உபத்திரவத்தினை மறக்கச் செய்யும் சந்தோஷம்
கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவ காலம் வந்திருக்கும்போது, பல்வேறு வேதனைகளினால் அவள் துக்கமடைகின்றாள். சரீரத்தின் வலி ஒரு பக்கம். பிள்ளை எப்படி இருக்குமோ? உயிரோடு பிறக்குமா? என்ற கவலை ஒரு பக்கம். தான் பிரசவ வேதனையில் உயிரோடு பிழைப்பேனா? எனக்கு ஜீவன் உண்டா? என்ற சோர்வு ஒரு பக்கம் என, பல்வேறு வகையில் உபத்திரவம் காணப்படும். ஆனால், ஒரு பிள்ளையைப் பெற்றவுடன் ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்து விட்டான் என்ற சந்தோஷத்தினால், அப்புறம் கஷ்டத்தை நினைக்க மாட்டாள். பிள்ளையை பார்த்த சந்தோஷம் உபத்திரவத்தினை மறக்கச் செய்யும். கஷ்டங்கள், வலி வேதனைகளைத் தாங்கச் செய்யும் (யோவான் 16:21) . கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட, உலகத்தின் மக்கள் இரட்சிக்கப்பட போகின்றார்கள், நான் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகின்றேன், என்னை ராஜாதி ராஜாவாக, பிதாவாகிய தேவன் அபிஷேகம் பண்ணியுள்ளார் என்று, தனக்கு முன் வைத்திருந்த பரமசந்தோஷத்தின் பொருட்ட...