மிகப்பெரிய சூனியம்


                       

    சூன்யம் என்பது பரலோகத்தில் சட்டச்சிக்கலை ஏற்படுத்தி கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களை, அதாவது நியாயமாக கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களைக்கூட நமக்கு கிடைக்கவிடாமல் தடைச் செய்வது சூன்யம் ஆகும். இதை செய்கின்றவர்கள் சூனியக்காரர்கள் என்றும் இதன் மூலமாக  கிரியைச் செய்யும் ஆவி சூனியஆவி என்றும் அழைக்கப்படும். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சூனியக்காரன் சூனியம் செய்து கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் தடுப்பான். இது சாதாரணமான சூனியம் ஆகும். இது எளிதில் கண்டுப்பிடித்து உடைத்துவிடலாம்.

           சில நேரங்களில் ஊழியக்காரர்கள், தீர்க்கதரிசிகள், ஆவிக்குரியவர்கள் தங்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சூனியம் செய்து, தேவனுடைய பிள்ளைகளின் ஆசீர்வாதங்களைத் தடுப்பார்கள். இது மிகப்பெரிய சூனியம் ஆகும். இதை யாராலும் எளிதில் கண்டுப்பிடிக்க முடியாது. இந்த வகை சூனியத்தினால் பாதிக்கப்பட்டு பரலோக ஆசீர்வாதங்களை இழந்து போனவர்கள் மிகமிக அதிகம்.

        தேவஊழியர்கள் சூனியம் செய்வார்களா? அது எப்படி? என்பதாய் ஆச்சரியத்துடன் நீங்கள் கேட்கலாம். அதைக் குறித்துதான் இந்த தீர்க்கதரிசனம் செய்தியில் கொஞ்சம் விரிவாக தியானிக்கப் போகின்றோம். ஜெபத்துடன் இந்த தீர்க்க தரிசன செய்தியை வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உங்களுடன் இடைப்படுவார். உங்கள் வாழ்க்கையில் உள்ள மிகப்பெரிய சூனியக் கட்டை வெளிப்படுத்தி, அதை உடைத்து எறிவார்.       

       ஒரு சகோதரர் குடும்பமாக தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரு ஊழியக்காரரிடம் ஜெபிக்கச் சென்றார். வேலைவாய்ப்பின்றி, வருமானமின்றி, சமாதானமின்றி இருந்த அந்த குடும்பத்தின் பிரச்சனைகள் மாற வேண்டும் என்பதற்காக ஜெபிக்க சொன்னார்கள். அவர்களது பிரச்சினைகளை அறிந்த அந்த ஊழியக்காரர், அவர்களுக்காக பாரப்பட்டு ஊக்கமாக கருத்தாக ஜெபித்தார். ஜெபத்தை முடித்த பின்பு, அவர்களிடம் உங்கள் உறவினர்கள் சூனியம் வைத்து விட்டதாகவும், அதை உடைத்து ஜெபியுங்கள் என்றும் ஆலோசனைச் சொல்லி, அவர்களை அனுப்பி விட்டார்.

         இதைக் கேட்ட குடும்பத்தாருக்கு ஒரு விதமான பயம் கலந்த திகில் பிடித்து விட்டது. யார் நமக்கு விரோதமாக சூனியம் செய்தார்கள்? எந்த உறவினர்? என்று மனதிற்குள்ளே தேட ஆரம்பித்து விட்டார்கள். இவர்களா? அவர்களா? என்று யோசித்து யோசித்து குழம்ப ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடைய தூக்கமும் கெட்டது. மறுபடியும் அதே ஊழியக்காரரிடம் சென்று யார் என்று விசாரித்த போது,  உங்கள் அண்ணன் வீட்டார்தான் சூனியம் செய்தார்கள் என்று, அதை பரலோக வெளிப்பாடாக கூறிவிட்டார். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு சொன்னாரோ அல்லது மாம்சத்தில் சொன்னாரோ தெரியாது. உண்மையிலேயே அந்த குடும்பத்தினர் சூனியத்தினால் தாக்கப்பட்டார்களா என்பதும் தெரியாது. ஆனால், ஊழியக்காரர் ஜெபித்து அந்த ஆலோசனைகளை சொன்னப் பின்பு மிகப்பெரிய சூனியம் அவர்கள் குடும்பத்தினை தாக்கி விட்டது.

          இதுவரை அண்ணன் வீட்டாரோடு ஐக்கியமாகவும் சமாதானமாகவும் இருந்த அவர்கள் இப்பொழுது பேசுவதை குறைத்து கொண்டார்கள். இவன் என்னை அழிப்பதற்கு சூனியம் செய்தவன் என்று கசப்பான வேர் அவர்களுக்குள் முளைத்தது. தன் சகோதரனை பார்க்கும்போதெல்லாம் எரிச்சல், கோபம், கசப்பு, ஆத்திரம் வந்தது. எந்த அளவுக்கு ஆத்திரம் வந்தது என்றால், எனக்கு சூனியம் செய்தவனை கொலை செய்ய வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அந்த ஆத்திரம் இருந்தது. 

    பொதுவாக யார் மீதாவது எரிச்சல், கோபம், கசப்பு இருந்தாலே பரலோக தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்கள் தடைப்படும். அதுமாத்திரமல்ல தேவப்பிரசன்னமும் தடைப்படும். அந்த ஊழியக்காரர் சொன்ன வார்த்தையினிமித்தம் அவர்கள் அண்ணன் வீட்டார் மீது தீராத பகை, கசப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், பரலோக ஆசீர்வாதம் தடைப்பட்டு இன்னும் அதிகமாகவே குடும்பத்தில் தரித்திரம் ஏற்பட்டு விட்டது. தேவப்பிரசன்னம் தடைப்பட்டதால் நிறைய அசுத்த ஆவிகள் தாக்க ஆரம்பித்துவிட்டன. முன் நிலைமையைவிட பின் நிலைமை மிக  மோசமாக மாறியது.

         நிலைமை மோசமாக மோசமாக அவர்கள் அண்ணன் வீட்டார் மேல் இன்னும் அதிகமாகவே கோபமும், எரிச்சலும்  வந்தது. அண்ணன் வீட்டார் மேல் கோபம், கசப்பு வர வர குடும்பத்தில் தரித்திரம் வந்தது. தரித்திரம் வர வர அண்ணன் வீட்டார்தான் சூன்யம் செய்கின்றார்கள் என்று கோபம் வந்தது. இப்படி மாறி மாறி நடந்தது. ஒரு கட்டத்தில் அருவாளை எடுத்துக் கொடுத்து உன் அண்ணனை வெட்டி கொன்றுவிடு என்று அவனுடைய மனைவி கூறும் அளவுக்கு நிலைமை விபரீதமாக மாறியது.

         பொதுவாக இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக யாரும் மாந்திரீகமோ, செய்வினையோ, பில்லி சூன்யமோ  செய்யமுடியாது. மீறி செய்தாலும் பரிசுத்த ஆவியானவர் அதை உடனே உடைத்து எறிவார்.  ஜெபிக்க சென்ற அந்த ஊழியக்காரர் சூன்ய கட்டு இருப்பதனை கண்டுப்பிடித்த மாத்திரத்தில் ஜெபித்தாலே போதும் அது உடனே உடைந்து விடும். யார் செய்தார்கள் என்று  யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அவரோ உங்கள் அண்ணன் வீட்டார் சூன்யம்  செய்து விட்டார்கள் என்று கூறிவிட்டார். இது அவர்களின் குடும்பத்தில் பெரிய பிரச்சனையை கொண்டு வந்து விட்டது. மிகப்பெரிய சூனியமாக மாறி பெரிய ஆசீர்வாதங்களை தடை செய்துவிட்டது.

        கடைசியில் என்னிடம் போன் செய்து ஆலோசனைக் கேட்டார்கள். அவர்களிடம் சத்தியத்தை எடுத்து கூறினேன். அண்ணன் குடும்பத்தாரை மன்னித்து ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னேன். அதன்படி தொடர்ந்து ஜெபித்தார்கள். அவர்கள் மேல் உள்ள கசப்புகள் குறைந்தன. எரிச்சல்கள் குறைந்தன. ஆத்திரம் குறைந்தது. எல்லாம் கட்டுக்களும் அறுக்கப்பட்டன. பரலோக தேவன்  அற்புதங்களை செய்தார். ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார்கள்.

      இந்த  சம்பவத்தினை ஆழ்ந்து தியானிக்கும்போது அந்த ஊழியக்காரர்தான் மிகப் பெரிய சூனியம் செய்து விட்டார் என்பது புலப்படுகின்றது. அவர் தெரிந்து செய்தாரோ, தெரியாமல் செய்தாரோ என்பது தெரியாது. ஆனால், சொன்ன அந்த ஆலோசனை மிகப்பெரிய சூனியமாக மாறிவிட்டது. குடும்பத்தில் தரித்திரத்தினை கொண்டு வந்துவிட்டது.

      இன்றைய நாட்களிலும் கூட அநேக  தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்பதற்காக ஊழியக்காரர்களைத் தேடி செல்கின்றார்கள். அது பாவம் அல்ல… அது நல்லது தான். ஆனால், அவர்கள் மூலமாக வரும் ஆலோசனைகளைத் தேவசமூகத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சத்தியத்தின்படி இது உண்மையா? என்று சோதித்துப்பார்க்க வேண்டும். இல்லையென்றால்,  தங்களுக்கு தெரியாமலே சூனியம் செய்கின்ற சூனியக்காரர்களாக இருக்கின்ற ஊழியக்காரர்களுக்கும்,  வெளிப்பாடு என்ற பெயரில் சூனிய வார்த்தைகளை சொல்லும் தீர்க்கதரிகளுக்கும் சிக்கி தங்கள் குடும்ப சமாதானத்தை இழக்க நேரிடும். இதற்கு தேவனுடைய பிள்ளைகள் தங்களை விலக்கி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் சத்தியத்துக்கு விரோதமாக மறுவார்த்தைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

 

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..