தீர்க்கதரிசன வாக்குத்தத்தம்

ஒரு நாளின் முதல் பகுதியோ, ஒரு மாதத்தின் முதல் பகுதியோ அல்லது ஒரு வருடத்தின் முதல் பகுதியோ தேவசமூகத்திற்கு செல்லும் போது, அந்த முழு நாட்களுக்கான பரலோக தேவனுடைய ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன், தேவ சமூகத்தில் சென்று ஜெபிக்கும் போது, அந்தக் காரியத்தினை குறித்த ஆலோசனைகளை பரலோக தேவன் கொடுப்பார். இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காரியம் ஒன்று உள்ளது. முதற்பகுதி தேவசமூகத்திற்குள் சென்றால்தான், தேவஆலோசனைகள் கிடைக்கும். மாறாக காரியத்தை நாமே தொடங்கி, நாமே செய்துவிட்டு, பிரச்சனைகள் என்று வந்தவுடன் தேவ ஆலோசனைகளை பெற நினைப்பது அந்த அளவுக்கு ஆசீர்வாதமாக இருக்காது. ஏனென்றால், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணு என்று நீதிமொழிகள் 3:9 கூறுகின்றது. ஒரு நாளில் முதல் நேரம், மாதத்தின் முதல் நேரம், வருடத்தின் முதல் நேரம் தேவனுக்கு கொடுப்பது அவரை கனம் பண்ணுகின்றோம் என்று அர்த்தம். இந்த வருடத்தின் புதிய மாதத...