எல்லாரையும் விட பெரியவர்களாக மாற...
கர்த்தரி ன் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று நீதிமொ ழிகள் 10:22-ல் வாசித்திருப்போம். தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுவது அவருக்குப் பிரியம். (எண்24) ஆபிரகாமை சர்வ வல்ல தேவன் ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும், வெள்ளியும், பொன்னும் உடைய சீமானாயிருந்தான். இன்றைக்கும் இந்த நாட்களிலும் தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே அவர் விரும்புகின்றார். அநேகரை ஐசுவரியவான்களாக மாற்ற விரும்புகின்றார். எப்படி ஒரு மனிதனை ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுகின்றார்? தேவனிடத்திலிருந்து ஐசுவரியத்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன...