பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கின்றது (யோவான் 8:36). இன்றைய நாட்களில் பல்வேறு பாவங்களுக்கும், சாபங்களுக்கும் அநேக தேவனுடைய பிள்ளைகள் அடிமைகளாகவே உள்ளார்கள். இந்த உலகத்தில் வேசித்தனம், விபச்சாரம், காமவிகாரம், மதுபானம், புகைப்பிடித்தல், ஆபாச படங்களை பார்ப்பது, சினிமா பார்ப்பது, இச்சையான பார்வை, சுயபுணர்ச்சி, கள்ளக்காதல், ஆபாச சாட்டிங், போஜனபிரியராக இருப்பது, வாகனங்களை வேகமாக ஓட்டுதல் போன்ற பல அடிமைத்தனத்தின் பாவங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பாவங்களில் எளிதாக சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால், அவற்றினை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றார்கள். எவ்வளவு போராடியும் எவ்வளவு ஜெபித்தும் அவர்களால் கொஞ்சம் கூட வெளியே வர முடியாமல் இருக்கின்றார்கள். பாவங்களில் சிக்கி அடிமைத்தனத்தின் கட்டுகளில் இருப்பவர்கள் எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதை குறித்து இந்தச் செய்தியில் வ...