ஆண் குழந்தை-தேவனுடைய பரிபூரண திட்டம்
.jpeg)
சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பமாகும். கொஞ்ச ஜனங்களாக இருந்த இஸ்ரவேல் மக்களை எகிப்துக்கு அனுப்பி, அவர்களுடைய சந்ததியை பலுகி பெருகச் செய்தார். எகிப்து என்பது பாவமாகும். பாவத்திலிருந்தாலும் சந்ததிகள் பெருக வேண்டும் என்பது சர்வவல்ல தேவனுடைய விருப்பமாகும். இதைக் குறித்து கடந்த நாட்களில் வெளிவந்த ’சந்ததி பெருக்கம் தேவனுடைய விருப்பம்’ என்ற தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானித்தோம். அதை வாசிக்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து முதலில் அந்த தீர்க்கதரிசன செய்தியை வாசித்து விட்டு இதை வாசியுங்கள். CLICK HERE இந்த தீர்க்கதரிசன செய்தியில் சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பம். அதிலும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பது தேவனுடைய பரிபூரணச் சித்தம் அதாவது நீண்ட நெடிய நாட்களாக குழந்தைக்காக காத்திருக்கின்றவர்கள் முதல் குழந்தையாக ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதே தேவனுடைய பரிபூரணச் சித்தம் என்பதனைக் குறித்து விரிவாக தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் வாசியுங்கள். நீங்களும் நீண்ட நெடிய நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தால், சீக்கிரத்தில் ஒரு ஆண் குழந்தைய...