போஜனத்திற்கான ஆசீர்வாதம்



                    

 யாத்திராகமம் 23:25

…அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். 

 

      நாம் சாப்பிடும் அப்பமும்,  பருகும்  தண்ணீரும் ஆசீர்வதிக்கப்படுவது இந்த பூமியில் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.  இதனை போஜனத்திற்கான ஆசீர்வாதம் என்றும்,  சாப்பிடுவதற்கான ஆசீர்வாதம் என்றும் சொல்லலாம்.  இரண்டு வகையான உணவு உள்ளது.  ஒன்று ஆவிக்குரிய உணவு மற்றொன்று மாம்சத்திற்கான உணவு.  இரண்டையும் பரலோக தேவனால் ஆசீர்வதிக்க முடியும்.  இரண்டிலும் சர்வ வல்ல தேவனுடைய ஆசீர்வாதங்கள் இருக்கும் போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து தியானிக்கலாம்.

 மாம்ச உணவு :        

    மாம்ச உணவு சரீர பலத்திற்காக தினமும் எடுக்கும் ஆகாரம் ஆகும்.  இது ஆசீர்வதிக்கப்படும் போது சரீரத்திற்கு நல்ல பெலன் கிடைக்கும். முன்நாட்களில் சாப்பாடு கிடைக்காமல் பஞ்சத்தினால் அநேக மக்கள் செத்தார்கள். இன்றைய நாட்களில் சாப்பாட்டினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.  சாப்பிடுவதினால் அநேக வியாதிகள் வருகின்றன.

     ஆனால், நம்முடைய போஜனம்  ஆசீர்வதிக்கப்படும்போது எந்த ஒரு  வியாதியும் வராது.  மாறாக நம்முடைய போஜனமே மருந்தாக செயல்படும். அது  சரீரத்தில் ஏற்கனவே உள்ள வியாதியினை சரி செய்யும்.  எனவே,  உங்கள் போஜனம் ஆசீர்வதிக்கப்படும் போது, வியாதியில் இருந்து மெய்யான விடுதலையினை பெறுவீர்கள். உங்களுக்கு காண்டாமிருகத்திற்கு ஒத்த பலன் கிடைக்கும்.

      ஆதலால், தேவனுடைய பிள்ளைகள் மாம்ச போஜன ஆசீர்வாதத்திற்காக கருத்தோடு ஜெபிக்க வேண்டும். பரலோக தேவன் கொடுக்கும் ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளுவீர்கள்.

 

ஆவிக்குரிய உணவு : 

     மாம்சத்திற்கான  உணவு என்பது என்ன என்ற நம் எல்லோருக்குமே நன்றாக தெரியும்.  அது என்ன ஆவிக்குரிய உணவு என்பதாய் நீங்கள் யோசிக்கலாம் அல்லது உங்கள் மனதிற்குள் கேள்வியினை எழுப்பலாம்.  மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்.(மத்தேயு 4:4).  தேவனுடைய வசனமே ஆவிக்குரிய உணவாகும்.  எப்படி மாம்ச உணவினை தினமும் போஷிக்கின்றாரோ, அதேபோல் ஆவிக்குரிய உணவையும் தினமும் கொடுக்கின்றார்.   எப்படி மாம்ச உணவினை பரலோக தேவன் ஆசீர்வதிக்கின்றாரோ அதேபோல் ஆவிக்குரிய ஆகாரத்தையும் ஆசீர்வதிக்கின்றார்.  

    ஆவிக்குரிய ஆகாரத்தினையும் ஆசீர்வதிக்கும் போது மிக ஆழமான வெளிப்பாடுகள் கிடைக்கும்.  பரலோக இரகசியங்கள் வெளிப்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்த வசனங்கள் வெளிப்படும்.  இதனால் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு ஒழுங்கும்,  ஒரு பரிசுத்தமும்,  ஒரு உயர்வும் காணப்படும்.

   ஆதலால், தேவனுடைய பிள்ளைகள் பரலோக தேவன் உங்கள் ஆவிக்குரிய ஆகாரத்தினை தினமும் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காக கருத்தாக ஜெபியுங்கள்.  ஆவிக்குரிய ஆசீர்வாதம் கிடைக்கும் போது,  நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் உயர்ந்த  அனுபவத்தினை பெற்று உயர்வீர்கள்.

     இந்த தீர்க்கதரிசன செய்தியை தியானிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே.. பரலோக தேவன் இனி வரும் நாட்களில் உங்கள் ஆவிக்குரிய போஜனத்தையும், மாம்ச போஜனத்தையும் ஆசீர்வதிக்க போகின்றார்.  இதனால் சகல விதமான நன்மையை பெற்று தேவனுக்கு சாட்சியாக மாறப் போகிறீர்கள்.  நிச்சயமாக சாட்சியாக மாறுவீர்கள்.

இதுவரை வெளிவந்த தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க CLICK HERE 

 

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..