உபத்திரவத்தினை மறக்கச் செய்யும் சந்தோஷம்
கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவ காலம் வந்திருக்கும்போது, பல்வேறு வேதனைகளினால் அவள் துக்கமடைகின்றாள். சரீரத்தின் வலி ஒரு பக்கம். பிள்ளை எப்படி இருக்குமோ? உயிரோடு பிறக்குமா? என்ற கவலை ஒரு பக்கம். தான் பிரசவ வேதனையில் உயிரோடு பிழைப்பேனா? எனக்கு ஜீவன் உண்டா? என்ற சோர்வு ஒரு பக்கம் என, பல்வேறு வகையில் உபத்திரவம் காணப்படும். ஆனால், ஒரு பிள்ளையைப் பெற்றவுடன் ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்து விட்டான் என்ற சந்தோஷத்தினால், அப்புறம் கஷ்டத்தை நினைக்க மாட்டாள். பிள்ளையை பார்த்த சந்தோஷம் உபத்திரவத்தினை மறக்கச் செய்யும். கஷ்டங்கள், வலி வேதனைகளைத் தாங்கச் செய்யும் (யோவான் 16:21) .
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட, உலகத்தின் மக்கள் இரட்சிக்கப்பட போகின்றார்கள், நான் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகின்றேன், என்னை ராஜாதி ராஜாவாக, பிதாவாகிய தேவன் அபிஷேகம் பண்ணியுள்ளார் என்று, தனக்கு முன் வைத்திருந்த பரமசந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையை சகித்து, பாடுகளை கடந்து, தேவனுடைய சிங்காசனத்தில், வலதுபாரிசத்தில் வீற்றிருக்கின்றார்( எபிரேயர் 12 : 2).
நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய், தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று, பரிசுத்த வேதவார்த்தை கூறுகின்றது (அப்போஸ்தலர்14 :22). உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும், திடன்கொள்ளுங்கள் . நான் உலகத்தை ஜெயித்தேன் என்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறினார் (யோவான் 16 :33 ). எனவே, கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையில், பல்வேறு உபத்திரவங்கள், போராட்டங்கள், கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்கள், நெருக்கங்கள் வரும். அந்த நேரத்தில் சோர்ந்து போகாமல், அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த லேசான நம்முடைய உபத்திரவங்கள் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்கும் என்று, நம்பிக்கையோடு இருந்தால், அதை எளிதாக சகிக்கலாம். உபத்திரவத்தினை எண்ணாமல், உபத்திரவத்திற்கு பின்பாக வரும் உயர்வைப் பார்த்தால், உபத்திரவத்தினை எளிதாக சகித்து ஜெயம் எடுக்கலாம்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! கிறிஸ்தவ வாழ்க்கையில் வரும் உபத்திரவத்தினை பார்க்காமல், உபத்திரவத்திற்கு பின்பு வரும் உயர்வை பாருங்கள். உபத்திரவத்தினை மிக எளிதாக ஜெயம் எடுப்பீர்கள். பரம சந்தோஷம் பூமியில் வரும். உபத்திரவத்தினை எளிதாக மறக்கச் செய்யும்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம்.
இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள்.
அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment