ஆண் குழந்தை-தேவனுடைய பரிபூரண திட்டம்
சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பமாகும்.
கொஞ்ச ஜனங்களாக இருந்த இஸ்ரவேல் மக்களை எகிப்துக்கு அனுப்பி, அவர்களுடைய சந்ததியை பலுகி
பெருகச் செய்தார். எகிப்து என்பது பாவமாகும். பாவத்திலிருந்தாலும் சந்ததிகள் பெருக
வேண்டும் என்பது சர்வவல்ல தேவனுடைய விருப்பமாகும். இதைக் குறித்து கடந்த நாட்களில்
வெளிவந்த ’சந்ததி பெருக்கம் தேவனுடைய விருப்பம்’ என்ற தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக
தியானித்தோம். அதை வாசிக்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து முதலில் அந்த தீர்க்கதரிசன
செய்தியை வாசித்து விட்டு இதை வாசியுங்கள். CLICK HERE
இந்த தீர்க்கதரிசன செய்தியில் சந்ததிப்பெருக்கம் தேவனுடைய விருப்பம். அதிலும்
ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பது தேவனுடைய பரிபூரணச் சித்தம் அதாவது நீண்ட நெடிய நாட்களாக
குழந்தைக்காக காத்திருக்கின்றவர்கள் முதல் குழந்தையாக ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதே
தேவனுடைய பரிபூரணச் சித்தம் என்பதனைக் குறித்து விரிவாக தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன்
வாசியுங்கள். நீங்களும் நீண்ட நெடிய நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தால்,
சீக்கிரத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பது நிச்சயம். இந்த செய்தியின் மூலமாக
பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உங்களோடு பேசுவார்.
இஸ்ரவேல் மக்களின் சந்ததிப் பெருக வேண்டும் என்று விரும்பிய தேவன், யோசேப்பு
அதிபதியாக இருந்த எகிப்து தேசத்துக்கு கொண்டு சென்றார். அங்கே இஸ்ரேல் புத்திரர் மிகுதியாக
பலுகிப் பெருகி, பலத்திருந்தார்கள். தேசம் அவர்களால் நிறைந்திருந்தது. இஸ்ரவேல் மக்களின்
சந்ததிப் பெருகியது. (யாத்திராகமம் 1:7)
யோசேப்பைப் பற்றி அறியாத புதிய ராஜன்
ஒருவன் எகிப்துக்கு அதிபதியாக தோன்றினான். அவன் இஸ்ரவேல் மக்கள் தன்னுடைய தேசத்தில்
ஏராளமானவர்களாகவும், பலத்தவர்களாகவும் இருப்பதைக் கண்டான். எனவே, இஸ்ரவேல் மக்கள் பெருகாதபடிக்கு
ஒரு உபாயம் பண்ண வேண்டும் என்று சொன்னான். ஏனெனில், இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினால் எகிப்தின்
பகைஞரோடு சேர்ந்து யுத்தம் செய்து, எகிப்தை விட்டு வெளியே சென்று விடுவார்கள் என்பதாய்
யோசித்தான். ஆகையால் அவர்கள் பெருகாதபடிக்கு தந்திரமான யோசனைகளை செய்தான்.( யாத்திராகமம்
1:9,10)
அவர்களை சுமை சுமக்கின்ற வேலையில் ஒடுக்கும்படிக்கு
அவர்கள் மேல் விசாரணைக்காரர்களை வைத்தான். அவர்கள் இஸ்ரவேல் மக்களை சுமைகளை சுமக்கச்
செய்து பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டகச் சாலையை கட்டினார்கள். உலக வேலைகளில் ஒடுக்கினால்
அவர்கள் சந்ததிப் பெருகாது என்பது எகிப்து ராஜாவின் எண்ணம். (யாத்திராகமம் 1:11)
எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள்
பலுகிப் பெருகினார்கள். சந்ததிப் பெருக்கம் தேவனுடைய விருப்பமாக இருக்கும்போது கண்டிப்பாக
அதை பிசாசு தடைச் செய்வான். சந்ததி பெருகாதபடிக்கு பல்வேறு போராட்டங்களையும், தடைகளையும்
கொண்டு வருவான். ஆனால், சந்ததிப் பெருக்கம் தேவனுடைய விருப்பம் என்பதனால், அதாவது என்னுடைய
விருப்பம் அல்ல… உங்களுடைய விருப்பம் அல்ல… நம்முடைய விருப்பம் அல்ல சர்வவல்ல தேவனுடைய
விருப்பம் என்பதனால் அவனால் ஒன்றும் கிழிக்க முடியாது. சந்ததி பெருக்கத்தினை தடுக்க
முடியாது. எவ்வளவாய் ஒடுக்குகின்றானோ அவ்வளவாய் பலுகிப் பெருகுவார்கள். அப்படித்தான்
இஸ்ரேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். இதைக் கண்ட எகிப்தியர்கள் எரிச்சல் அடைந்தார்கள்.
(யாத்திராகமம் 1:10)
இன்னும் அதிகமாக எகிப்தியர் இஸ்ரேல்
புத்திரரை வேலை வாங்கினார்கள். சாந்தும் செங்கலும் செய்கின்ற வேலையிலும், வயலில் செய்யும்
வேலைகளிலும் அவர்களை ஒடுக்கி, கொடுமையாக வேலை வாங்கி, ஜீவனை கசப்பாக்கினார்கள். அதிகமாகவே
சந்ததி பலுகி பெருகியது. இஸ்ரேல் மக்களின் சந்ததி பெருக்கத்தினை தடுக்க முடியாது என்பதனை
உணர்ந்த எகிப்தின் ராஜா இன்னும் ஒரு தந்திரமான யோசனையை செய்தான். சிப்பிராள், பூவாள்
என்னும் எபிரெய மருத்துவச்சிகள் அந்நாட்களில் இஸ்ரவேல் மக்களுக்கு பிரசவம் பார்த்தார்கள்.
அவர்களை அழைத்து எபிரெய பெண்களுக்கு மருத்துவம் செய்யும்போது, ஆண் பிள்ளைகள் என்றால்
கொன்றுப் போடுங்கள் என்றும், பெண் பிள்ளைகள் என்றால் உயிரோடு இருக்கட்டும் என்றும்
கட்டளையிட்டான். (யாத்திராகமம் 1:14-16) எவ்வளவு ஒடுக்கியும், கஷ்டமான வேலைகளை செய்யச்
சொல்லியும் கொடுமைப்படுத்தியும் சந்ததிப் பெருக்கத்தினை அவனால் தடைச் செய்ய முடியவில்லை.
இஸ்ரேல் மக்களின் சந்ததிப் பெருகியது. எனவே, ஆண் பிள்ளைகளை மட்டும் பெருகாமல் தடுப்போம்
என்று திட்டமிட்டான்.
எவ்வளவு பிரச்சனைகளை கொண்டு வந்தும், போராட்டங்களையும்,
பெலவீனங்களையும் கொண்டு வந்தும் உங்கள் சந்ததி பெருக்கத்தினை பிசாசினால் தடுக்கவே முடியாது.
இது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், போராட்டத்தினை கொண்டு வந்து, தந்திரத்தினால்
தடுக்க நினைப்பான். விசுவாசத்தில் நீங்கள் உறுதியாக அவனுக்கு எதிர்த்து நின்றால், அவன்
தன்னுடைய திட்டத்தினை மாற்றி விடுவான். சரி குழந்தைகள் பிறக்கட்டும். ஆனால், ஆண் குழந்தை
மட்டும் வேண்டாம் என்று ஆவியில் சொல்லுவான். பெண் பிள்ளைகளைப் பிறக்க செய்வான். முதல் குழந்தையாக ஆண் பிள்ளைகளை பெற்றெடுப்பதை தடை
செய்வான்.
பரிசுத்த வேதத்தில் அன்னாள் என்ற ஒரு
ஸ்திரீயை குறித்து 1சாமுவேல் ஒன்றாம் அதிகாரத்தில்
வாசித்திருப்போம். எல்க்கானாவின் மனைவி ஆவாள்.
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒன்று அன்னாள் மற்றொன்று பெனின்னாள். பெனின்னாளுக்கு குழந்தைகள் இருந்தார்கள்.
அன்னாளுக்கோ குழந்தை இல்லை. தேவன் அவள் கர்ப்பத்தினை அடைத்திருந்தார்.(1 சாமுவேல்
1:5)
தேவன் ஏன் அவளுடைய கர்ப்பத்தினை அடைக்க வேண்டும்? ஏன் அவளுக்கு பிள்ளை இல்லை?
அவளுக்கு எந்த ஒரு குறைவும் கிடையாது. எல்க்கானா அவனை சிநேகித்து இரட்டிப்பான பங்கை
கொடுத்தான். பத்து பிள்ளைகள் இருந்தால் எவ்வளவு
மகிழ்ச்சி, சந்தோஷம், சமாதானம் கிடைக்குமோ அவ்வளவாய் தன்னுடைய கணவனாகிய எல்க்கானா மூலமாக
கிடைத்தது. அதனால், பிள்ளைகளைக் குறித்த கவலைகள் இல்லை. எந்த குழந்தைப் பிறந்தாலும்
போதும் என்று நினைத்தாள். ஆண்குழந்தை பிறந்தாலும்
போதும் பெண் குழந்தை என்றாலும் போதும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது. பிள்ளைகள்
இல்லையென்றாலும் பரவாயில்லை என்ற எண்ணமும் அவளுக்குள் இருந்தது. எனவே, தேவன் அவளுடைய
கர்ப்பத்தினை அடைத்தார்.
மேலும், பெனின்னாள் மூலமாக அவள் துக்கம்படும்படியாக பேசுவார். வார்த்தைகளினால் அவள் அன்னாளை துக்கப்படுத்தினாள். ஒருமுறை கர்த்தருடைய ஆலயத்திற்கு குடும்பமாக சென்றார்கள். அந்நேரத்தில் பெனின்னாள்
அன்னாளை மனமடிவாக்கினாள். அவள் சாப்பிடாமல் அழுதுக் கொண்டிருந்தாள். புருஷன் எவ்வளவு
சமாதானப்படுத்தியும் ஆறுதல்படுத்தியும் சமாதானமாகவில்லை.
எழுந்து கர்த்தருடைய சமூகத்தை நோக்கி ஓடினாள். தேவசமூகத்தில் மனங்கசந்து சேனைகளின் கர்த்தாவே! உம்முடைய அடியாளின் சிறுமையை
கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தால், அவன்
உயிரோடிருக்கும் சகல நாளெல்லாம் உமக்கு ஒப்புக் கொடுப்பேன். அவன் தலையின் மேல் சவரகன்
கத்தி படுவதில்லை என்று பொருத்தனை பண்ணினாள். (1 சாமுவேல் 1:11)
இதுவரை குழந்தைகளை குறித்தும், ஊழியத்தினை
குறித்தும் கவலை இல்லை. ஆனால், இப்பொழுது மனம் கசந்து அழுது விண்ணப்பம் செய்கின்றாள்.
அவள் செய்த விண்ணப்பத்தினை கவனித்து பாருங்கள். ஆண் குழந்தை தாரும் என்று கேட்கின்றாள்.
ஆண் குழந்தை கிடைத்தால்தான் ஊழியத்திற்கு ஒப்புக்
கொடுக்க முடியும். பரிசுத்த வேதத்தில் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் மலடியாக இருந்து பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள் ஆண் குழந்தையைதான் முதல் குழந்தையாக பெற்றெடுத்தார்கள். ஆண் குழந்தையைதான் துணிந்து ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்கமுடியும். இதை அறிந்து ஆண் குழந்தையை தாரும் என்று கேட்கின்றாள். நீண்ட விண்ணப்பத்தினை கேட்ட பரலோக
தேவன் ஒரு குமாரனை கொடுத்தார். கர்த்தரிடத்தில் கேட்டேன் என்று சொல்லி சாமுவேல் என்று
பேரிட்டாள். (1 சாமுவேல் 1:20)
ஆண் குழந்தை அல்ல பெண் குழந்தையே போதும்
என்பது பிசாசின் தந்திரங்களில் ஒன்றாகும். நீண்ட நெடிய நாட்களாக குழந்தை பாக்கியம்
இல்லாமல் இருப்பவர்கள் ஏதோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என்று இருப்பார்கள். உலக
நிந்தனைக்கு பயந்து, கர்ப்பவதியானாலே போதும் குழந்தை தங்கினாலும் பரவாயில்லை தங்காமல் இருந்தாலும்
பரவாயில்லை என்றிருப்பார்கள். அதாவது கர்ப்பம்தரித்து குழந்தை அபாஷன் ஆனாலும் பரவாயில்லை
என்பது அவர்களது எண்ணமாகும்.
முதல் குழந்தையாக ஆண் குழந்தை தர வேண்டும்
என்று பரலோக தேவன் திட்டம் வைத்திருக்க, இதை நன்றாக கவனித்து வாசியுங்கள். முதல் குழந்தை பெண் குழந்தை என்று திட்டம் வைத்திருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், ஆண் குழந்தைதான் என்று பரலோக திட்டம் இருக்க, பெண் குழந்தை கிடைத்தாலும் போதும் என்று இருந்தால்,
பரலோக தேவன் கர்ப்பத்தினை அடைப்பார். குழந்தை பெற்றெடுக்காதபடிக்கு செய்வார். எப்பொழுது தேவசமூகத்திற்கு சென்று ஆண் குழந்தையை தாரும் என்று கேட்கின்றார்களோ அதுவரை கர்ப்பம்
அடைக்கப்பட்டிருக்கும். கேட்கும்போது அடைக்கப்பட்டு இருக்கிற கர்ப்பம் திறக்கப்படும்.
நீண்ட நெடிய நாட்களாக கர்ப்பத்தின்
கனிக்காக காத்திருக்கும் தேவனுடைய பிள்ளைகளே! ஏதோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என்று
யோசிக்கின்றீர்களா? உங்களுக்கு முதல் குழந்தையாக பெண் பிள்ளையை கொடுக்க வேண்டும் என்று
பிசாசு யோசிக்கின்றான். ஆனால், தேவனுடைய வேலைக்காக ஆண் பிள்ளைகளை கொடுக்க வேண்டும்
என்று பரலோக தேவன் திட்டம் வைத்திருக்கின்றார்.
ஆண் குழந்தையை தாரும் என்று கேளுங்கள். ஆண் குழந்தைதான் வேண்டும் என்று அழுத்தம்
திருத்தமாக கேளுங்கள். நிச்சயமாக உங்கள் கர்ப்பம் திறக்கப்படும். தேவனுடைய சித்தத்திற்காக
ஒரு ஆண் குழந்தை உருவாகும். கர்த்தரிடத்தில் கேட்டேன் என்று சொல்லி சாமுவேல் என்று
பேரிடுவீர்கள். இல்லையென்றாலும் பரலோக தேவன் பெண் குழந்தையை கொடுத்து உங்கள் நிந்தைகளை நீக்குவார்.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு
மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
பரிசுத்த வேதத்தில் யோபு என்ற மனிதன் பிசாசினால் சோதிக்கப்பட்டான். அந்த சோதனையை பிசாசு என்ன காரணத்திற்க்காக கொண்டு வந்தான். சோதனையில் ஜெயித்த பின்பும் திரும்ப திரும்ப மறுபடியும் சோதனை வந்தது அது ஏன்? யோபு செய்த தவறு என்ன? போன்ற இரகசியங்களை உள்ளடக்கிய செய்தி யோபுவும் சோதனையும் என்ற தலைப்பில் உள்ளது. இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். இதை வாசிக்கும் போது தீர்க்கதரிசன வார்த்தைகள் உங்களுக்கு நேராக கடந்து வருவதை உணரமுடியும். தவறாமல் வாசித்து. தேவ ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். CLICK HERE
Comments
Post a Comment