சிறியவனிலும் சிறியவன்

உலகத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசங்கள் இருக்கின்றன. அதேப்போல் பரலோக இராஜ்ஜியத்திலும் சிறியவன் பெரியவன் என்று அளவீடும் உள்ளது. இதைக் குறித்து மத்தேயு 5-ம் அதிகாரம் 19 ஆம் வசனத்தில் தேவனுடைய கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதான ஒன்றையாகிலும் மீறி மனுஷருக்கு போதிப்பவன் சிறியவன் என்றும், எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு போதிப்பவன் பெரியவன் என்றும் கூறுகின்றது. அதேபோல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யோவான்ஸ்நானகனை குறித்து சொல்லும் போது, பரலோக இராஜ்ஜியத்தில் சிறியவனாக இருக்கின்றவன் எவனோ, அவன் அங்கே அவனிலும் பெரியவனாக இருக்கின்றான் என்று சொல்கின்றார். இதை மத்தேயு 11-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் வாசிக்கலாம். இரண்டு வசனங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது பரலோக இராஜ்யத்தில் பெரியவன் மற்றும் சிறியவன் என்ற அளவீடு உள்ளது என்பது நமக்கு புலப்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த அளவீட்டின்படியேதான் யோவான் ஸ்நானகனைக் குறித்து பரலோக இராஜ்யத்தில் சிறியவனாக இருக்கின்றவன் அவனிலும் பெரியவனாக இருக்க...