பரலோக மெடிக்கல் டீம்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். பரலோக மெடிக்கல் டீம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை 1 பேதுரு 2:24 -ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். Switch To ENGLISH HINDI நம்முடைய பூமிக்குரிய கூடாரமாகிய சரீரம் தேவன் தங்கும் ஆலயமாயிருக்கிறது (1 கொரி 3:16) அதுமாத்திரமல்ல தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கின்றது (1கொரி 3:9). ஒரு மனிதனுடைய ஆத்துமா...