் வேதாகமம் எழுதும் தேர்வு-2026 சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.  இதை Play Store-ல்  Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும்.  https://play.google.com/store/apps/details?id=com.prophetic.words

 

மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் :

 

1. எந்த மாவட்டத்திலிருந்து (District) 500-க்கும் அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ  அவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்ற விதிமுறை இருப்பதினால் உங்கள் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக Share செய்யுங்கள். உங்கள் மாவட்டத்தில் அதிகமானோர் எழுதி பரிசுகளை வெல்லட்டும்.

 

2. இந்த தேர்வினை எழுதி முடிப்பதற்குள் கர்த்தருக்கு சித்தமானால் நெடு நாட்களாகவே ஆசீர்வாதம் கிடைக்காத  காரியத்தில் ஒரு மாற்றங்கள் கிடைக்கும் என்பதினால் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உங்கள் சபைவிசுவாசிகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களும் கர்த்தருடைய பரிசுத்த வேதவார்த்தையை எழுதி உங்களைப்போல் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

 

3. இந்த தேர்வினைக்குறித்த விபரங்களை உங்கள் Whats App Status-ல் வையுங்கள். மற்றும்  Whats App Group – களில் அதிகமாக Share செய்யுங்கள்.

 

4. விண்ணப்ப படிவத்தில் உங்களுக்கு தெரிந்தவர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை அதற்கான இடத்தில் நிரப்பி அவர்களுக்கும் இந்த தேர்வினை அறிமுகப்படுத்தலாம்.

 

5.தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை நடத்தப்பட்ட வேதாகம தேர்வுகளைப்பற்றி அறிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

   

பரலோக தேவனுடைய வேதத்தினை மறந்து, வாசித்து தியானிக்காமல், நேரத்தை வீனடிக்கும் மக்கள் வாழ்கின்ற இந்த நாட்களில்  கர்த்தருடைய பரிசுத்த வார்த்தையை தன்னுடைய சொந்தக்கரங்களால் எழுதி தியானிக்க அர்பணித்த உங்களை பரலோக தேவன் தாமே ”நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்” என்ற வாக்குத்தத்தின் படி (ஆதியாகமம் 22:17) பரலோக தேவன் தாமே ஆசீர்வதித்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் சந்ததியையும் பலுகி பெருகச்செய்வாராக.



உங்களுக்கு வரும் சந்தேகங்களும் அதற்கான எங்கள் விளக்கங்களும் :

 

1. நோட்டில் மட்டும்தான் எழுத வேண்டுமா? அல்லது டைரியில் எழுதலாமா?

     கண்டிப்பாக Long Size Note- ல் தான் எழுதவேண்டும். உங்கள் விருப்பப்படி Ruled  அல்லது Unruled நோட்டில் எழுதலாம். Paper மற்றும் டைரியில் எழுதியிருந்தால்  Reject செய்யப்படும். Paper-ல் எழுதி Long Size Note போல் Binding Or Spiral Binding செய்து அனுப்பலாம். அது ஏற்றுக்கொள்ளப்படும்.

 

2.சென்ற வருடம் பதிவு செய்தவர்கள் இந்த வருடம் பதிவு  செய்யவேண்டுமா?

    சென்ற வருடங்களில் பதிவு செய்து கலந்துக்கொண்டவர்கள் அதே பதிவு எண்ணை கொண்டு இந்த வருடம் தேர்வினை எழுதலாம். இதற்காக தனியாக பதிவு செய்ய வேண்டாம். உங்கள் பதிவு எண்ணை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

3. முதல் வசனம் தமிழிலும், அதே வசனத்தை தொடர்சியாக ஆங்கிலத்திலும் எழுதலாமா?

    கண்டிப்பாக எழுதக்கூடாது. தமிழ் என்றால் முழுவதும் தமிழில்தான் எழுத வேண்டும். ஆங்கிலம் என்றால் முழுவதும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும்.

 

 

4. ஒருவர் தமிழில் ஒருமுறையும், ஆங்கிலத்தில் ஒருமுறையும் எழுதலாமா?

  ஒரே நபர் தமிழில் ஒருமுறை மற்றும் ஆங்கிலத்தில் ஒருமுறை என எத்தனை முறை வேண்டுமென்றாலும் எழுதலாம். கொடுக்கப்பட்டுள்ள  விதிமுறைக்குட்பட்டு, சரியாக  அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக ரூபாய் 3000 வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக எழுதியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பரிசு வழங்கப்படும்.

 

5.சென்ற வருடத்தைப்போல் கலர் மாற்றி மாற்றி எழுத வேண்டுமா?

       இல்லை, முழுவதும் நீலம் மற்றும் கருப்பு நிறம் என்ற வித்தியாசம் இல்லாமல் எந்த  நிற பேனாவைக்கொண்டும் எழுதலாம். நிறங்கள் மாற்றி மாற்றியும் எழுதலாம் அல்லது ஒரே நிறத்தில் எழுதலாம்.  அது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது.

 

6. தலைப்பு எந்த நிறத்தில் எழுத வேண்டும்?

     தலைப்பை கருப்பு நிற பேனாவைக்கொண்டே எழுத வேண்டும். உதாரனமாக யோசுவா என்பதனையும் அதிகாரம் ஒன்று என்பதனையும் கருப்பு நிறத்தில் எழுத வேண்டும். அதே போல் எல்லா பக்கத்திலும் எந்த புத்தகம் என்பதனையும் எந்த அதிகாரம் என்பதனையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு எழுதப்படாமல் இருக்கும் நோட் Reject செய்யப்படும்.      (உதாரணமாக யோசுவா ஒன்றாம் அதிகாரம் எழுதும்போது, பரிசுத்த வேதத்தில் உள்ளது போல் யோசுவா என்பதனை எழுதி அதிகாரம் 1 என்றும், யோசுவா இரண்டாம் அதிகாரம் எழுதும்போது யோசுவா என்பதனை எழுதி அதிகாரம் 2 என்றும் எழுத வேண்டும். ஒவ்வொரு பக்கமும் மேல் பக்கத்திலும் வேதாகமத்தில் உள்ளது போல் யோசுவா 1, யோசுவா 2 என்று  எழுத வேண்டும். ஒரே பக்கத்தில் இரண்டு அதிகாரங்கள் வந்தால் யோசுவா 1, 2 என்று எழுத வேண்டும். இதை கண்டிப்பாக கருப்பு நிற பேனாவால் எழுதவேண்டும்.)

 

7. கடந்த வருடம் நடந்த தேர்வில் கலந்துக்கொண்டேன். ஆனால், அதை எழுதி முடிக்கவில்லை அதே பதிவு எண்ணைக்கொண்டு இந்த வருடம் தேர்வினை எழுதலாமா?

  எழுதலாம்

 

8.பதிவு எண் எப்பொழுது கிடைக்கும்?

   நீங்கள் விண்ணப்பபடிவத்தினை நிரப்பிய பின் இரண்டு வார காலத்திற்குள் நீங்கள் பதிவு செய்யும் போது கொடுத்த Whats App எண் மற்றும் E-Mail-க்கு அனுப்பி வைக்கப்படும். பதிவு எண் Qz என்று ஆரம்பிக்கும்.

 

9. பதிவு எண் கிடைத்த பின்புதான் எழுத வேண்டுமா?

   இல்லை, விதிமுறைகள் தெரிந்தாலே போதும் எழுத ஆரம்பிக்கலாம். அதுவரை பதிவு செய்யும் போது கொடுத்த Whats App எண்ணை தற்காலிக பதிவு எண்ணாக பயன்படுத்தலாம். நீங்கள் விண்ணப்பபடிவத்தினை நிரப்பும்போதே தற்காலிக பதிவு எண் கொடுக்கப்படும்.

 

10.எண்கள் மார்ஜினுக்கு (Margin) எந்த பக்கத்தில் போட வேண்டும்?

     அது உங்கள் விருப்பம்

 

11. ஒரு வசனம் முடிந்த பின்பு ஒரு கோடு விட வேண்டுமா?

          அது உங்கள் விருப்பம்

 

12.ஆங்கிலத்தில் எழுதும்போது இரண்டு வசனங்கள் சேர்த்து ஒரே வசனமாக கொடுக்கப்பட்டுள்ளது அதை எப்படி எழுத வேண்டும்?

     உங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் எழுதுங்கள்.

 

13. ஒரு முறை எழுதி முடித்த உடனே உங்களுக்கு அனுப்பிவிடலாமா? அல்லது கடைசியில்தான் சேர்த்து அனுப்ப வேண்டுமா?

     எழுதி முடித்த உடனே அனுப்பிவிடலாம்.

 

14. எழுதி முடித்த பின்பு நேரில் கொண்டு வந்து தரலாமா?

   நேரில் கொண்டு  தரலாம். ஆனால், 2026 டிசம்பர் 20-ம் தேதிக்கு பின்பு கொண்டுவரவும். அதற்கு முன்பாக வரும் நேரில் கொண்டு வரும் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

15. எங்கள் வேதாகமத்தில் எழுத்துபிழை உள்ளது? அதை எப்படி எழுத வேண்டும்?

       உங்கள் வேதாகமத்தில் உள்ளது போல் எழுதுங்கள்.


மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2026  க்கு பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE


தேர்வைப்பற்றி இன்னும் தெளிவாக வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE



Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

கானானியர் ஆவி

எது விபச்சாரம்? எது வேசித்தனம்?

சீரழிக்கப்பட்டவள்

வரன் தேடுபவர்களுக்கு..

அழுத்தம் வேண்டாம்