எல்லாரையும் விட பெரியவர்களாக மாற...
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத்
தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று நீதிமொழிகள் 10:22-ல் வாசித்திருப்போம்.
தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுவது அவருக்குப் பிரியம். (எண்24) ஆபிரகாமை சர்வ வல்ல தேவன் ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும், வெள்ளியும், பொன்னும்
உடைய சீமானாயிருந்தான். இன்றைக்கும் இந்த நாட்களிலும் தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே
அவர் விரும்புகின்றார். அநேகரை ஐசுவரியவான்களாக
மாற்ற விரும்புகின்றார். எப்படி ஒரு மனிதனை ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுகின்றார்?
தேவனிடத்திலிருந்து ஐசுவரியத்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதனைக் குறித்து
இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால்
கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே
செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள்
ஜெபியுங்கள்.
யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷனைக் குறித்து பரிசுத்த வேதத்தில் வாசித்திருப்போம். அவன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகின்றனவனாக இருந்தான். அவன் கிழக்கத்திய புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகின்றவர்களையும், உத்தமமாக இருக்கின்றவர்களையும்தான் சர்வ வல்ல தேவன் ஆசீர்வதித்து உயர்த்துவார். ”என் கை இதைச் செய்தது; நான் ஐசுவரியவான்” என்று பெருமை பாராட்டுகின்றவர்களை ஆசீர்வதிக்கவேமாட்டார். ஆடம்பரமாக செலவு செய்பவர்களையும், பெயர் புகழுக்காக ஆஸ்திகளை சேகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களையும் ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்ற மாட்டார். மாறாக தேவனுடைய இராஜ்ஜியத்தினை தாங்க வேண்டும், தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்பட தன்னுடைய ஆஸ்திகளை பயன்படுத்த வேண்டுமென்று விருப்பமும், வாஞ்சையும் உள்ளவர்களைத்தான் ஆசீர்வதிப்பார். மற்றவர்களையோ ஐசுவரியவான்களாக மாற்ற மாட்டார்.
சரி எப்படி ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுவார்? யோபு 1:3-ல் அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருக ஜீவன்களும் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரர்களும் இருந்தார்கள். அதனால், அந்த மனுஷன் கிழக்கத்திய புத்திரர் எல்லாரிலும் பெரியவனாகயிருந்தான் என்று கூறுகின்றது. அதாவது யோபுவுக்கு ஆடு, ஒட்டகம், ஏர்மாடு, கழுதை என பல வழிகளில் சர்வ வல்ல தேவன் வருமானத்தினைக் கொடுத்தார். திரளான பணிவிடைக்காரர்களும் அவனுக்குக் கீழ் வேலை செய்தார்கள். அதனால் அவன் கிழக்கத்திய புத்திரர் எல்லாரைப்பார்க்கிலும் மிகப் பெரிய பணக்காரனாக இருந்தான்.
ஒரு வழிகளில் மட்டும் வருமானத்தினைத் தந்து ஆசீர்வதிக்க மாட்டார். அதாவது
ஒரு தொழில் மூலமாக மட்டும் வருமானம் வராது. பலவழிகளில் வருமானத்தினைத் தந்து ஆசீர்வதிப்பார்.
ஏனென்றால் ஒரு வழியில் மட்டும் வருமானம் வந்தால் எதிராளியாகிய பிசாசு அதை எளிதில்
lock செய்து விடுவான். எனவே, பலவழிகளில் வருமானத்தினை தருவார். அப்பொழுது, பிசாசினால் வருமானத்தினை தடுக்கமுடியாது.
ஒரு தொழில் பலவீனப்பட்டாலும் மற்றொன்று தூக்கி
விட்டுவிடும்.
இந்த இரகசியம் தெரியாமல் அநேகர் ஒரு தொழில் அல்லது ஒருவழியாக வருமானம் வருவதை விரும்புவார்கள். அப்படி ஒரு வழியாக வருமானம் வந்தாலும் தேவனால் ஆசீர்வதிக்க முடியும். ஆனால், மற்றவர்கள் எல்லாரையும் விட ஐசுவரியவான்களாக மாற்ற முடியாது. சராசரியான வாழ்க்கை மட்டுமே வாழ முடியும்.
இதை வாசிக்கின்ற நீங்களும் பரலோக தேவனின் ஆசீர்வாதத்தினைப்
பெற்று ஐசுவரியவான்களாக
மாறவேண்டும் என்று விரும்பலாம். அதற்காக பிரயாசப்படலாம். குறைந்தது நான்கு அல்லது ஐந்து
வழிகளில் வருமானம் வரும்படி ஆயத்தப்படுத்துங்கள். பல தொழில்களை செய்யுங்கள். உங்களுக்கு
கீழே பலரை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் குடும்பங்களுக்கு ஆசீர்வாதமாக இருங்கள். பரலோக
தேவன் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். அநேகரைப் பார்க்கிலும் பெரியவர்களாக இருப்பீர்கள்.
தேவனுடைய நாமமும் உங்களால் மகிமைப்படும்.
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment