தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

நம்மை நேசிக்கின்ற பரலோக தேவன் ஒவ்வொரு நாளும் நம்முடன் பேசி புதுப்புது வாக்குத்தத்தங்களையும், அபிஷேகத்தினை கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கின்றார். ஒவ்வொரு புது நாட்களிளும் தேதி மட்டுமே மாறும். ஆனால், புது மாதம் வரும்போது தேதி மற்றும் மாதத்தின் பெயர் மாறும். அதே நேரத்தில் புது வருடம் என்றால் தேதி மற்றும் மாதத்தின் பெயர், வருடம் மாறும். இப்படி பெரிய பெரிய மாற்றங்கள் வரும்போது பெரிய பெரிய வாக்குத்தத்தங்களை கொடுத்து, பரலோகத்தின் பெரிய பெரிய ஆசீர்வாதங்களையும் கொடுப்பார். சென்ற நவம்பர் மாதத்தினை முடித்து டிசம்பர் மாதத்திற்குள் வந்திருக்கின்றோம். 2024-ம் வருடத்தில் கடைசி மாதமாகும். இந்த நாட்களிலும் பரலோக தேவன் நமக்கு நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக என்ற உபாகமம் 1:11 ம் வசனத்தினை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார். இதன்படி ஆயிரம் மடங்கு ஆசீர்வாதத்தினை நமக்கு தந்து ஆசீர்வதிப்பாராக. நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தே...