அழுத்தம் வேண்டாம்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும் . அழுத்தம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து ஆவலாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை யோபு 42:12-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. யோபு என்ற உத்தமனைக் குறித்து பரிசுத்த வேதத்தில் வாசித்திருப்போம். தேவனால் உத்தமன், சன்மார்க்கன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று சாட்சிப் பெற்றவன்.(யோபு 1:8,2:3) அவன் வாழ்க்கையில் பிசாசு சோதனைகளைக் கொண்டு வந்தான். ஏனென்றால் அவன் ஒருவிதமான அழுத்தத்திற்கு இடங்கொடுத்தான். அது என்ன என்பதனைக் குறித்து இந்தச் செய்தியில் கொஞ்சம் விரிவா...