Posts

Showing posts from November, 2023

Registration now

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…           கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்… உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக 2019 ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் வேதாகம தேர்வுகள் நடத்தப்படுகின்றது. தேவனுடைய பிள்ளைகள் வேதத்தை நேசித்து,  வேதவசனத்தை வாசித்து, சொந்தக்கரங்களால் எழுதி, தியானிக்க வேண்டும் மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன்  நோக்கமாகும். எந்தவிதமான கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இத்தேர்வுகளில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும் எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் இதில் கலந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும். நீங்களும் இந்த தேர்வில் கலந்துக்கொள்ளலாம். ஆம் இதை வாசிக்கின்ற உங்களையும் இத்தேர்வில் கலந்துக்கொள்ள நான் அன்புடன் அழைக்கின்றேன். கடந்த வருடங்களில் பதிவு செய...