தடுக்கும் ஆவி
ஆவிக்குரிய சத்தியங்களை அறிய அறிய, எந்தஒரு அசுத்த ஆவியாலும், நமக்கு முன்பாக நிற்க முடியாது. ஏனென்றால், ”சத்தியத்தினை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ” என்று, பரிசுத்த வேதம் கூறுகின்றது (யோவான் 8 :32). அதன்படி, தேவனுடைய ஊழியக்காரர்கள், விசுவாசிகள், வேதசத்தியங்களை அறிய அறிய, அவர்களை கட்டுகின்ற அல்லது கட்டி வைத்திருக்கின்ற அசுத்த ஆவிகள் வெளியே செல்லும். ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலகப்பிரகாரமான வாழ்க்கையிலும், மெய்யான விடுதலை கிடைக்கும். ஆவிகளின் மண்டலத்தில் ‘தடுக்கும் ஆவி ’ என்ற ஒரு ஆவி உள்ளது. இந்த ஆவி, சரீரத்தில் சில உறுப்புகளைத் தாக்கி, சரிவர வேலை செய்யக்கூடாதப்படிக்கு தடுக்கின்றது. இதனால், பல்வேறு பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றது. இந்த தீர்க்கதரிசன செய்தியில், தடுக்கும் ஆவி எப்படி கிரியை செய்யும்?...