ஹெவி டோஸ் (Heavy Dose)



           சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். ஹெவி டோஸ் (Heavy Dose) என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை யாத்திராகமம் 15:26-ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

 நம் சரீரம் மிகவும் பலவீனப்படும் நேரங்களில் மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். வியாதியின் தன்மை அதிகமாக இருந்தால் ஹெவி டோஸ் (Heavy Dose) மருந்துகளை சாப்பிட தருவார்கள். அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, வியாதிகள் சீக்கிரத்தில் சரியாகும். சில நேரங்களில் பக்க விளைவுகளையும் உண்டுபண்ணும். அதேபோல் ஆவிக்குரிய ஹெவி டோஸ் (Heavy Dose) மருந்து ஒன்று உள்ளது. முன்காலத்தில் நம் ஆவிக்குரிய பிதாக்கள் இதனைப் பயன்படுத்தி சரீர சுகத்தினைப் பெற்றார்கள். உலக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை விட இது பல மடங்கு வலிமையானது. ஆனால் பக்க விளைவுகளே கிடையாது. பக்க நன்மைகள் தான் கிடைக்கும். யார்  வேண்டுமென்றாலும்  எப்போது வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். 

 இந்த தீர்க்கதரிசன செய்தியில் ஆவிக்குரிய ஹெவி டோஸ் (Heavy Dose) மருந்துகளைக் குறித்தும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் விரிவாக தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள். அட ஒரு நிமிடம் ஜெபம் செய்துவிட்டு வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் அசைவாடுவார். நெடுநாட்கள் தீராத வியாதியாக இருந்தாலும் சீக்கிரத்தில் சரியாகிவிடும். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

  சில நேரங்களில் தேவனுடைய பிள்ளைகளுக்கும், தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு அல்லது பிசாசின் தந்திரங்களினால் வியாதி வருவதுண்டு. அந்நேரங்களில் நம்மில் பலர் உலக மருந்துகளை தேடுகின்றோம் அது தவறல்ல. ஆனால், உலக மருத்துவர்களை தேடுவதற்கு முன்பு முதலில் பரலோக மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தேவசமூகத்தில் அதற்காக கருத்தாக ஜெபிக்க வேண்டும். வியாதியையும், வியாதியினால் வந்த வலியையும், பொருளாதார பாதிப்பையும் ஒரு தாளில்(Paper) எழுதி தினமும் கருத்தாக ஜெபிக்க வேண்டும். உலக மருந்துகளை எடுப்பதற்கு முன்பாக இப்படி தொடர்ச்சியாக ஜெபிக்க வேண்டும். இது தான் ஆவிக்குரிய ஹெவி டோஸ் (Heavy Dose) மருந்து.

  இந்த ஆவிக்குரிய ஹெவி டோஸ் (Heavy Dose) உலக மருந்துகளை விட மிக தீவிரமாக கிரியைச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக நோயின் வீரியத்தைக் குறைத்து, மெய்யான விடுதலையைப் பெற்றுத் தரும்.

  ஒருவேளை உலக மருந்துகளை சாப்பிட்டால் கூட நோய் சரியாகும். ஆனால், திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், இந்த ஆவிக்குரிய மருந்தை சாப்பிட்டப் பின்பு வாழ்நாட்களில் இந்த வியாதி திரும்ப வராது. வரவே வராது.

    சரி எப்படி இந்த மருந்தை எடுப்பது? ஏதோ ஒரு வியாதிக்காக தினமும் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கலாம். கவலைப்படாதீர்கள்!  இந்த மருந்துகளை எடுப்பதற்கு முன்பு  கருத்தாக பரலோக மருத்துவரிடம் விண்ணப்பம் செய்யுங்கள். மருந்து எடுக்கும் ஒவ்வொரு நேரமும் அப்படியே செய்யுங்கள். இப்படி ஜெபிக்கின்ற ஒவ்வொரு நொடியும் நாம் ஆவிக்குரிய மருந்தை எடுக்கின்றோம். இப்படித்தான் ஆவிக்குரிய மருந்துகளை எடுக்க வேண்டும்.

  இதை வாசிக்கின்ற தேவனுடைய  பிள்ளைகளே! உங்களுக்கு தீராத நெடுநாள் வியாதி உள்ளதா? தினமும் கண்டிப்பாக மருந்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்களா? கவலைப்படாதிருங்கள் இந்த ஆவிக்குரிய  ஹெவி டோஸ் (Heavy Dose)  மருந்தை கொடுத்துப் பாருங்கள்.  சீக்கிரத்தில் விடுதலைப் பெற்று உலக மருந்துகளுக்கு டாட்டா காண்பித்துவிடுவீர்கள். நிச்சயமாக டாட்டா காண்பித்து விடுவீர்கள். ஆனால், தினமும் கட்டாயமாக இந்த மருந்தை எடுக்க வேண்டும்.

       இந்த செய்தி உங்களோடு பேசியிருந்தால் என்னோடுகூட சேர்ந்து ஒரு நிமிடம் கருத்தாக இந்த ஜெபத்தினை செய்யுங்கள்.

ஜெபம்:-

   எங்கள் அன்பின் பரலோக பிதாவே! உம்முடைய நாமம் பரிசுத்தபடுவதாக. நீர் தந்த இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஸ்தோத்தரிக்கின்றேன். ஹெவி டோஸ் (Heavy Dose)என்ற செய்தியின் மூலமாக என்னோடு பேசினீரே உமக்கு ஸ்தோத்திரம். வாசித்த இந்த செய்திக்கு என்னை ஒப்புக்கொடுக்கின்றேன். சரீரம் பலவீனப்படுகின்ற நேரங்களில் முதலில் பரலோக மருத்துவரான உம்மை தேடவும், ஆவிக்குரிய  ஹெவி டோஸ் (Heavy Dose)  மருந்தை எடுக்கவும் கிருபைகளை தாரும். ஆவியில் பெலனடைய உதவி செய்யும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கின்றேன். எங்கள் அன்பின் பரலோக பிதாவே ஆமென்.  

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

English  Hindi

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

  1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஆவிக்குரிய ஹெவி டோஸ்ஐ இன்னும் தெளிவாக தேவனுடைய வசனத்தோடு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று விளக்கிக்காண்பிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..