மருத்துவத்திற்கான வரம்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். மருத்துவத்திற்கான வரம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை கொலோசெயர் 2:3 -ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. 1 கொரிந்தியர் 12 ல் ஆவிக்குரிய வரங்களைப் பற்றி பரிசுத்த வேதத்தில் வாசிக்கலாம். மொத்தம் ஒன்பது வரங்கள் உள்ளன. ஆவியினுடைய அனுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கு என்று அளிக்கப்பட்டு இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் இந்த ஆவிக்குரிய வரங்களை ஊழியங்களுக்கு மாத்திரமல்ல படிப்பு, தொழில், அரசியல், நிர்வாகம் மற்றும் செய்யும் எந்த ஒரு காரியத்திலும் தேவனுடைய நாமம் மகிமைக்காகப் பயன்படுத்தலாம். அப்...