நெருங்கின சீஷர்கள்




   கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் பல இடங்களுக்கு சென்று ஜெபித்தார். ஒருமுறை தனித்திருந்து ஜெபித்து, பரலோக பிதாவின் ஆலோசனைகளை கேட்கும்படிக்கு உயர்ந்த மலைக்குச் சென்றார். அப்பொழுது பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு ஆகிய மூன்று சீஷர்கள் மாத்திரமே அவரோடு கூட சென்றார்கள். அங்கு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. வஸ்திரம் வெளிச்சத்தினைப் போல வெண்மையாயிற்று. (மத்தேயு: 17:1, 2 )

  அதேபோல் மரித்த ஜெபஆலயத்தலைவனுடைய குமாரத்தியை உயிரோடு எழுப்பச் செல்லும் போதும், இந்த மூன்று சீஷர்களைத் தவிர வேறு யாரையும் தம்மோடு கூட வருகின்றதற்கு அனுமதி கொடுக்காமல், இவர்களை மாத்திரம் தம்மோடு கூட பிள்ளை இருந்த வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கு தலீத் தாகூமி என்று சொல்லி, அந்த சிறு பெண்ணை உயிரோடு எழுப்பினார். (மாற்கு: 5: 35 -42)

 இந்த பூமியில் மனுஷ குமாரானாக ஊழியம் செய்த கடைசி நாட்களிலும் கூட ஜெபிக்கவும், வியாகுலப்படவும், துக்கமடையவும் கெத்செமனே தோட்டத்திற்கு சென்றார். அப்பொழுதும் கூட வேறு யாரையும் தன்னோடு கூட கூட்டிக் கொண்டு செல்லாமல் இந்த மூன்று சீஷர்களை மாத்திரமே அழைத்துக் கொண்டு சென்றார். (மத்: 26: 36, 37)

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற சீஷர்கள் அநேகர் அவர் இந்த பூமியில் ஊழியம் செய்த நாட்களில் இருந்தார்கள். அதில் எப்பொழுதும் தம்மோடு கூட இருப்பதற்காக பன்னிரண்டு பேரை அப்போஸ்தலராக தேர்ந்தெடுத்தார். இந்த பன்னிரண்டு பேரும் எப்பொழுதும், எந்நேரமும் அவரோடு கூட இருப்பார்கள். எங்கு சென்றாலும் அவரோடு கூட செல்லுவார்கள் (மாற்கு 3:13-19). அதில் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு ஆகிய மூன்று சீஷர்களை மிக நெருக்கமாக வைத்திருந்தார். மிக மிக முக்கியமான காரியங்களுக்கு இந்த மூன்று சீஷர்களை மாத்திரமே கூட்டிக் கொண்டு செல்வார்.

  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களாக இருந்து அவரை பின்பற்றுவது எளிதான காரியமல்ல. தன்னைத்தான் வெறுத்து தனக்கு உண்டான ஆஸ்தி, ஐசுவரியம், நிலங்கள் எல்லாவற்றையும் வெறுத்துதான் அவரை பின்பற்ற முடியும் (மாற்கு 10:29-31). இந்த பன்னிரண்டு பேரும் அப்படித்தான் எல்லாவற்றையும் வெறுத்துத்தான் அவரை பின்பற்றினார்கள். இந்த பன்னிரண்டு பேரும் அவருக்கு சித்தமானவர்கள்தான். ஆனாலும்  அதில் மூன்று சீஷர்களை மாத்திரமே தனக்கு மிக நெருங்கின சீஷர்களாக விசேஷித்தப்படுத்தி வைத்திருந்தார்.

  பன்னிரண்டு சீஷர்களில் இந்த மூன்று பேரை மாத்திரமே நெருங்கின சீஷர்களாக வைத்திருக்க காரணம் என்ன? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு சீஷர்களாக இருப்பதே பெரிய காரியம். அதிலும் நெருங்கின சீஷர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? அவர் சொல்லும் மிக முக்கியமான இரகசியங்களை அறிந்துக் கொள்ள என்ன தகுதி வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு பதிலை இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

  பேதுரு, யாக்கோபு, யோவான் இந்த மூன்று சீஷர்களும் மீனவர்களாக இருந்தார்கள். கடலில் வலைப்போட்டு மீன் பிடிப்பதே அவர்களது தொழில். இவர்கள் படிப்பறியாதவர்களும், பேதமையுள்ளவர்களுமாக இருந்தார்கள் (அப்போஸ்தலர் 4:13). என் பின்னே வாருங்கள்! உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று சொல்லி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அழைத்தவுடன் படகு, வலை, குடும்பம் என எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர் பின்னே சென்றார்கள் (மத்தேயு 4:18-22). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எது சொன்னாலும் அதை அப்படியே விசுவாசிக்கும் முரட்டு விசுவாசம் அவா்களுக்குள் இருந்தது. ஏனென்றால், அவருடைய வார்த்தையை விஞ்ஞானத்தோடும், மருத்துவ அறிவியலோடும் ஒப்பிட்டு பார்க்க மாட்டார்கள். படிப்பறிவு இல்லாததினால் ஒப்பிட்டு பார்க்கவும் தெரியாது. ஆதலால் அப்படியே விசுவாசிப்பார்கள்.

  மரித்த சிறுமியை உயிரோடு எழுப்ப வேண்டும் என்று சொன்னால், உடனே வாரும் செல்வோம் என்று சென்று விடுவார்கள். மரித்தவனை எப்படி எழுப்ப முடியும்? இரத்த ஓட்டம் நின்றிருக்குமே! இருதயம் நின்றிருக்குமே! சரீரம் அழுகியிருக்குமே! எப்படி இது சாத்தியம் என்று மருத்துவ விஞ்ஞானத்தோடு ஒப்பிட்டு அவிசுவாசமாக பேசமாட்டார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை முழு மனதாக விசுவாசிப்பார்கள்.

  ஆனால், மற்ற சீஷர்களுக்கோ இந்த விசுவாசம் ஒருவேளை இருந்திருக்காது. அவர்கள் படித்தவர்கள். எனவே, சில வேளைகளில் யோசித்திருப்பார்கள். ஆதலால் அவர்களை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்லாமல் இந்த மூன்று சீஷர்களை மாத்திரமே கூட்டிக் கொண்டு சென்றார். இவர்கள் நெருக்கமான சீஷர்களாக இருந்தார்கள்.

  கர்த்தருடைய வார்த்தை என்பது வல்லமையுள்ளது. அதை எதோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அறிவியலைக் கொண்டோ விஞ்ஞானத்தைக் கொண்டோ அல்லது உலக ஞானத்தைக் கொண்டோ அதை நிதானிக்க முடியாது. அற்புதம் நடக்கும் என்றால் கண்டிப்பாக நடக்கும். எப்படி நடக்கும்? எங்கு நடக்கும்?  என்று கொஞ்சம் கூட யோசிக்கக் கூடாது. வார்த்தையை விசுவாசிக்கும் முரட்டு விசுவாசம் வேண்டும். அப்படி முரட்டு விசுவாசம் இருக்குமென்றால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நெருங்கின சீஷர்களாக இருக்க முடியும். அவரோடு சஞ்சரித்து பரலோகத்தின் அநேக இரகசியங்களை அறிந்து கொள்ள முடியும். ஆசீர்வாதத்தினையும் அற்புதத்தினையும் மிக தாரளமாக பெற்றுக்கொள்ள முடியும்.

  இதை வாசித்து தியானிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! பேதுரு, யோவான் யாக்கோபு போல தேவனுடைய வார்த்தைகளை விசுவாசியுங்கள். முரட்டு விசுவாசம் உங்களுக்குள் வரட்டும்.  பரலோக தேவனுக்கு நெருங்கின சீஷர்களாக மாறுவீர்கள். ஆமென்.

 

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)


இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..