தடுக்கும் ஆவி
ஆவிக்குரிய சத்தியங்களை அறிய அறிய, எந்தஒரு அசுத்த ஆவியாலும், நமக்கு முன்பாக நிற்க முடியாது. ஏனென்றால், ”சத்தியத்தினை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று, பரிசுத்த வேதம் கூறுகின்றது (யோவான் 8 :32). அதன்படி, தேவனுடைய ஊழியக்காரர்கள், விசுவாசிகள், வேதசத்தியங்களை அறிய அறிய, அவர்களை கட்டுகின்ற அல்லது கட்டி வைத்திருக்கின்ற அசுத்த ஆவிகள் வெளியே செல்லும். ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலகப்பிரகாரமான வாழ்க்கையிலும், மெய்யான விடுதலை கிடைக்கும்.
ஆவிகளின் மண்டலத்தில் ‘தடுக்கும் ஆவி’ என்ற ஒரு ஆவி உள்ளது. இந்த ஆவி, சரீரத்தில் சில உறுப்புகளைத் தாக்கி, சரிவர வேலை செய்யக்கூடாதப்படிக்கு தடுக்கின்றது. இதனால், பல்வேறு பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றது.
இந்த தீர்க்கதரிசன செய்தியில், தடுக்கும் ஆவி எப்படி கிரியை செய்யும்? என்பதனையும், இதை எப்படி ஜெயம் எடுக்கலாம்? என்பதனையும், இது தாக்கியதற்கான அடையாளங்கள் என்னென்ன என்பதனையும் குறித்து விரிவாகத் தியானிக்கலாம். ஜெபத்துடன், பரிசுத்த ஆவியானவர் துணையுடன் வாசியுங்கள். ஆவிகளின் சத்தியத்தினை அறிந்துகொண்டு, மெய்யான விடுதலையை பெற்றுக்கொள்வீர்கள்.
இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளின் சரீரம், தேவ ஆவியானவர் தங்கியிருக்கும் தேவனுடைய ஆலயமாகும் (1கொரிந்தியர் 3:16). ஆனால், இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, பிசாசின் வீடாகவே இருக்கும். வலுசர்ப்பத்தின் ஆவி சரீரத்தில் தங்கியிருந்து, சரீர உறுப்புகள் அனைத்தையும், ஆளுகை செய்து கொண்டிருக்கும். சரீரத்தில் உள்ள அனைத்து உறுப்புகளைக் குறித்தும், அவைகள் செயல்படும் விதமும், அதுக்கு நன்றாகத் தெரியும். எந்த உறுப்புகள் எப்படி வேலை செய்யும்? அது வேலை செய்யவில்லையென்றால், என்னென்ன பிரச்சனைகள் வரும்? வேலை செய்யாதப்படிக்கு எப்படித் தடுக்கலாம்? போன்ற இரகசியங்களை, மிக நன்றாக அறிந்து வைத்திருக்கின்றான். ஆதலால், அவன் தேவனுடைய பிள்ளைகளின், சரீர உறுப்புகளைத் தாக்கி, அது தனக்கு நியமிக்கப்பட்ட வேலையை செய்யாதபடிக்கு தடுக்கின்றான். இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, சரீரத்தினை ஆளுகை செய்ததால், இரட்சிக்கப்பட்ட பின்பு மிக எளிமையாக, சரீரங்களைத் தாக்க போராடிக் கொண்டிருக்கிறான்.
உடலிலுள்ள சில உறுப்புகள், குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட காலத்திற்குள், சிலக்
கழிவுகளைத் தானாக வெளியேற்றும். அது சரியாகவும்
ஒழுங்காகவும் வெளியேற வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கியமாக
வாழ முடியாது. ஆவிகளின் உலகத்தில் தடுக்கும் ஆவி என்று ஒன்று உள்ளது. இது கழிவுகள் வெளியேற்றாதப்படிக்கு தடைசெய்து. அப்படியே சரீரத்தில் தேங்கச் செய்கின்றது. இதனால், பல உபாதைகள், ஆசீர்வாதத் தடைகள், பிரச்சனைகள்,
போராட்டங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆவியினால்
பாதிக்கப்பட்டு அநேகர் ஆசீர்வாதத்தினையும்,
ஆரோக்கியத்தினையும் இழந்துள்ளார்கள்.
அவர்கள், சத்தியத்தினை அறிந்து கொள்ளும்
விதமாக இந்த தடுக்கும் ஆவி குறிப்பாக எந்த உறுப்புகளைத் தாக்கி ஆளுகை செய்கின்றது? என்பதனைக் குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
நுரையீரல்:
நம் சரீரத்தில் நுரையீரல் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். ஜீவனைத் தரும் சுவாசத்தையும், உயிராகிய இரத்தத்தினையும் ஒன்றாகக் கலக்கச் செய்து, மற்ற உறுப்புகளுக்கு ஜீவனை அனுப்புகின்றது. சில நேரங்களில், நுரையீரலில் சளி ஏற்படும். இது சரியாகவும், ஒழுங்காகவும் வெளியேற்றப்பட வேண்டும். இந்த சளியினால் ஆஸ்துமா, சைனஸ், டி.பி, மூச்சுத்திணறல், நிமோனியா, காய்ச்சல் போன்ற உடல் வியாதிகள் ஏற்படும். இந்தச் சளி கட்டியாகி, உறைந்து, மூச்சுக் குழாயை அடைத்துக்கொண்டால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படும் .
நுரையீரலை தடுக்கும் ஆவி ஆளுகை செய்து தாக்கும்போது, இந்தச் சளி வெளியேறக்கூடாதப்படிக்கு, அதைக்கட்டி தடுக்கின்றது. இதனால், பலவிதமான வியாதிகள், உபாதைகள், ஆசீர்வாத
தடைகள், வீண் செலவுகள் ஏற்படும். எனவே, நுரையீரலை இந்த ஆவி தாக்காதபடிக்கு கருத்தாக ஜெபிக்க
வேண்டும்.
கர்ப்பப்பை:
பெண்களுக்கு காணப்படும் கர்ப்பப்பை தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு உறுப்பாகும். பூமியில், சந்ததி பெருகவேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான், குடும்பங்களைப் பரலோகதேவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். இதற்கு, கர்ப்பப்பை மிக முக்கிய பங்காற்றுகின்றது. மாதம் ஒருமுறை, உதிரப்போக்கு வெளியேறுதல் மற்றும் சினைப்பையிலிருந்து கருமுட்டைகள் வெடித்தல் நிகழும். இதை மாதவிடாய் சுழற்சி என்று அழைப்பார்கள். இது சரியாக மாதம் மாதம் வெளியேற வேண்டும்.
கர்ப்பப்பையை தடுக்கும் ஆவி ஆளுகை செய்யும் போது மாதவிடாய் சரிவர வெளியேறாமல்
தடுக்கின்றது. இதனால், உடலளவிலும், மனதளவிலும்
பாதிப்பு ஏற்படும். இதைத்தவிர கர்ப்பப்பை சம்பந்தமான
பல வியாதிகள், உபாதைகள் ஏற்படும். எனவே, இந்த ஆவி கர்ப்பப்பையை தாக்காதபடிக்கு ஜெபிக்க வேண்டும்.
கழிவு நீக்க உறுப்புகள்:
உடலில் உள்ள கழிவுகளை வெளியேத்தள்ள கழிவு நீக்க உறுப்புகள் பயன்படுகின்றது. இரத்தத்தில் உள்ள கழிவுகளைச் சிறுநீரகத்தால் சுத்திகரிக்கப்பட்டு, சிறுநீர் வழியாக வெளியேறுகின்றது. அதேபோல், சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள கழிவுகள் மலக்குடல் வழியாக மலமாக வெளியேற்றப்படுகின்றது. இது, சரியாக வெளியேற வேண்டும். கழிவு நீக்க உறுப்புகளைத் தடுக்கும் ஆவி, ஆளுகை செய்யும் போது, உடலில் உள்ள இந்தக் கழிவுகள் வெளியேற்றாதப்படிக்கு தடுக்கின்றன. இதனால், மலச்சிக்கல், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, கழிவுநீக்க உறுப்புகளை, தடுக்கும் ஆவி தாக்காதப்படிக்கு ஜெபிக்க வேண்டும்.
தடுக்கும் ஆவி, எந்த முக்கியமான உறுப்புகளை தாக்கும் என்பதை குறித்து பார்த்தோம்.
இனி, இந்த ஆவி நம்மை தாக்கியதற்கான அடையாளங்கள்
என்னென்ன? என்பதனை குறித்து, கொஞ்சம் விரிவாகத்
தியானிக்கலாம்.
தடுக்கும் ஆவி தாக்கியதற்கான அடையாளங்கள்:
1. ஆஸ்துமா, டி.பி, நாள்பட்ட சளி, நெஞ்சுச்சளி,
நிமோனியா போன்ற நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் காணப்படும். மூச்சுவிடுவதில்
சிரமம், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும்.
2.பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் காணப்படும்.
3.சிறுநீரகக் கற்கள், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் காணப்படும்.
மலச்சிக்கல், மூலம், போன்ற உபாதைகள் காணப்படும்.
4. நெஞ்சுச்சளி காணப்படும்போது அதற்காக சிகிச்சை செய்வீர்கள். அது சரியாகும். ஆனால், மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். அதற்கு சிகிச்சை எடுத்தால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இது, மிக முக்கியமான அடையாளம் ஆகும்.
சரி இதை எப்படி ஜெயம் எடுக்கலாம்? கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். முதலில், மேற்சொன்ன அடையாளங்களைக் கொண்டு, ஜெபத்துடன் தடுக்கும் ஆவிதான் தாக்கியுள்ளது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு உறுதிப்பாடு கிடைத்தாலே 50% ஜெயம் எடுத்துவிடலாம். பின்பு, பரலோகத்தேவன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, நமக்கு கொடுத்த அதிகாரத்தோடு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே, தடுக்கும் ஆவியைக் கடிந்து அப்புறப்படுத்துங்கள். அதிகாரத்தோடு துரத்தும் போது, அந்த ஆவி அலைக்கழிப்பைக் கொண்டு வரும். அதிகம் அதிகமாக உடல் உபாதைகளை ஏற்படுத்தும். ஆனாலும், சோர்ந்து போகாமல், ஜெயம் எடுக்கும் வரை, தொடர்ந்து கடிந்து அப்புறப்படுத்துங்கள். முடிவியிலே ஜெயம் எடுப்பீர்கள். சரீரத்திலே உள்ள பிரச்சனைகள் சரியாகும். வியாதியின் கட்டிலிருந்து விடுதலை பெறுவீர்கள். பரலோக தேவனின் நாமம் மகிமைப்படும்.
”தடுக்கும் ஆவி”
என்ற தலைப்பில் உள்ள இந்த தீர்க்கதரிசன
செய்தியை கருத்தாக வாசித்த தேவனுடைய பிள்ளைகளே! பரிசுத்த ஆவியானவர் இந்த செய்தியின்
மூலமாக உங்களுடன் பேசியிருப்பார் என்று விசுவாசிக்கின்றேன். இது விலையேறப்பெற்ற சத்தியம். இது எல்லோருக்கும்
எளிதாக புரியாது. உங்களுடன் பரிசுத்த ஆவியானவர்
பேசி புரிய வைத்தால் நீங்கள் பாக்கியவான்கள். தடுக்கும் ஆவியை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள்.
பரலோகத்தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.. ஆமென்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Amen
ReplyDelete