Posts

வேதாகமம் எழுதும் தேர்வு-2024

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…                 தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்    சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும்    மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள  வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும்  அதன்படி  கடந்த  2024-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள  ஏசாயா ,  எரேமியா   மற்றும் புலம்பல்  புத்தகங்களை  வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும்,  விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய  முதல்   மூன்று   பேருக்கு   முதல்   பரிசாக   நான்கு   கிராம்   தங்கமும் (4 grams).  இரண்டாம்   பரிசாக   மூன்று   கிராம்   தங்கமும்  (3 grams). ...

மகிமையிலே விசேஷம்

Image
    மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 15:41) சூரியனுடைய மகிமை வேறு, நட்சத்திரங்களுடைய மகிமை வேறு, சந்திரனுடைய மகிமை வேறு, இப்படி ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மகிமை உள்ளது. அது மாத்திரமல்ல நட்சத்திரங்களுக்கும் வேறு மகிமை இருந்தாலும், ஒவ்வொரு நட்சத்திற்கும் இடையே மகிமையிலே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. மகிமையிலே ஒரு நட்சத்திரம் பெரியதாகவும் ஒரு நட்சத்திரம் சிறியதாகவும் என்னப்படுகின்றது.    எப்படி மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வித்தியாசம் காணப்படுகின்றதோ, அதேபோல் ஆவிக்குரிய கிரியைகளிலும் ஒன்றுக்கொன்று விசேஷித்திருக்கின்றது. இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் இரட்சிக்கப்படாதவர்களுக்கும், ஜெபிக்கின்றவர்களுக்கும் ஜெபிக்காதவர்களுக்கும், ஊழியம் செய்கின்றவர்களுக்கும், ஊழியம் செய்யாதவர்களுக்கும் இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அப்படியே ஆவிக்குரிய கிரியைகளான ஆராதனை செய்தல், வேதவாசிப்பு, ஜெபிப்பது, கட்டுகளை உடைப்பது, மன்றாடி ஜெபிப்பது போன்றவற்றுக்கு இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன...

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
  நம்மை நேசிக்கின்ற பரலோக தேவன் ஒவ்வொரு நாளும் நம்முடன் பேசி புதுப்புது வாக்குத்தத்தங்களையும், அபிஷேகத்தினை கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கின்றார். ஒவ்வொரு புது நாட்களிளும் தேதி மட்டுமே மாறும். ஆனால், புது மாதம் வரும்போது தேதி மற்றும் மாதத்தின் பெயர் மாறும். அதே நேரத்தில் புது வருடம் என்றால் தேதி மற்றும் மாதத்தின் பெயர்,   வருடம் மாறும். இப்படி பெரிய பெரிய மாற்றங்கள் வரும்போது பெரிய பெரிய வாக்குத்தத்தங்களை கொடுத்து, பரலோகத்தின் பெரிய பெரிய ஆசீர்வாதங்களையும்   கொடுப்பார்.   சென்ற நவம்பர் மாதத்தினை முடித்து டிசம்பர் மாதத்திற்குள் வந்திருக்கின்றோம். 2024-ம் வருடத்தில் கடைசி மாதமாகும்.   இந்த நாட்களிலும் பரலோக தேவன் நமக்கு நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய   கர்த்தர்   உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக என்ற உபாகமம் 1:11 ம் வசனத்தினை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்.   இதன்படி ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தினை நமக்கு தந்து ஆசீர்வதிப்பாராக.   நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தே...