பாவச்சோதனை பாவமாகுமா?

இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பாவச் சோதனை வந்தாலே மிகப் பெரிய பாவம் செய்துவிட்டதாக எண்ணி, குற்ற மனசாட்சிக்கு இடம் கொடுத்து, சர்வ வல்ல தேவனை விட்டு விலகி விடுவேனோ என்று அங்கலாய்ப்பவர்கள் அதிகமானவர் உள்ளார்கள். உண்மையில் பாவச் சோதனை பாவமாகுமா? இல்லை என்றால் எது பாவம்? பாவச் சோதனை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் ? போன்ற கேள்விகளுக் கான பதிலைத் இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிப்போம். பரலோக பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று சாட்சிக் கொடுத்தார். இந்த சாட்சியைக் கேட்ட பிசாசு அவரை நான் சோதித்துப் பார்க்க வேண்டுமென்று பரலோக தேவனிடத்தில் உத்தரவை கேட்டான். பரலோக தேவனும் முடிந்தால் குற்றம் கண்டுபிடி என்று அனுமதி கொடுத்தார். இதேபோல்தான் பழைய ஏற்பாட்டுக் கால பரிசுத்தவானாகிய யோபையும் பிசாசு சோதித்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக வனாந்திரத்திற்கு கொண்டு போகப்பட்டார். பிசாசின் சோதனைக்கு ஆயத்தமாக நாற்பது நாட்கள் இரவும், பகலும...