பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே
விடுதலையாவீர்கள் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கின்றது (யோவான் 8:36). இன்றைய நாட்களில்
பல்வேறு பாவங்களுக்கும், சாபங்களுக்கும் அநேக தேவனுடைய பிள்ளைகள் அடிமைகளாகவே உள்ளார்கள்.
இந்த உலகத்தில் வேசித்தனம், விபச்சாரம், காமவிகாரம், மதுபானம், புகைப்பிடித்தல், ஆபாச படங்களை பார்ப்பது, சினிமா பார்ப்பது, இச்சையான
பார்வை, சுயபுணர்ச்சி, கள்ளக்காதல், ஆபாச சாட்டிங், போஜனபிரியராக இருப்பது, வாகனங்களை
வேகமாக ஓட்டுதல் போன்ற பல அடிமைத்தனத்தின் பாவங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பாவங்களில்
எளிதாக சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால், அவற்றினை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றார்கள்.
எவ்வளவு போராடியும் எவ்வளவு ஜெபித்தும் அவர்களால் கொஞ்சம் கூட வெளியே வர முடியாமல்
இருக்கின்றார்கள். பாவங்களில் சிக்கி அடிமைத்தனத்தின் கட்டுகளில் இருப்பவர்கள் எப்படி
அதிலிருந்து வெளியே வருவது என்பதை குறித்து இந்தச் செய்தியில் விரிவாக தியானிக்கலாம்.
ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.
ஒருவன்
அடிமைத்தனத்தின் கட்டுகளில் தொடர்ந்து சிக்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும்
மூன்று மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. அது என்ன என்பதனை தியானித்து, அதற்காக தேவசமூகத்தில்
அமர்ந்திருந்து ஜெபித்தாலே போதும். ஓரளவு அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர முடியும்.
சரி அந்த மிக முக்கியமான காரணங்கள் என்னென்ன கொஞ்சம் விரிவாக தியானிக்கலாம்.
மற்றவர்களிடமிருந்து
கற்றுக் கொள்வது :
நமக்குத்
தெரியாத எந்த ஒன்றையும் மற்றவர்கள் யாராவது சொல்லித் தரும்போது, அவர்களிடமிருந்து கற்றுக்
கொள்கின்றோம். பூமியில் பிறக்கும் போது நமக்கு பாவங்களை குறித்தும், அவற்றினை எப்படி
செய்ய வேண்டும் போன்ற எந்த ஒன்றும் கொஞ்சம் கூட தெரியாது. எந்த ஒரு பாவத்தினையும் யாரோ ஒருவர் கற்றுத் தந்திருப்பார்கள் அல்லது யாரையோ
பார்த்து கற்றுக் கொண்டிருப்போம். கற்றுக்கொண்டதற்காகவும்
கற்றுக் கொடுத்தவர்களுக்காகவும் தேவசமூகத்தில்
ஜெபிக்க வேண்டும். கற்றுக்கொண்டதற்காக பாவ அறிக்கை செய்து ஜெபிக்க வேண்டும்.
கற்றுக் கொடுத்தவர்களை மன்னித்தும் ஆசீர்வதித்தும் ஜெபிக்க வேண்டும், அவர்களது குடும்பங்களையும்
சந்ததிகளையும் மன்னித்து ஜெபிக்க வேண்டும். இப்படி ஜெபிக்கும் போது கற்று தந்தவர்களுக்கும்
கற்று கொண்டவர்களுக்கும் இடையே உள்ள பினைப்புகள் உடைக்கப்படும். அதனால் எளிதாக அந்த அடிமைத்தனத்தின் கட்டுகளிலிருந்து விடுதலை பெறலாம்.
மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுப்பது :
நாம்
கற்றுக்கொண்ட ஆவிக்குரிய காரியங்களையும், பரிசுத்த வேத வசனத்தின் இரகசியங்களையும் மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பரலோக தேவன் விரும்புகின்றார். அதேபோல் பிசாசும் கற்றுக் கொண்ட பாவக் காரியங்களை
மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றான். மற்றவர்களிடம் இருந்து
கற்றுக் கொண்ட பாவக்காரியங்களை ஒருவன் திரும்பத் திரும்ப செய்யும்போது அதற்கு அடிமையாகின்றான்.
பின்பு அதே பாவத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து செய்யும் படி கட்டாயப்படுத்துகின்றான். இப்படி தானும்
பாவத்தினை செய்து மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதினால் பாவ அடிமைத்தனத்தின் கட்டுகளில்
அதிகமாக சிக்கிக் கொள்கின்றான்.
எவ்வளவு அதிகமான பேருக்கு கற்றுக் கொடுக்கின்றானோ
அவ்வளவு அதிகமாக பாவக்கட்டுகளில் சிக்கிக் கொள்கின்றான். இதை தேவசமூகத்தில் அறிக்கை
செய்து, எத்தனை நபர்களுக்கு கற்றுக் கொடுத்தோம் என்பதையும் நாவினால் அறிக்கை செய்யும்போது,
இந்த கட்டுக்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெறலாம். மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்ததையும்,
கற்றுக் கொண்ட பாவக்காரியங்களையும், தேவ சமூகத்தில் அறிக்கை செய்யும் போது நம்முடைய அடிமைத்தனம்
மாறும்.
திரும்பத்
திரும்ப செய்வது :
பாவ
அடிமைத்தனத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்
பாவங்களை திரும்ப திரும்ப செய்வது ஆகும். பாவத்தினை
கற்றுக்கொண்ட மனிதன் அதை திரும்ப திரும்ப செய்கின்றான். அவ்வாறு செய்வதினால் அவனுடைய
அடிமைத்தனத்தின் கட்டுகள் இன்னும் அதிகமாகி சங்கிலிகளைப்போல் கட்டப்படுகின்றன. இதனால்
பாவத்தின் ஆழத்திற்குள் சென்று வெளியே வரமுடியாமல் தவிக்கின்றார்கள். திரும்பத்
திரும்ப செய்த பாவ பழக்கத்தினை தேவசமூகத்தில் அறிக்கை செய்து ஜெபிக்க வேண்டும். எத்தனை
முறை செய்கின்றோமோ அத்தனை முறையும் அறிக்கை செய்யவேண்டும். அப்பொழுது அடிமைத்தனத்தின்
கட்டுகளில் இருந்து விடுதலை பெறலாம்.
மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்ததையும், மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதையும், திரும்பத் திரும்ப செய்கின்ற பாவங்களையும் தேவசமூகத்தில் அறிக்கை செய்து ஜெபிக்கும்போது பாவத்தின் கட்டுகளிலிருந்து எளிமையாக விடுதலை பெறலாம்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE
Comments
Post a Comment