மகிமையிலே விசேஷம்
மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 15:41) சூரியனுடைய மகிமை வேறு, நட்சத்திரங்களுடைய மகிமை வேறு, சந்திரனுடைய மகிமை வேறு, இப்படி ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மகிமை உள்ளது. அது மாத்திரமல்ல நட்சத்திரங்களுக்கும் வேறு மகிமை இருந்தாலும், ஒவ்வொரு நட்சத்திற்கும் இடையே மகிமையிலே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. மகிமையிலே ஒரு நட்சத்திரம் பெரியதாகவும் ஒரு நட்சத்திரம் சிறியதாகவும் என்னப்படுகின்றது.
எப்படி மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம்
வித்தியாசம் காணப்படுகின்றதோ, அதேபோல் ஆவிக்குரிய கிரியைகளிலும் ஒன்றுக்கொன்று விசேஷித்திருக்கின்றது.
இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் இரட்சிக்கப்படாதவர்களுக்கும், ஜெபிக்கின்றவர்களுக்கும்
ஜெபிக்காதவர்களுக்கும், ஊழியம் செய்கின்றவர்களுக்கும், ஊழியம் செய்யாதவர்களுக்கும்
இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அப்படியே ஆவிக்குரிய கிரியைகளான ஆராதனை செய்தல்,
வேதவாசிப்பு, ஜெபிப்பது, கட்டுகளை உடைப்பது, மன்றாடி ஜெபிப்பது போன்றவற்றுக்கு இடையே
வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்றுக்கொன்று விசேஷித்திருக்கின்றது.
மகிமையிலே
ஆவிக்குரிய கிரியைகளில் காணப்படும் விசேஷம் என்ன? ஆராதிப்பதா? ஜெபிப்பதா? வேதத்தை வாசிப்பதா?
இதில் எது விசேஷப்பட்டுள்ளது? பூமியிலே எது அற்புதங்களை நடப்பிக்கும்? பூமியில் எதற்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறித்து இந்தச் செய்தியில் விரிவாக தியானிக்கலாம்.
எப்படி மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம்
விசேஷித்து இருக்கின்றதோ அதேபோல் ஆவிக்குரிய கிரியைகளிலும் ஒன்றுக்கொன்று விசேஷித்திருக்கின்றது
என்று பார்த்தோம். தேவனுடைய பிள்ளைகள் ஜெபிக்கும் போது பரலோகத்தில் இருந்து ஒரு மகிமை
கடந்து வரும். அதேபோல் பரிசுத்த வேதத்தினை வாசிக்கும் போதும், ஆராதிக்கும் போதும் ஒரு
மகிமை கடந்து வரும். இப்படி ஒரு மகிமையை பொறுத்து ஒன்றுக்கொன்று விசேஷப்படுகின்றது.
ஆவிக்குரிய கிரியைகள் எல்லாமே சிறந்ததுதான்.
எல்லாம் நன்மையானதுதான். ஆனால், இப்படி வரும்
மகிமை பொறுத்து, எது சிறந்தது? எது மிகச் சிறந்தது?
எது மிக மிகச் சிறந்தது? என்று பிரிக்கப்பட்டுள்ளது. பரலோகத்தில் ஒன்று மிகச் சிறந்ததாக இருக்கும். பூமியிலே
மற்றொன்று மிகச் சிறந்ததாக இருக்கும். அதேபோல் பூமியிலும் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றார்
போல் ஒவ்வொன்றும் சிறந்ததாகவே இருக்கும். அதேபோல்
ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல. ஆனாலும், ஆவிக்குரிய
கிரியைகளில் மகிமையிலே காணப்படும் விசேஷத்தை அறிந்து கொள்வது நல்லது. ஏனென்றால், அது
சீக்கிரத்தில் விடுதலையும் நன்மைகளையும் ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும்.
ஆவிக்குரிய
கிரியைகளில் மகிமையில் காணப்படும் விசேஷம் என்ன என்பதை பற்றியும், எது பரலோகத்தில்
மிகச் சிறந்தது என்பதை பற்றியும், எது பூமியிலே மிகச் சிறந்தது என்பதை பற்றியும் தொடர்ச்சியாக
இந்த செய்தியில் தியானிக்கலாம்
ஆராதிப்பதினால்
வரும் மகிமை :
இது பரலோகத்தில் மிக மிக சிறந்த உயரிய மகிமை
ஆகும். பரலோகத்தில் ஆராதனை மட்டுமே நடக்கும். அங்கு ஜெபிப்பதோ, விசுவாசமோ, தீர்க்கதரிசனங்களோ
தரிசனமோ, சொப்பனமோ கிடையாது. அங்குள்ள தூதர்கள்,
பரிசுத்தவான்கள் சர்வவல்ல தேவனை ஆராதித்துக் கொண்டிருப்பார்கள். அதனால், இது பரலோகத்தில் மிக மிக விசேஷமானது. பரலோகத்தில் ஆராதித்தால் மட்டுமே கிரியைகள் நடக்கும்.
அங்கு ஆராதிக்காதவர்களால் இருக்க முடியாது.
சர்வவல்ல தேவனை நோக்கி ஆராதிக்க தெரிந்தவர்கள்
மட்டுமே அங்கு வசிக்க முடியும்.
பூமியிலும் சர்வவல்ல தேவனை ஆராதிக்கும்
போது, இந்த பரலோக மகிமை கடந்து வரும். ஆனால், மிகப் பெரிய கிரியைகளை நடப்பிக்க மாட்டாது.
பரலோக பிரசன்னத்தை கொண்டு வரும். அந்த பிரசன்னத்தில் பரலோக தூதர்கள் பரிசுத்தவான்கள்
வருவார்கள். ஆனால், அது மனிதருக்குள் எந்தவிதமான மாற்றத்தினையும் கொண்டு வராது. ஆராதிப்பதினால் வரும் மகிமை பரலோகத்தில் முதலிடத்தில்
உள்ளது. ஆனால், பூமியில் முதலிடத்தில் இல்லை.
வேதத்தினால்
வரும் மகிமை :
பூமியில்
மிகச்சிறந்த உயரிய மகிமை ஆகும். நாம் வாழ்கின்ற
இந்த பூமி வார்த்தையினால் உருவாக்கப்பட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் வார்த்தையாக
இருந்தார். (யோவான்1:1) பூமியில் ஜீவ வார்த்தையாக
வெளிப்பட்டார். வார்த்தைகளை அனுப்பி கிரியைகளை
நடப்பிக்கின்றார்.(சங்கீதம் 107:20) கர்த்தருடைய
வார்த்தை என்பது ஆவிக்குரிய போஜனமாகும். பரலோகப் பிரசன்னத்தை பூமியிலே நடப்பிக்க வார்த்தை
மிக முக்கியமானதாகும். அதனால், பூமியிலே பரிசுத்த வேதம் என்பது மிகவும் விசேஷமானது.
இந்த பூமியிலே ஆராதனை செய்வது பெரியதா? அல்லது வேதக்கிரியைகள்
பெரியதா? என்று கேட்டால் அதற்கான உறுதியான பதில் வேதக்கிரியைகளாகும். கவனிக்க இதில்
வேதக்கிரியைகள் என்பது வேதத்தை வாசிப்பது, தியானிப்பது, வேதத்தை மனப்பாடம் செய்வது,
வேதத்தை எழுதுவது ஆகும். இந்த பூமியில் வேதத்தின் கிரியைகளை செய்தால் மட்டுமே அற்புதங்கள்,
அதிசயங்கள் நடக்கும். வேதவசனங்கள் மனிதருக்குள் ஊடுருவிச் சென்று மாற்றத்தினை கொடுக்கும்.
மனிதர்களை தேவனுடைய பிள்ளைகளாக வேதவார்த்தைகள் ஜெநிப்பிக்கும்.
மேலும்
ஆராதனையோ, ஜெபமோ, கட்டுகளை உடைக்கின்ற ஜெபமோ எதுவாக இருந்தாலும் வேதவசனம் இல்லாமல்
நிறைவு பெறாது. அவற்றுள் வசனங்கள் உள்ளடங்கிய காணப்படும். ஆராதனை செய்கின்ற ஆராதனை வீரர்கள் கூட இந்த பூமியில்
விழுந்து போக வாய்புகள் மிக மிக அதிகம். ஆனால், வேதத்தினை மையப்படுத்துகின்றவர்கள்
விழுந்து போகாமல் நிலைநிற்பார்கள். ஆராதனையை
விட வேதத்தினால் அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கும். ஆதலால் தேவனுடைய பிள்ளைகள் இந்த
பூமியில் பரிசுத்த வேதத்தினை வாசிக்க, தியானிக்க, மனப்பாடம் செய்ய, எழுத தங்களை ஒப்புக்கொடுக்கும்
போது மிகப்பெரிய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வார்கள்.
தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த வேதவசனத்தை வாசித்து, எழுதி, தியானிக்க
வேண்டும். மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2019 ம்
வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. கர்த்தருடைய மகா பெரிய கிருபையினால் தொடர்ச்சியாக
ஆறாவது வருடம் நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தபடியே இந்த தேர்வில்
பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும், எத்தனை முறை
வேண்டுமென்றாலும், ஒரே குடும்பத்தில் உள்ள எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் கலந்துக்கொண்டு எழுதலாம். இதற்காக எந்த
விதமான கட்டணங்களும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம். கொடுக்கப்பட்டுள்ள
வேதப்பகுதியை பார்த்து Long Size Note –ல் பிழையில்லாமல், சொந்தக்கரத்தினால்
தெளிவாக எழுத வேண்டும். எழுதிய நோட்டை கடைசி தேதிக்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நீங்களும்
இந்த தேர்வில் கலந்துக் கொண்டு வேதவசனத்தை சொந்தக் கையினால் எழுதி பரலோக
தேவனுடைய ஆசீர்வாதத்தினையும் விடுதலையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் தேர்வு
எழுதுகின்றவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஊழியத்தின் மூலமாக பரிசுகள்
வழங்கப்படுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த
ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள்
வழங்கப்படும். முதல் பரிசு : நான்கு கிராம் தங்கம்(4
grams). இரண்டாம் பரிசு : மூன்று கிராம் தங்கம் (3 grams). மூன்றாம் பரிசு :
இரண்டு கிராம் தங்கம் (2 grams). ஆறுதல் பரிசும் உண்டு. மேலும்
கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.
Comments
Post a Comment