எடுத்துக் கொள்ளாதே… கொடுத்தும் விடாதே..

மற்றவர்களின் பணம், பொருட்கள், நிலங்களை அபகரிக்கின்ற மக்கள் இருக்கும் இந்நாட்களில் தேவனுக்கு சேர வேண்டிய மகிமையும், தேவன் தரும் கணத்தையும் திருடுகின்றவர்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆவிக்குரிய காரியங்களிலும் இந்த திருட்டு நடைபெறுகின்றது. நம்முடைய எதிரியாகிய பிசாசுக்கு திருடன் என்று ஒரு பெயரும் உள்ளது. அவன் இருதயமாகிய நிலத்தில் உள்ள வேதவசனங்களை திருடுகின்றான். அதுமாத்திரமல்ல தேவனுக்கு சேர வேண்டிய மகிமையினையும் திருட முயற்ச்சி செய்கின்றான். அதேபோல் சில மனிதர்களும் தேவனுக்கு சேர வேண்டிய மகிமையினையும் திருடுகின்றார்கள். இது தேவனுடைய பார்வையில் அருவருப்பான ஒன்றாகும். ஏனென்றால் என் மகிமையை வேறொருவனுக்கும் கொடுக்கமாட்டேன் என்று கர்த்தராகிய தேவன் கூறியுள்ளார். எனவே, பரலோக தேவனுக்கு செலுத்த வேண்டிய மகிமையை அவர் ஒருவருக்கே செலுத்த வேண்டும். தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ, பிசாசுக்கோ கொடுக்காதப்படிக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவனுடைய மகிமையை எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்களுக்கும் கொடுத்த...