தேவனுடைய விருப்பம் எது?

ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேச வழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியில் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களை சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய் புறப்பட்டார்கள். இந்த வசனத்தை பரிசுத்த வேதத்தில் யாத்திராகமம் புத்தகம் 13 ஆம் அதிகாரம் 17 மற்றும் 18 ஆம் வசனங்களில் வாசிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலையாகி கானானுக்கு நேராகச் சென்றார்கள். தேவனுடைய மனிதனாகிய மோசே அவர்களை வழிநடத்தினான். அப்பொழுதுதான் பரலோக தேவன் ஜனங்கள் யுத்தத்தினை கண்டால் மனமடிந்து விடுவார்கள் என்று சொல்லி அவர்களை வேறு வழியாக நடத்தினார். அதைத்தான் இந்த வசனத்தில் வாசித்தோம். இதை கொஞ்சம் ஆழமாக தியானித்தால் பல ஆவிக்குரிய இரகசியங்கள் வெளிப்படும். தீர்க்கதரிசன வார்த்தைகளும் நமக்கு நேராக கடந்து வரும். இந்தச் செய்தியில் இந்த வசனங்களை பல வழிகளில், பல தலைப்புகளில் ...