Posts

Showing posts from January, 2025

மகிமையிலே விசேஷம்

Image
    மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 15:41) சூரியனுடைய மகிமை வேறு, நட்சத்திரங்களுடைய மகிமை வேறு, சந்திரனுடைய மகிமை வேறு, இப்படி ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மகிமை உள்ளது. அது மாத்திரமல்ல நட்சத்திரங்களுக்கும் வேறு மகிமை இருந்தாலும், ஒவ்வொரு நட்சத்திற்கும் இடையே மகிமையிலே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. மகிமையிலே ஒரு நட்சத்திரம் பெரியதாகவும் ஒரு நட்சத்திரம் சிறியதாகவும் என்னப்படுகின்றது.    எப்படி மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வித்தியாசம் காணப்படுகின்றதோ, அதேபோல் ஆவிக்குரிய கிரியைகளிலும் ஒன்றுக்கொன்று விசேஷித்திருக்கின்றது. இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் இரட்சிக்கப்படாதவர்களுக்கும், ஜெபிக்கின்றவர்களுக்கும் ஜெபிக்காதவர்களுக்கும், ஊழியம் செய்கின்றவர்களுக்கும், ஊழியம் செய்யாதவர்களுக்கும் இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அப்படியே ஆவிக்குரிய கிரியைகளான ஆராதனை செய்தல், வேதவாசிப்பு, ஜெபிப்பது, கட்டுகளை உடைப்பது, மன்றாடி ஜெபிப்பது போன்றவற்றுக்கு இடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன...