பிலேயாமின் வீழ்ச்சி
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து அநேகர் தீர்க்கதரிசனமாக உரைத்தார்கள். அதில் பிலேயாம் என்ற தீர்க்கதரிசியும் ஒருவன். ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து தீர்க்கதரிசனமாக உரைத்தான். (எண்ணாகமம் 24:17). பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் தந்தாலும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது என்று சொல்லி தேவனுக்குள்ளாக மிக வைராக்கியமாக இருந்தான்.( எண்ணாகமம் 22:18) நீதிமானைப் போல் மரிக்க வேண்டும் என்றும், அவர்களின் முடிவைப் போல் அவனுடைய முடிவும் இருக்க வேண்டும் என்றும் வாயினால் அறிக்கை செய்தான்.( எண்ணாகமம் 23:10) அதுதான் அவனுடைய ஆசையாகவும் இருந்தது. கடைசியில் பட்டயத்தினால் கொலைச் செய்யப்பட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அவனைக் கொலை செய்தார்கள். துன்மார்க்கனைப்போல் மரித்தான் (எண்ணாகமம் 31:8) ஒரு தீர்க்கதரிசியை இஸ்ரவேல் மக்கள் ஏ...