உடன்படிக்கையின் உத்தமம்
எல்க்கானாவின் மனைவியாகிய அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. ஆகையால், சேனைகளின் கர்த்தரிடத்தில்
ஒரு பொருத்தனை பண்ணி விண்ணப்பம் பண்ணினாள்.(1 சாமுவேல் 1:11) கர்த்தர் அவளை நினைத்தருளி
ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். தான் செய்த
பொருத்தனைகளின்படியே அந்த குழந்தையை சகல நாளும் கர்த்தருக்கு கொடுத்தாள். உடன்படிக்கையில்
உத்தமமாக இருந்ததால், அன்னாளின் உடன்படிக்கையின் உத்தமத்தை பார்த்த சர்வ வல்ல தேவன்
மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் கூடுதலாக கொடுத்து ஆசீர்வதித்தார். ஐந்து
மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டாள்.
நெடுநாள் ஆசீர்வாதத் தடை இருக்குமென்றால்
பொருத்தனை பண்ணி ஜெபிப்பது அற்புதங்களை சீக்கிரத்தில் கொண்டுவரும். ஆசீர்வாதத் தடைகள்
மாறும். மேலும், வாயை திறந்து நாம் செய்த உடன்படிக்கையில் உண்மையாக இருக்கும் போது
இன்னும் கூடுதலாக ஐந்து மடங்கு ஆசீர்வாதங்களைத் தரும். எனவே, உடன்படிக்கையில் உத்தமமாக
இருப்போம். ஐந்து மடங்கு ஆசீர்வாதங்களில் சுதந்தரிப்போம்.
(திரியேக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ..இன்றைய தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ள Prophetic words என்ற Android Mobile App-ஐ Install செய்து கொள்ளவும். Play Store-ல் Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும். Click Here
Comments
Post a Comment