மெய்யாகவே விடுதலையாவீர்கள்

யோவான் 8:36-ல் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று பரிசுத்த வேதவசனம் சொல்லுகின்றது. இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு இது ஒரு வாக்குத்தத்த வசனம் ஆகும். உண்மையிலே இது ஒரு தீர்க்கதரிசன வாக்குத்தத்தம். இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்க்கையில், உங்கள் தொழிலில், வருமானத்தில் உள்ள கட்டுகள் அவிழ்க்கப்படுவதையும் ஒரு விடுதலையை பெற்றுக்கொள்ளுவதையும் உங்களால் உணர முடியும். இது பொய்யான விடுதலை அல்ல ஒரு மெய்யான விடுதலை ஆகும். இதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு தரப்போகின்றார் ஆமென் அல்லேலூயா. எப்பொழுது இந்த விடுதலை கிடைக்கும்? இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? எப்படி விடுதலை பெற்றுக் கொள்ளலாம்? என்ற யோசனை உங்களுக்குள் எழும்பும். பரிசுத்த வேதத்தில் ஒரு மனிதன் தன்னுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்றான். தேவனே அந்த விடுதலையைக் கொடுத்தார். அவன் யார்? எப்படி பெற்றுக்கொண்டான்? என்பதனை தொடர்ச்சியாக பார்க்கலாம். ...