நெருங்கின சீஷர்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் பல இடங்களுக்கு சென்று ஜெபித்தார். ஒருமுறை தனித்திருந்து ஜெபித்து, பரலோக பிதாவின் ஆலோசனைகளை கேட்கும்படிக்கு உயர்ந்த மலைக்குச் சென்றார். அப்பொழுது பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு ஆகிய மூன்று சீஷர்கள் மாத்திரமே அவரோடு கூட சென்றார்கள். அங்கு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. வஸ்திரம் வெளிச்சத்தினைப் போல வெண்மையாயிற்று. (மத்தேயு: 17:1, 2 ) அதேபோல் மரித்த ஜெபஆலயத்தலைவனுடைய குமாரத்தியை உயிரோடு எழுப்பச் செல்லும் போதும், இந்த மூன்று சீஷர்களைத் தவிர வேறு யாரையும் தம்மோடு கூட வருகின்றதற்கு அனுமதி கொடுக்காமல், இவர்களை மாத்திரம் தம்மோடு கூட பிள்ளை இருந்த வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கு தலீத் தாகூமி என்று சொல்லி, அந்த சிறு பெண்ணை உயிரோடு எழுப்பினார். (மாற்கு: 5: 35 -42) இந்த பூமியில் மனுஷ குமாரானாக ஊழியம் செய்த கடைசி நாட்களிலும் கூட ஜெபிக்கவும், வியாகுலப்படவும், துக்கமடையவும் கெத்செமனே தோட்டத்திற்கு சென்றார். அப்பொழுதும் கூட வேறு யாரையும் தன்னோடு கூட...