பாவச்சோதனை பாவமாகுமா?
இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பாவச் சோதனை வந்தாலே மிகப் பெரிய பாவம் செய்துவிட்டதாக எண்ணி, குற்ற மனசாட்சிக்கு இடம் கொடுத்து, சர்வ வல்ல தேவனை விட்டு விலகி விடுவேனோ என்று அங்கலாய்ப்பவர்கள் அதிகமானவர் உள்ளார்கள். உண்மையில் பாவச் சோதனை பாவமாகுமா? இல்லை என்றால் எது பாவம்? பாவச் சோதனை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் ? போன்ற கேள்விகளுக்கான பதிலைத் இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிப்போம்.
பரலோக பிதாவாகிய தேவன் குமாரனாகிய
இயேசு கிறிஸ்துவைக் குறித்து இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்
என்று சாட்சிக் கொடுத்தார். இந்த சாட்சியைக் கேட்ட பிசாசு அவரை நான் சோதித்துப் பார்க்க
வேண்டுமென்று பரலோக தேவனிடத்தில் உத்தரவை கேட்டான். பரலோக தேவனும் முடிந்தால் குற்றம்
கண்டுபிடி என்று அனுமதி கொடுத்தார். இதேபோல்தான் பழைய ஏற்பாட்டுக் கால பரிசுத்தவானாகிய
யோபையும் பிசாசு சோதித்தான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்
பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக வனாந்திரத்திற்கு கொண்டு போகப்பட்டார். பிசாசின் சோதனைக்கு
ஆயத்தமாக
நாற்பது நாட்கள் இரவும், பகலும் உபவாசம்
இருந்தார். அவருக்கு பசி உண்டாயிற்று. அப்பொழுது, பிசாசு அவரிடத்தில் வந்து நீர் தேவனுடைய
குமாரனேயானால் இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். இந்த வார்த்தைக்கு
கீழ்ப்படிந்து கல்லுகளை அப்பங்களாக மாற்றினால், சோதனையில் பிசாசு ஜெயித்திடுவான். ஆனால்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிசாசின் பேச்சை கொஞ்சம் கூட கேட்கவில்லை. மாறாக, மனுஷன்
அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து வருகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும்
பிழைப்பான் என்ற எதிர்வார்த்தைகளைப் பேசினார். சோதனையில் ஜெயமெடுத்தார்.
இதில்தான் நமக்கு தேவையான ஆவிக்குரிய
இரகசியங்கள் மறைந்துள்ளது. சோதனை நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் பிசாசு
பேசுகின்றான். அவர் அவனை பார்க்கின்றார்; அவனுடைய சத்தத்தைக் கேட்கின்றார்; அவன் சொன்ன
காரியத்தை ஆராய்கின்றார்;
அதை யோசிக்கின்றார் இது பாவம் கிடையாது.
கண்கள், காதுகள்,சிந்தனைக்கு வந்த சோதனையாகும்.
இதற்குப் பின்பு என்ன செய்கின்றார்
என்பதனை பொறுத்துதான் பாவமா? பரிசுத்தமாய் என்பது தீர்மானிக்கப்படும். பிசாசின் பேச்சைக்
கேட்டு அதற்கு கீழ்படிந்து, கல்லை அப்பமாக மாற்றினால் அது பாவம். ஆனால், அதற்கு கீழ்ப்படியாமல்
எதிர்த்து நின்றால் அது பரிசுத்தம். அவர் எதிர்த்து நின்றார். எனவே, சோதனையில் ஜெயமெடுத்தார்.
இதுதான் சோதனைக்கும், பாவத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
அதேபோல் நம் சிந்தனையில் பிசாசு பேசுவான். எதிர்பாலினரை இச்சையோடு
பார்க்கத் தூண்டுவான். பாவம் செய் என்று யோசிக்க வைப்பான். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக
பாவம் செய்யத் தூண்டுவான். இது பாவமல்ல சோதனை. இப்படி பிசாசு பேசும் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து
அவன் சொன்னதை செய்தால் தான் பாவம் .அதற்கு கீழ்படியாமல் எதிர்த்து நின்றால் பரிசுத்தமாகும்.
எனவே, தேவனுடைய பிள்ளைகள் பாவச் சோதனை வந்தாலே பாவம் செய்வதுவிட்டதாக அங்கலாய்க்க
வேண்டாம் .குற்றமனசாட்சிக்கும் இடம் கொடுக்க வேண்டாம் .சோதனை நேரத்தில் நின்று ஜெயமெடுங்கள்
பிசாசினை ஜெயிப்பீர்கள்.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை
திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை
உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின்
ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்
எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள்
Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல்
அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள
E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள்.
Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment