வேதாகமம் எழுதும் தேர்வு-2024




கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…     

         தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்  சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும்  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும் அதன்படி  கடந்த  2024-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா, எரேமியா மற்றும் புலம்பல் புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும்(4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). மூன்றாம் பரிசாக இரண்டு கிராம் தங்கமும் (2 grams), அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக  அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த மாவட்டத்திலிருந்து (District) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் 2024- ம் ஆண்டு ஜனவரி  மூன்றாம் தேதி  அறிவிக்கப்பட்டிருந்தது 

           சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் (12,000) மேற்பட்டோர்  பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாள்  2024 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி ஆகும். அதன்படி கடைசி தேதியான 31-12-2024 - க்குள் எழுதிய நோட்டை 64 பேர் நேரிலும், 151 பேர் போஸ்ட் மூலமாகவும்,  430 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 645 பேர் அனுப்பியுள்ளார்கள். அதில் 564 பேர் தமிழிலும், 81 பேர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள்.

         வந்து சேர்ந்த நோட்டுகள் அனைத்தையும் ஆட்களை நியமனம் செய்து, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டு எல்லாம் சரியாக எழுதியிருக்கின்றார்களா? என்று இரண்டு சுற்றுக்களாக சரிபார்க்கப்பட்டு, இந்த இரண்டு சுற்றிலும் வெற்றிப் பெற்றவர்கள் பம்பர் பரிசுக்கு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள் என்றும், ஒருவேளை இதில் அதிகமானோர் இருப்பின் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும்(4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). மூன்றாம் பரிசாக இரண்டு கிராம் தங்கமும் (2 grams)  வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்றில் அனைவரின் நோட்டுகளும்  எங்களால் சரிப்பார்க்கப்பட்டது.  44 பேர் இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல் சுற்றில் வெற்றிப்பெற்ற 44 பேரின் நோட்டுகளும் இரண்டாம் சுற்றில் மிக ஆழமாக சரிபார்க்கப்பட்டது. அதில் அதே 44 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதி சுற்றில் மூன்றுக்கும் அதிகமானோர் இருப்பதினால் முதல் மூன்று நபருக்கு மாத்திரமே பரிசுகள்  வழங்கப்பட வேண்டும். ஆதலால், மூன்று நபரை சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

    அதன்படி 18-08-2025 அன்று மாலை 8 மணி அளவில் பரிசுகளை பெறுபவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய    சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இறுதி சுற்றுக்கான கூட்டத்தினை ஆயத்தப்படுத்தியிருந்தோம். இக்கூட்டத்தில்  ஆலங்குளம் பகுதியை மையமாக வைத்து நண்பர்கள் தரிசன ஜெபக்குழு என்ற ஊழியத்தை செய்து வரும் சகோதரர் S.பொன்ராஜ் அவர்கள் முன்னிலையில் 44 பேரின் பெயர்களும் எழுதிய சீட்டுப் போடப்பட்டது. நன்றாக ஊக்கமாக ஜெபித்து, முதல் பரிசுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த Mrs. Latha Rajendran,( Qz1135, RvE504) அவர்களையும். இரண்டாம் பரிசுக்காக திருநெல்வேலி மாவட்டத்தினை சேர்ந்த Ms. T.Jeba(Qz5968, RvE346) அவர்களையும், மூன்றாம் பரிசுக்காக தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த  Mrs. J.Ragles sam(Qz3805, RvE359)  அவர்களையும்   தேர்ந்தெடுத்தார்கள்.




    கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  கோயம்புத்தூர்  மாவட்டத்தினை சேர்ந்த Ms. S.Angel Packiam  (Qz2647) அவர்கள்  ஐந்து முறை எழுதி அனுப்பியிருந்தார்கள். வேறு யாரும் இவ்வளவு முறை எழுதவில்லை. எனவே, அதிக முறை எழுதியதற்கான சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஐந்து முறை அனுப்பிய அவர்களுடைய நோட் எண்  E509, E510, E511, E512, E513,   ஆகும். கடந்த 2023 ம் ஆண்டும் அதிக முறை எழுதியதற்கான சிறப்பு பரிசினை இந்த சகோதரி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த மாவட்டத்திலிருந்து (District) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 114 பேரும், தூத்துக்குடியிலிருந்து 56 பேரும்,  சென்னையிலிருந்து 50 பேரும், இதர மாவட்டங்களிருந்து இதற்கு குறைவாகவே அனுப்பியிருந்தார்கள். ஆதலால்,  திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப்பியவர்கள் அதிகமாக இருப்பதனால் அவர்கள் அனைவரும்  ஆறுதல் பரிசுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

  பரிசினைப் பெற தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று அவர்களின் வீடுகளில் வைத்து ஜெபித்து பரிசினை வழங்கி வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் சொல்லுவது வழக்கம். கடந்தாண்டுகளிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. அதன்படி  2024 ம் வருடம் நடத்தப்பட்ட தேர்வில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசுகள் வழங்கப்பட்டன. முதலில் 23-09-2024 அன்று முதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த Mrs. Latha Rajendran,( Qz1135, RvE504)அவர்களின் வீட்டிற்கு சென்று, குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும், சான்றிதழும், வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் ஜெபத்துடன் வழங்கப்பட்டது.



     அதே நாளில் இரண்டாம் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தினை சேர்ந்த Ms. T.Jeba(Qz5968, RvE346)  அவர்களின் வீட்டிற்கு சென்று, குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும், சான்றிதழும், வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் ஜெபத்துடன் வழங்கப்பட்டது.இதை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியத்தினை செய்து வரும் சகோதர் T. வினோத் சாமுவேல் அவர்கள் வழங்கினார்கள். அவர்களின் குடும்பத்தினர்கள் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியுடன் பரிசினைப் பெற்றுக்கொண்டு சாட்சியையும் பதிவு செய்து தந்தார்கள்.

 மற்ற பரிசுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீக்கிரத்தில் வழங்கப்படும். ஊழியத்தினிமித்தம் கொஞ்சம் பயணங்கள் இருப்பதினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பரிசுகளை வழங்க பிரயாசப்படுகின்றோம். இதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். 

குலுக்கல் முறையில் சீட்டு போட்டு தேர்வு செய்யப்பட்டவரின் விபரம்:

முதல் பரிசு :

Mrs. Latha Rajendran,( Qz1135, RvE504)  Kanniyakumari (KK),  

இரண்டாம் பரிசு :

Ms. T.Jeba(Qz5968, RvE346) Tirunelveli (TI)

மூன்றாம் பரிசு :

Mrs. J.Ragles sam(Qz3805, RvE359), Thoothukudi (TK)

 

ஆறுதல் பரிசு பெற தகுதியுள்ளவர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

 

       ( குறிப்பு :    தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இந்த 2025 ம் வருடம் நடத்தப்படும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வில் அநேகர்  பதிவு செய்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். இதுவரை  78 பேர் எழுதி எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பிவிட்டார்கள். இதுவரை அனுப்பியவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.  நீங்கள் எழுதி முடித்திருந்தால் உடனே எங்களுக்கு கிடைக்குமாறு கொரியர் அல்லது போஸ்ட் மூலமாக அனுப்புங்கள். மேலும், வேதாகமம் எழுதும் தேர்வு-2025 பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள  லிங்கை கிளிக் செய்யுங்கள்.    

 கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு : நான்கு கிராம் தங்கம்(4 grams). இரண்டாம் பரிசு : மூன்று கிராம் தங்கம் (3 grams). மூன்றாம் பரிசு : இரண்டு கிராம் தங்கம் (2 grams). இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.)

எழுதிய நோட் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :  2025 ம் வருடம் டிசம்பர் 31 –ம் தேதி (31-12-2025)

வேதப்பகுதி: எசேக்கியல் முதல் மல்கியா வரை

மொத்த வசனங்கள் : 2680

மொத்த அதிகாரங்கள் : 127

மொத்த புத்தகங்கள் : 14

   தேர்வினை பற்றிய  விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். Click Here 

 

இந்த தேர்வு சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள 8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும். மேலும் எங்களது சேனலை (Channal) கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்.

Whats App Channel : CLICK HERE 

You Tube  : CLICK HERE

Telegram  : CLICK HERE







Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

எது விபச்சாரம்? எது வேசித்தனம்?

வரன் தேடுபவர்களுக்கு..

அழுத்தம் வேண்டாம்