திருமண வாழ்க்கையில் தோல்வியா?

திருமணத்தில் தோல்வியடைந்த சிம்சோன் வேசிகளையும், ஸ்திரீகளின் சிநேகத்தையும் தேடிச் சென்றான்.(நியாதிபதிகள் 16) உண்மையிலே திருமணத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தோல்வி அடைந்தவர்கள் வேசிகளைத்தான் தேடிச்செல்வார்கள் அல்லது விபச்சாரம், கள்ளக்காதல் போன்ற பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள். சரி சிம்சோன் என்ற தேவனுடைய மனிதனின் திருமண வாழ்க்கை ஏன் தோல்வியடைந்தது? எதனால் அவனுடைய பெண்ஜாதி அவனுடைய தோழனில் ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாள்? இன்றைய நாட்களில் அநேக தேவனுடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கை தோல்வியடைய காரணம் என்ன? அப்படி தோல்வியடைந்தவர் அதை எப்படி சரி செய்ய வேண்டும்? போன்றவற்றினை இந்த தீர்க்கதரிசன செய்தியின் வழியாக தியானிக்கலாம். பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் மக்களை நாற்பது வருடமாக ஆளுகைச் செய்து, அடிமைப் படுத்தினார்கள். அந்த பெலிஸ்தியர்களுடன் யுத்தம் செய்து, அவர்களை அழித்து இஸ்ரவேல் மக்களை அவர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்க வேண்டும் என்பதற்காகவே, இருபது வயதிலும் அல்ல முப்பது வயதிலும் அல்ல தாயின் கர்ப்பத்தில் உருவாகுவதற்கு முன்பே சர்வ வ...