மெய்யாகவே விடுதலையாவீர்கள்
யோவான் 8:36-ல் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்
என்று பரிசுத்த வேதவசனம் சொல்லுகின்றது. இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு இது
ஒரு வாக்குத்தத்த வசனம் ஆகும். உண்மையிலே இது ஒரு
தீர்க்கதரிசன வாக்குத்தத்தம். இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்க்கையில், உங்கள்
தொழிலில், வருமானத்தில் உள்ள கட்டுகள் அவிழ்க்கப்படுவதையும் ஒரு விடுதலையை பெற்றுக்கொள்ளுவதையும்
உங்களால் உணர முடியும். இது பொய்யான விடுதலை அல்ல ஒரு மெய்யான விடுதலை ஆகும். இதை கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து உங்களுக்கு தரப்போகின்றார் ஆமென் அல்லேலூயா.
எப்பொழுது இந்த விடுதலை கிடைக்கும்?
இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? எப்படி விடுதலை பெற்றுக் கொள்ளலாம்? என்ற யோசனை
உங்களுக்குள் எழும்பும். பரிசுத்த வேதத்தில்
ஒரு மனிதன் தன்னுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்றான். தேவனே அந்த விடுதலையைக்
கொடுத்தார். அவன் யார்? எப்படி பெற்றுக்கொண்டான்?
என்பதனை தொடர்ச்சியாக பார்க்கலாம்.
யோபு 42-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டுதல் செய்த போது கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றையும் பார்க்கிலும் இரண்டத்தனையாய் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார் என்று வாசிக்கின்றோம். சிறையிருப்புக்கு முன்பாக யோபுவுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளும் இருந்தன (யோபு 1:3). பரலோக தேவன் ஒரு விடுதலையை கொடுத்து சிறையிருப்பை மாற்றின பின்பு பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளுமான இரட்டிப்பான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டான்.
உலக வாழ்க்கையில் சட்டத்திற்கு புறம்பாக குற்றம் செய்து, சிறைக்குச் சென்று விடுதலையாகும் போது, கையில் ஒன்றுமே இருக்காது. இருக்கின்ற வீடு, ஆஸ்திகள், அந்தஸ்துகளை இழக்க நேரிடலாம். ஆனால், ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறையிருப்புக்கு சென்று தேவனால் ஒரு மெய்யான விடுதலை பெறும் போது, எல்லாம் இரட்டிப்பாக கிடைக்கும். யோபுக்கு அப்படித்தான் கிடைத்தது. உங்களுக்கும் அப்படித்தான் கிடைக்கப் போகின்றது. நீங்கள் மெய்யான விடுதலையை பெற்றுக் கொள்ளும் போது இரட்டிப்பான நன்மை உங்களுக்கு கிடைக்கும்.
யோபு சிறையிருப்புக்குள் ஏன் சென்றான்? எப்படி அவனுக்கு அதிலிருந்து எப்படிவிடுதலை கிடைத்தது? கொஞ்சம் விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம்.
ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் தான் யோபு. கிழக்கத்திய புத்திரர் எல்லாரிலும் பெரியவனாக இருந்தான். திரளான பணிவிடைக்காரர்கள் அவனுக்கு இருந்தார்கள். உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகின்றவன் என்று பரலோக தேவனால் சாட்சி பெற்றவன். பரலோக ஆசீர்வாதம் அவன் மேலும், அவன் வீட்டின் மேலும் இருந்தது. முகாந்திரம் இல்லாமல் அவனை சோதித்த பிசாசு, அவனுக்குள் இருந்த எல்லாவற்றையும் பிடுங்கி அவனை சிறையிருப்புக்குள் கொண்டு சென்றான். தேவனல்ல பிசாசே இதை செய்தான். நம்முடைய வாழ்க்கையில் சிறையிருப்பு, அடிமைத்தனத்தையும் பிசாசே கொண்டு வருகின்றான். மறுபடியும் சொல்லுகின்றேன் தேவன் அல்ல பிசாசே அதை செய்கின்றான்.
உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை கொடிய
பருக்களால் பாதிக்கப்பட்ட வாதிக்கப்பட்ட யோபு
சாம்பலில் உட்கார்ந்து ஒரு ஓட்டினால் சுரண்டிக் கொண்டிருந்தான். அதைக் கேள்விப்பட்ட
யோபுவின் சிநேகிதர்கள் மூன்று பேர் அவனை பார்க்கவும், ஆறுதல் சொல்லவும் வந்தார்கள்.
அவனுக்காக அழுது புலம்பினார்கள், பரிதவித்தார்கள். ஏன் இந்த சிறையிருப்பு வந்தது என்று அவர்களில் யாருக்கும்
தெரியாது. யோபுவுக்கு கூட தெரியாது. ”நான்
நீதிமான் தேவன் என்னை வாதித்தார்” என்று யோபு புலம்புகின்றான். ”இல்லை… தேவன் நீதிபரர்,
நீர்தான் ஏதோ பாவம் செய்துவிட்டீர், அதனால் தான் இந்த தண்டனை” என்று யோபுவின் நண்பர்கள்
குற்றச்சாட்டினார்கள். நான் அல்ல தேவன் என்றும், தேவனல்ல நீதான் என்றும் ஒருவரை ஒருவர்
மாறி மாறி குற்றம் சாட்டினார்கள். பெரிய உரையாடலே அவர்களுக்குள் நடந்தது.
ஒரு கட்டத்தில் தேவன் யோபுவோடு பேசி அவன் மதியீனத்தை உணர்த்தினார். நான் அறியாததை அலப்பினேன் என்று அறிக்கை செய்தான். அப்பொழுதுதான் யோபுவை பார்த்து உன்னை குற்றம் சாட்டின சினேகிதர்களுக்காக விண்ணப்பம் பண்ணு என்று ஆலோசனை சொன்னார். முதலில் யோபு தேவனோடு ஒப்புரவாகின்றான். பின்பு, தன்னை குற்றம்சாட்டின சிநேகிதர்களுக்காக வேண்டுதல் செய்தான். யோபுவின் சிறையிருப்பை மாற்றினார். யோபு இரட்டிப்பான மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டான்.
இந்த நாளிலும் தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பிசாசு சிறையிருப்பையும், அடிமைத்தனத்தையும் கொண்டு வந்திருப்பான்.
இந்த வெளிப்பாடு தெரியாமல், தேவன் கொண்டு வந்தார் என்றும், நீ பெரிய பாவி என்றும்,
அதனால்தான் இந்தப் பாடு என்றும், ஆவிக்குரிய நண்பர்கள், ஆவிக்குரிய விசுவாசிகள் குற்றம்
சாட்டுவார்கள். அவர்கள் வெளிப்பாடு தெரியாமல் பேசுகின்றவர்கள். அப்படி பேசுகின்றவர்களுக்காக விண்ணப்பம் பண்ணும்
போது, நம்மைக்குறித்து தேவன் வைத்திருக்கும் திட்டத்தினை தெரியாமல் குற்றம் சாட்டுகின்றவர்களுக்காக
விண்ணப்பம் பண்ணும் போது, பரலோக தேவன் சிறையிருப்பை மாற்றுவார். இழந்து போன நன்மைகளையும்
திரும்பத் தந்து ஆசீர்வதிப்பார். இரட்டிப்பான நன்மையையும், விடுதலையையும் ஆசீர்வாதத்தையும்
திரும்பவும் பெற்றுக் கொள்வீர்கள் ஆமென்.
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment