பரலோக மெடிக்கல் டீம்


 

      சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். பரலோக மெடிக்கல் டீம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை 1 பேதுரு 2:24-ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும்.    Switch To ENGLISH    HINDI

     நம்முடைய பூமிக்குரிய கூடாரமாகிய சரீரம் தேவன் தங்கும் ஆலயமாயிருக்கிறது  (1 கொரி 3:16) அதுமாத்திரமல்ல தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கின்றது(1கொரி 3:9). ஒரு மனிதனுடைய ஆத்துமா யுக யுகமாக வாழும். ஆனால், பூமியில் வாழவேண்டும் என்றால் சரீரம் மிக முக்கியம். மனிதனுடைய ஆத்துமா பூமியில் வாழ்வதற்கும், தேவனுடைய ஆவி பூமியில் வாசம் செய்வதற்கும் சரீரம் ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகின்றது. அப்படிப்பட்ட சரீரம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. எனவே, அதிக பிரயாசத்துடன் நம்முடைய சரீரத்தினை பரலோகம் பாதுகாக்கின்றது.  

   வியாதியினால் நம்முடைய சரீரம் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்காக பரலோகத்தில் ஒரு மெடிக்கல் டீம் உள்ளது. அதைக் குறித்துதான் இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கப்போகின்றோம். இது ஆழமான இரகசியம். இது எல்லாருக்கும் எளிதில் புரியாது. ஜெபத்துடன் தொடர்ச்சியாக வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உதவி செய்வார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.  

       பரலோகத்தில் மெடிக்கல் டீம் ஒன்று உள்ளது. பூமியில் வாழ்ந்து சென்ற பரிசுத்தவான்கள் இந்த டீமில் இருப்பார்கள். பூமியில் பணத்தையோ, மனிதர்களையோ, மனித ஞானத்தையோ நம்பாமல் சர்வவல்ல தேவனையும், அவருடைய வல்லமையையும் நம்பியிருக்கும் தேவனுடைய பிள்ளைகள், சரீரம் வியாதிப்பட்டு சோர்ந்துபோகும்போது, அவர்களுக்கு உதவி செய்வதற்காக பரலோக தேவன் இந்த Team-யை அனுப்புவார். இவர்கள் வந்து எங்கே பாதிப்புள்ளது? என்ன நோய் வந்துள்ளது? Sugar, Pressure, Cholestral Level  எப்படி உள்ளது.  இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புகள் எப்படி இயங்குகின்றது? என்னென்ன Treatment கொடுக்கலாம் என்று சோதித்து பார்ப்பார்கள்.

  வியாதியின் தன்மைக்கேற்ப எந்த மருந்து சாப்பிட வேண்டும்? எந்த மருத்துவரை பார்க்க வேண்டும்? இதற்காக எப்படி ஜெபிக்க வேண்டும்? உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்? சரீரத்தினை எப்படி பராமரிக்க வேண்டும்? என்று நம்முடைய விசுவாசத்திற்கேற்ப ஆலோசனைகளை கொடுப்பார்கள். மேலும் நம்மை குறித்த Report-யை பரலோக சங்கங்களில் சமர்ப்பிப்பார்கள்.

   இந்த பரலோக மெடிக்கல் டீம் கொடுக்கும் ஆலோசனையின்படி நடந்தால் எவ்வளவு பெரிய வியாதியும் சரியாகும். ஏன் முத்தின கேன்சர் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும். வீணான மருத்துவ செலவு ஏற்படாது. 

 தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை கருத்தாக வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் வியாதியினால் கஷ்டப்படுகின்றீர்களா? தேவன் மாத்திரமே விடுதலை தருவார் என்று நம்பியிருக்கின்றீர்களா? ஆண்டவரே! பரலோக மெடிக்கல் டீமை அனுப்பி எனக்கு உதவிசெய்யும் என்று கருத்தாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபியுங்கள். ஜெபத்தைக் கேட்கின்ற தேவன் அந்த டீமை அனுப்புவார். அவர்கள் வந்து ஒவ்வொரு நாளும் நம்முடைய சரீரத்தினை சோதித்தறிந்து ஆலோசனைகளை கொடுப்பார்கள். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது, வியாதி சீக்கிரத்தில் சரியாகும். 

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

  1. Praise god.dear jesus please send me the medical team to check my teeth issue.in jesus mighty name.amen

    ReplyDelete
  2. Thyroid problem la irunthu enakku viduthalai kodunga yesappa ...

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..