தனிமையில் தூதர்களின் பணி விடை
இந்தக் கொள்ளை நோயின் காலத்தில் இரட்சிக்கப்பட்ட அநேக தேவனுடைய பிள்ளைகள் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சிலர், மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நேரங்களில் உதவி செய்வதற்கு யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு சோர்ந்து போகின்றார்கள். உதவி செய்வதற்கு ஆட்கள் யாரும் இல்லாமல் தனிமையாக தவிக்கும் நேரங்களில் என்ன செய்வது? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசனம் செய்தியில் தியானிப்போம். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கொண்டுப் போகப்பட்டார். யாரும் இல்லாத அந்த வனாந்தரத்தில் தனியாக நாற்பதுநாள் இரவும் பகலும் உபவாசமிருந்தார். பிசாசு அவரை சோதித்தான். இயேசு கிறிஸ்து வார்த்தையினால் அவனை ஜெயித்தார். அவன் அவரை விட்டு விலகி போனான். உடனே, அந்த வனாந்தரத்தில் யாரும் வர முடியாத இடத்தில் தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள். (மத்தேயு 4 :11).
தூதர்களைக் குறித்து எபிரேயர் 1 ஆம் அதிகாரம் 14-ம் வசனத்தில் இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இரட்சிக்கப்பட்டவர்கள் தனிமையில் வனாந்தர வாழ்க்கையில் கேட்பாரற்று, சின்ன சின்ன உதவிக்கு கூட ஆள் இல்லாமல் தவிக்கும் போது, அவர்களுக்கு பணிவிடை செய்யும்படிக்கு பரலோகம் தூதர்களை அனுப்புகின்றது. அனுப்பப்பட்ட தூதர்கள் வந்து, தனிமையில் தவிப்பவர்களுக்கு பணிவிடை செய்வார்கள்.
உதவி என்பது வேறு, பணிவிடை என்பது வேறு, ஒன்றை சொல்லும்போது அதற்கு வாயினால் பதிலை சொல்லாமல் அதை செய்து முடிப்பதையே விடையாக கொடுப்பதுதான் பணிவிடை ஆகும். உதாரணமாக தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் ஆம், இல்லை அல்லது கொண்டு வருகின்றேன் என்று வாயினால் சொல்லாமல், தண்ணீரைக் கொண்டுவந்து தருவதுதான் பணிவிடை ஆகும். இவ்வாறு பணிவிடை செய்வதற்காக தூதர்கள் அனுப்பப்படுகின்றார்கள்.
இந்தக் கொள்ளை நோயின் காலத்தில் அநேக இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்கோ, பணிவிடை செய்வதற்கோ யாரும் இல்லாததால் கஷ்டப்படுகின்றார்கள். உதவி செய்வதற்கு ஆட்கள் இருந்தும் உதவி செய்ய முடியாத சூழல் உள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் கொஞ்சம் கூட சோர்ந்து போகாமல், ஆண்டவரே! எனக்கு பணிவிடை செய்ய உம்முடைய தூதர்களை அனுப்பும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கும்போது, ஜெபத்தைக் கேட்கின்ற பரலோக தேவன் தூதர்களை அனுப்புவார். அவர்கள் யாரும் இல்லாத நேரத்திலும், யாரும் வர முடியாத இடத்திற்கும் வந்து பணிவிடை செய்வார்கள். நீங்கள் தண்ணீர் வேண்டும் என்று நினைத்தாலே போதும், கொஞ்ச நேரத்தில் யார் மூலமாவது தண்ணீர் வந்துவிடும். சாப்பாடு வேண்டும் என்று நினைத்தால் போதும் உடனே யார் மூலமாவது சாப்பாடு வரும்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை உதவி செய்ய யாரும் இல்லாமல் மருத்துவமனையில் தனியாக தவிக்கலாம். இந்த தீர்க்கதரிசன செய்தியின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் பேசுகின்றார். பரலோக தேவனை நோக்கி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பணிவிடை செய்ய தூதர்களை அனுப்பும் என்று ஜெபம் செய். உன் ஜெபத்தை கேட்கும் தேவன் கண்டிப்பாக பணிவிடை செய்ய தூதர்களை அனுப்புவார். அந்த தூதர்கள் வந்து உனக்கு பணிவிடை செய்வார்கள். உன் தனிமை மாறும். உன் சிறையிருப்பு மாறும். சீக்கிரம் நீங்கள் சுகமாவீர்கள்.
(குறிப்பு: அநேக தேவனுடைய பிள்ளைகள் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் இந்த செய்தியை அநேகருக்கு share செய்யுங்கள். கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவரின் விசுவாசத்தினை தட்டி எழுப்பி தனிமையை போக்க இது உதவும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment