வேதாகமம் எழுதும் தேர்வு-2024
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே… தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும் அதன்படி கடந்த 2024-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா , எரேமியா மற்றும் புலம்பல் புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும் (4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). ...