திருமண வாழ்க்கையில் தோல்வியா?
திருமணத்தில் தோல்வியடைந்த சிம்சோன் வேசிகளையும், ஸ்திரீகளின் சிநேகத்தையும் தேடிச் சென்றான்.(நியாதிபதிகள் 16) உண்மையிலே திருமணத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தோல்வி அடைந்தவர்கள் வேசிகளைத்தான் தேடிச்செல்வார்கள் அல்லது விபச்சாரம், கள்ளக்காதல் போன்ற பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள். சரி சிம்சோன் என்ற தேவனுடைய மனிதனின் திருமண வாழ்க்கை ஏன் தோல்வியடைந்தது? எதனால் அவனுடைய பெண்ஜாதி அவனுடைய தோழனில் ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாள்? இன்றைய நாட்களில் அநேக தேவனுடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கை தோல்வியடைய காரணம் என்ன? அப்படி தோல்வியடைந்தவர் அதை எப்படி சரி செய்ய வேண்டும்? போன்றவற்றினை இந்த தீர்க்கதரிசன செய்தியின் வழியாக தியானிக்கலாம்.
பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் மக்களை நாற்பது வருடமாக
ஆளுகைச் செய்து, அடிமைப் படுத்தினார்கள். அந்த பெலிஸ்தியர்களுடன் யுத்தம் செய்து, அவர்களை
அழித்து இஸ்ரவேல் மக்களை அவர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்க வேண்டும் என்பதற்காகவே,
இருபது வயதிலும் அல்ல முப்பது வயதிலும் அல்ல தாயின் கர்ப்பத்தில் உருவாகுவதற்கு முன்பே
சர்வ வல்ல தேவன் சிம்சோனை முன்குறித்தார்.
கர்ப்பத்திலிருந்து பிறந்து வெளியே வந்து வளர்ந்தான். அவனை ஆசீர்வதித்தார்.
அபிஷேகம் பண்ணினார்.(நியாதிபதிகள் 13)
தன்னுடைய தாய் தகப்பனை நோக்கி பெலிஸ்தரில் ஒரு
பெண்ணை கண்டேன்; அவள் என் கண்களுக்கு மிகவும் பிரியமானவள்; அவளை எனக்கு திருமணம் செய்ய
வேண்டும் என்று கூறி அடம்பிடித்தான். அவன் பெற்றோர்களோ விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தியரிடத்தில்
பெண் கொள்ள வேண்டியதென்ன? வேண்டாம் இஸ்ரவேல் ஜனத்தில் பெண் கொள் என்று கூறியும் கேட்டபாடில்லை.
அவளைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றான். (நியாதிபதிகள்
14:3)
அவனுடைய இருதயக் கடினத்தை பார்த்த தேவன் அப்படியாவது
பெலிஸ்தியரிடத்தில் குற்றம் கண்டு பிடிக்க முகாந்திரம் உண்டாகும் என்று அதை அனுமதித்து
விட்டார். இது தேவனுடைய பரிபூரண சித்தம் அல்ல அனுமதிக்கப்பட்ட சித்தமாகும்.(வச 4)
அதன்படி, திம்னாத்திற்கு சென்று பெலிஸ்தியர்களோடு
யுத்தம் பண்ணி, தேவனுடைய பிள்ளைகளை இரட்சிக்க வேண்டியவன் இப்பொழுதோ திருமணத்திற்காக செல்கின்றான். தேவனுடைய யுத்தவீரனாக
செல்ல வேண்டியவன் திருமணக்கோலத்தில் மாப்பிள்ளையாக செல்கின்றான். அவளை அவனுக்கே பேசிமுடித்தார்கள்.
ஆனால், திருமணம் செய்வதற்கு முன் பிரச்சினை
ஏற்பட்டது. திருமணமும் நின்றது. நேசித்த அவனுடைய பெண்ஜாதியோ அவனுடைய தோழன் ஒருவனுக்கு
கொடுக்கப்பட்டாள். இப்பொழுதோ பெண்சாதி இல்லை.. குடும்பமும் இல்லை. எனவே, தன்னுடைய ஆசைகளை
நிறைவேற்றுவதற்காகவும், மாம்ச உணர்வை தீர்ப்பதற்காகவும் வேசிகளையும், ஸ்திரீகளின் சிநேகத்தையும்
தேடிச் செல்கின்றான். வாழ்நாட்கள் முழுவதும் நல்ல குடும்ப வாழ்க்கை அவனுக்கு கிடைக்கவில்லை.
இதுவே கடைசியில் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக மாறி விடும். திருமண வாழ்க்கை மிகப் பெரிய தோல்வியில் முடிந்துவிடும். ஒன்று திருமணமே நடக்காது, அப்படி நடந்தாலும் குடும்பத்துடன் சமாதானமாக வாழ முடியாது. இப்படித்தான் அநேக தேவனுடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கை தோல்வியடைகின்றது.
சரி இப்படி தோல்வியடைந்த திருமண வாழ்க்கையை சரி செய்யலாமா? ஆம் என்றால் எப்படி சரி செய்யலாம்? இதன் தொடர்ச்சியாக தியானிப்போம்
விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமை சர்வவல்ல தேவன் எழுபத்தைந்தாம் வயதில் வாக்குத்தத்தம் கொடுத்து அழைக்கின்றார். அதுவரை அவனுக்கு குழந்தைப்பாக்கியம் கிடைக்கவில்லை. குழந்தைப்பாக்கியம் தந்து சந்ததியை பெரிதாக்குவேன் என்பது அந்த வாக்குத்தத்தம். தேவன் சொன்ன வாக்குத்தத்தத்தினை விசுவாசித்தான். அது நிறைவேற காத்திருந்தான். (ஆதி 12)
ஆனால், காலத்திற்கு முன்னே குழந்தைப்பாக்கியத்தின் மீது இருந்த ஆசையினால் தன் மனைவியாகிய சாராள் பேச்சைக் கேட்டு அடிமை பெண்ணாகிய ஆகாரை சேர்ந்து தேவசித்தம் இல்லாத இஸ்மவேலை பெற்றெடுத்து விட்டான். தேவசித்தத்திற்கு எதிராக கிரியை செய்து விட்டான். (ஆதி 16)
ஆபிரகாமோ தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, அதிகாலையில் எழும்பி தன் குமாரனாகிய ஈசாக்கை கூட்டிக்கொண்டு தகன பலியிட சென்றான். சர்வவல்ல தேவன் சொன்ன இடத்தில் பலிபீடத்தைக் கட்டினான். கட்டைகளை அதன் மீது அடுக்கி, பலிபீடத்தில் ஈசாக்கை கிடத்தினான். தன் குமாரனை வெட்டும்படி கையை நீட்டி கத்தியை எடுத்தான். பிள்ளையின் மீது இருந்த பாசம் போய்விட்டது. தேவன் வார்த்தை மட்டும் போதும் என்றாகிவிட்டது. தேவனுக்காக பிள்ளையை பலியிடத் துணிந்து விட்டான்.
அப்பொழுது, கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து ஆபிரகாமை கூப்பிட்டு, நீ அவனை புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகின்றவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்று சாட்சிக்கொடுத்தார். ஆண்டவருக்காக எந்த ஈசாக்கை பலியிட துணிந்தானோ அந்த ஈசாக்கை திரும்ப அவனுக்கே கொடுத்தார். ஈசாக்கு நூற்றெண்பது வருடம் உயிரோடிருந்தான்.
ஆபிரகாமைப் போல் நீங்களும் பணத்திற்கோ, அழகிற்கோ ஆசைப்பட்டு, தேவசித்தம் இல்லாதவர்களை திருமணம் செய்து, தேவனுடைய வார்த்தையை மீறி, அதனிமித்தம் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பு வந்திருக்கலாம். அதனால் இருண்ட காலத்தில் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு ஓர் நற்செய்தி அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். எந்த காரியத்திற்காக சர்வவல்ல தேவனை மறுதலித்தீர்களோ அதை பலிபீடத்தில் வைக்க ஒப்புக் கொடுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையை பலிப்பீடத்தில் தூக்கி வையுங்கள். ”ஆண்டவரே நீர் மாத்திரம் எனக்கு போதும்” என்று அர்ப்பணியுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் காணப்படும் பிரச்சினைகளை சர்வ வல்ல தேவன் சரிச்செய்வார். உங்கள் குடும்ப பிரச்சினை மாறும். பிரிந்துசென்ற உங்கள் மனைவி உங்களை தேடி வருவாள். உங்கள் குடும்பம் கட்டப்படும். சமாதானம் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேசிகளையும், ஸ்திரீகளின் சிநேகத்தையும் நீங்கள் தேடி ஓடி செல்ல மாட்டீர்கள்.
தேவ திட்டத்திற்கு
மாறாக திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் பலிபீடத்தில் வாழ்க்கையை
தூக்கி வைப்பதன் மூலமே அதை சரி செய்யலாம்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE
Glory to t
ReplyDelete