உறவுகள் வலிமைப்பட ...
உலக மக்களிடம் பல்வேறு உறவு முறைகள்
உள்ளன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூட, இந்த பூமியில் உள்ள நமக்கு நல்ல மணவாளனாகவும்,
நல்ல தகப்பனாகவும், நல்ல சகோதரனாகவும், நல்ல நண்பனாகவும், நல்ல எஜமானனாகவும் உள்ளார்.
அதேபோல் இந்த பூமியிலும் தகப்பன், தாய், மனைவி, கணவன், அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா,
பெரியம்மா, சித்தி என பல்வேறு உறவு முறைகள் உள்ளன.
ஆனால், பரலோகத்தில் எந்த உறவு முறையும் கிடையாது. உயிர்த்தெழுதலில் கொள்வனையும், கொடுப்பனையும்
இல்லை என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை சோதித்த சதுசேயர்களிடம் சொன்னார்.(மத்தேயு
22:23-30) அங்கே தேவதூதரைப் போல் இருப்பார்கள். அதாவது பரலோகத்தில் கணவன்-மனைவி என்ற
எந்த உறவு முறையும் கிடையாது. தேவ தூதர்கள் போல்தான் ஒவ்வொருவரும் இருப்பார்கள். அதனால்
யாருடைய கணவன் இவன் என்றும் யாருடைய மனைவி இவள் என்றும், யாருடைய பெற்றோர்கள் இவர்கள்
என்றும் யாருக்கும் எதுவுமே தெரியாது.
இந்த பூமியில் மாத்திரமே கணவன் மனைவி என்றும், கொள்வனை கொடுப்பனை என்றும் நியமிக்கப்பட்டு
உள்ளது. எதற்காக இந்த நியமனம்? பக்தியுள்ள சந்ததிப் பிறக்க வேண்டும் என்பதற்காகவும், குடும்பமாக எல்லாரும் பரலோகம்
செல்ல வேண்டும் என்பதற்காகவும் பூமியில் இந்த நியமத்தை பரலோக தேவன் நியமித்துள்ளார்.
அதில் கணவன்-மனைவி என்ற உறவுமுறை மிகவும் சிறப்பான ஒன்றாகும். மற்ற உறவு முறைகள்
எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், பக்தியுள்ள சந்ததியை பெற்றெடுக்க கணவன்-மனைவி
உறவு முறை மிகவும் வலிமையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
குடும்பத்தின் அஸ்திவாரம் வலிமையாக இருக்கும். பக்கியுள்ள சந்ததியைப் பெற்றெடுக்க முடியும்.
குடும்பங்கள் சிதைக்கப்படாமல் பாதுகாக்க கணவன்-மனைவி உறவுகள் வலிமைப்படுவது இன்றியமையாத
ஒன்றாகும்.(மல்கியா 2:14,15)
இந்த தீர்க்கதரிசன செய்தியில் குடும்பத்தில் கணவன்-மனைவி
உறவுகள் வலிமைப் பட என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பதனைக் குறித்து
விரிவாக தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.
1.சாபத்தை சொல்லக்கூடாது:
சின்ன சின்ன பிரச்சனைகள் குடும்பங்களில்
வருவது சகஜமான ஒன்றாகும். இதற்கு எந்த ஒரு குடும்பமும் விதிவிலக்கல்ல. எவ்வளவு பெரிய
பரிசுத்தவானாக இருந்தாலும் சின்ன சின்ன சண்டைகள் குடும்பத்தில் வந்ததில்லை என்று சொல்ல முடியாது. யாராலும் எவராலும் சொல்லவே முடியாது. சண்டைகள்,
போராட்டங்கள் சமாதானக்குலைச்சல்கள் வருவது இயல்பான ஒன்றாகும். ஆனால், அப்படி சண்டைகள்
வரும்போது வாயைத் திறந்து கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் சபிக்கவே கூடாது. அதுவும்
பரலோக தேவனால் அபிஷேகம் பண்ணப் பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆசீர்வதிக்க
வேண்டியதேயன்றி சாபத்தை சொல்லக்கூடாது. ஏனென்றால், தன் துணை மீது சாபத்தை சொல்லும்
போது பரலோக தேவன் அதை பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார். உடனே நீதியைக் சரிக்கட்டுவார்.
சின்ன சின்ன பிரச்சனைகளையும் சிட்சைகளையும் அனுமதிப்பார். ஒருவேளை பிரிவினைகளைக்கூட
அனுமதிக்கலாம். ஆதலால், இதில் தம்பதியர் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
சரி தம்பதிக்குள் என்னென்ன காரியங்களில் சாபங்கள் வருகின்றன? யாரெல்லாம் சபிக்கின்றார்கள்?
எதற்கெல்லாம் சாபங்களை போடுகின்றார்கள் என்பதைக்
குறித்து கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.
A.வருமானம் இல்லாமையால் போடப்படும் சாபம்:
சில வருடங்களுக்கு முன்பு ஒரு சபையில்
கர்த்தருடைய வார்த்தையை கொடுக்க என்னை அழைத்திருந்தார்கள். அங்கு சென்று ஊழியங்களை
முடித்த பின்பு, ஒரு சகோதரி என்னிடத்தில் வந்து, தன் கணவன் படுத்த படுக்கையாக இருக்கின்றார்
என்றும், அவருக்காக ஜெபிக்க வர வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டார்கள். அவர்களது வீட்டிற்கு ஜெபிக்க சென்றேன். அந்த சகோதரியின் கணவன்
இரு கால்களும் வீங்கிய நிலையில் படுத்த படுக்கையாகவே கிடந்தார். அவருக்காக ஜெபித்த
போது பரிசுத்த ஆவியானவர் சில காரியங்களை வெளிப்படுத்திச் சொன்னார்.
அந்த சகோதரர் சாதாரணமான கூலி வேலைக்கு செல்பவர். ஏதோ குறைந்த வருமானத்தை வீட்டிற்கு
கொண்டு வருவார். சாதாரணமாக குடும்பம் நடத்த இது போதுமானதாக இருக்கும். ஆடம்பர வாழ்க்கைக்கு
வாழ ஆசைப்பட்ட அவனுடைய மனைவி அவனை சபிக்க ஆரம்பித்து விட்டாள். பணம் எங்கே? உன்னைக்
கொண்டு வருமானம் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சாபத்தை கூறினாள்.அவன் வியாதிப்பட்டான்.
அந்த கொஞ்சம் வருமானம் கூட வரக்கூடாதபடிக்கு
தடைப்பட்டது. இப்பொழுது சாப்பாட்டிற்கே கஷ்டம்.இப்பொழுது, தன் கணவனின் நிலையைக் கண்டு
அவனுக்கு சுகம் வேண்டும் என்று மனதிற்குள் ஏங்குகின்றாள். ஜெபிக்க ஓடோடி செல்கின்றாள்.
இதைபோல் தான் அநேக குடும்பங்களில் பார்க்கலாம். வருமானம் இல்லை… வேலைக்கு செல்லவில்லை…
சம்பளம் போதவில்லை… ஆடம்பரமாக வாழமுடியவில்லை என்று தன் துணையை சபிப்பார்கள். நீயெல்லாம் என்ன
மனுஷன் என்று கேட்பார்கள். கடைசியில் அவர்களின்
சாபத்தினால் வியாதிப்பட்டு மரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் அல்லது குடும்பத்தை
விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சாபங்களுக்கு தேவனுடைய பிள்ளைகள்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தன்னுடைய துணையை சபிக்க கூடாது.
B.உணர்ச்சிப் பெருக்கினால் போடப்படும் சாபம்
:
கணவன்-மனைவி உறவுகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை என்பது அத்தியாவசிமான ஒன்றாகும்.
இதை பரிசுத்த வேதம் கடமை என்று கூறியுள்ளது. வேறு எந்த உறவு முறைக்கும் இல்லாத ஒன்று
இந்த உறவுமுறைக்கு உள்ளது என்றால் அது தாம்பத்திய வாழ்க்கைதான். சில நேரங்களில் பிசாசின்
தந்திரத்தினாலும், சரீர பெலவீனத்தினாலும், முன்னோர்கள் செய்த பாவத்தினாலும் சாபத்தினாலும்
கணவன்-மனைவிக்குள்ளான தாம்பத்திய வாழ்க்கைக்கு தடைகள் ஏற்படுகின்றன. இரண்டு பேரும் ஒத்துழைத்தாலும் பிரச்சனை இல்லை அல்லது
இரண்டு பேருக்கும் விருப்பமில்லை என்றாலும் பிரச்சனைகள் எதுவும் வருவதில்லை. ஆனால்,
ஒருவருக்கு விருப்பம் இருந்து ஒருவருக்கு முடியாமல் இருக்கும்போது குடும்ப உறவுகளில்
பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பாலியல் உணர்வு என்பது வலிமையான ஒன்றாகும். அதை சீக்கிரத்தில் கட்டுப்படுத்த
முடியாது. தம்பதிகளுக்குள் ஒருவருக்கு பாலியல்
உணர்வு தூண்டப்பட்டு மற்றவர் ஓத்துழைக்காமல் இருக்கும்போதும் அல்லது தான் விரும்பின
காரியத்தினை தன் துணை செய்யாமல் இருக்கும்போதும் ஒருவிதமான கோபம், எரிச்சல்கள், ஆக்ரோஷங்கள்
வருகின்றன. அந்த நேரத்தில் தன் துணையை வாயினால்
சபித்து விடுகின்றார்கள். இது மிகப்பெரிய ஆவிக்குரிய பிரச்சனைகளை கொண்டு வந்துவிடுகின்றன.
சில நேரங்களில் ஒத்துழைக்கவில்லை என்றும் அல்லது கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும்
போடப்படுகின்ற சாபம் குடும்ப பிரிவினைகளுக்கு காரணமாகின்றது. நிரந்தர பிரிவினைகள் கூட
ஏற்படுகின்றன.
ஆதலால், இந்த காரியங்களிலும் தேவனுடைய பிள்ளைகள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தாம்பத்திய வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் என்றால் சாபத்தை சொல்லாமல் ஜெபித்து சரி
செய்ய வேண்டும். என்னுடைய தாம்பத்திய வாழ்க்கையை ஆசீர்வதியும் ஆண்டவரே என்று ஜெபிக்க
வேண்டும். அதிலுள்ள கட்டுகளை உடைக்க வேண்டும். மாறாக துணையை சபித்துவிடக்கூடாது.
கணவன்
மனைவிக்குள்ளான தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள பிசாசின் தந்திரங்களை அறிந்துக்கொள்ள
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து
தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கவும் Click Here
C.ஆவிக்குரிய
வாழ்க்கைக்காக போடப்படும் சாபம்:
குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாரோ ஒருவர்
இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். யாரோ ஒருவருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றியும்,
பரிசுத்த வேதத்தை பற்றியும் நன்கு தெரிந்திருக்கும். ஆனால், தன் துணை ஆவிக்குரியவர்களாகவும்
இரட்சிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கமாட்டார்கள். அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளையும்
கண்டு ஆவிக்குரிய வைராக்கியத்தினிமித்தம் தன் வாயை திறந்து சபிப்பார்கள்.
நீ ஜெபிக்கவில்லை என்றால் வியாதி வந்துவிடும்; தேவன் உன்னை அடிப்பார்; தொழில்
நாசமாக போய்விடும் என்றும் சாப வார்த்தைகளை தாராளமாக பேசுவார்கள். இப்படி பேசுகின்ற
அந்த சாபமான வார்த்தைகள் குடும்பத்தில் பிரிவினைகளை கொண்டு வரும். இப்படி பேசினால்தான்
இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைத்து பேசுவார்கள். ஆனால் அவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள்
மாறாக, இன்னும் அதிகமாக பாவத்தில்தான் சிக்குவார்கள். பெரிய பிரச்சனைகளும் பிரிவினைகளும்தான்
குடும்பத்திற்குள் வரும்.
இந்த நேரத்தில் சபிக்காமல் இருந்தால் கூட அவர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்புகள்
அதிகம். மாறாக சபிப்பதினால் இன்னும் அதிகமாக ஆபத்திலும் சாபத்திலும் விழுவார்கள். எனவே,
தேவனுடைய பிள்ளைகள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
தன்னுடைய துணை இரட்சிக்கப்படவில்லையென்றால் சபிக்காமல் ஆசீர்வதிக்க வேண்டும்.
2.சந்தேகப்படக்கூடாது :
இந்த கடைசி நாட்களில் குடும்பங்களை பிரிக்க பிசாசு பயன்படுத்தும் ஆயுதம் சந்தேகமாகும்.
கணவனுக்கு மனைவி மேலும், மனைவிக்கு கணவன் மேலும் தீராத சந்தேகத்தினை பிசாசு கொடுத்து
குடும்பங்களை பிரிக்கின்றான். சந்தேகங்கள் வரும்போது, அதை சிந்தனையில் அடக்கி வைத்து,
விடுதலைக்காக ஜெபிப்பது நல்லது. அதைத்தான் வேதமும் விரும்புகின்றது. மாறாக அதை வாயினால்
அறிக்கை செய்து வீணான வார்த்தைகளைப் பேசும் போது அது வீண் பிரிவினைகளைக் கொண்டு வருகின்றன.
ஒரு சகோதரியின் மீது அவளது கணவனுக்கு சந்தேகம். ஒரு மனிதனின் பெயரை சொல்லி அவளை
கஷ்டப்படுத்தினான். உண்மையில் அந்த மனிதனுக்கும் அவளுக்கும் கொஞ்சம்கூட பழக்கம் கிடையாது.
பழக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. ஆனால், அவளுடைய கணவனின் வார்த்தை பழகினால்
என்ன என்ற எண்ணத்திற்குள் தள்ளியது. நாளடைவில் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டு தன் சொந்த
கணவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இப்பொழுது அவன் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டான்.
சிலர் சந்தேகத்தின் மிகுதியால் மற்றவர்களோடு தன் துணையை சேர்த்து வைத்து பேசுவார்கள்.
இது குடும்பங்களில் மிகப்பெரிய பிரச்சனைகளைக் கொண்டு வரும் குடும்பங்கள் பிரிக்கப்படும்.
எனவே சும்மா விளையாட்டுக்காகவோ, காமெடிக்காகவோ. இல்லை உண்மையாகவோ தன் துணையை மற்ற யாரோடும்
சேர்த்து வைத்து பேச வேண்டாம். எந்த காலத்திலும் எந்த நிலையிலும் இப்படி பேசுவதை தவிர்க்க
வேண்டும். இதில் தேவனுடைய பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆதலால் தேவனுடைய பிள்ளைகள் தேவன் தந்த துணை மீது கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்.
வீணான வார்த்தைகளைப் பேசி குடும்ப பிரிவினைக்கு காரணமாக வேண்டாம்.
3.தன் துணை இல்லையென்றால் மற்றவர்களை திருமணம்
செய்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது:
இந்த கடைசி நாட்களில் காமவிகாரத்தினைக்
கொடுக்கும் கானானிய ஆவி கிரியை செய்கின்றது. தனக்கு நல்ல துணை இருக்க மற்றவர்கள் மீது
இச்சைகளையும், ஆசைகளையும் கொடுக்கும். துணை
மட்டும் இல்லை என்றால் உனக்கு இவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், இவனை திருமணம்
செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் கொடுத்து, அதை யோசிக்க தூண்டும். அந்த ஆவியின்
எண்ணத்திற்கு இடம் கொடுப்பதால் குடும்பங்களிலும், உறவுமுறைகளிலும் பிரச்சனைகள் மற்றும்
பிரிவினைகள் ஏற்படும். கணவன்-மனைவி உறவுகளில் விரிசல்கள் ஏற்படும்.
அதனால் குடும்ப உறவுகள் வலுப்பட வேண்டும்
என்று விரும்புகின்ற தேவனுடைய பிள்ளைகள் யாரும் இப்படிப்பட்ட சிந்தனைக்கு கொஞ்சம் கூட
இடம் கொடுக்கக் கூடாது. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த சிந்தனைகளைக் கொடுக்கும்
வலுசர்ப்பத்தினைக் கடிந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தேவன் தந்த துணையை சபிக்காமலும், சந்தேகப்படாமலும், மற்றவர்கள் மீது ஆசைப்பட்டு
வேண்டாம் என்றும் சொல்லாமல் இருந்தால் குடும்ப
உறவுகள் வலிமைப்படும்.
இந்தச் செய்தி
உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள்
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment