Today's Prophetic News
நிலைநிற்கும் தேவசித்தம் உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் என்று பரிசுத்த வேதம் சொல்லுகின்றது (1யோவான் 2:17) மனித ஆசைகள், மனித விருப்பங்கள், மனித திட்டங்கள் நிலைத்திருக்காமல் அழிந்துவிடும். தேவ சித்தமே நிலைத்திருக்கும். சோதோம் கொமோரா பட்டணத்தின் அழிவை குறித்து ஆதி 19-ம் அதிகாரத்தில் வாசித்திருப்போம். பட்டணத்தை அழிக்க தேவதூதர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். லோத்து மேல் தேவன் வைத்த இரக்கத்தினால் ”மலைக்கு ஓடிபோய் உயிரை பாதுகாத்துக்கொள்” என்று தூதர்கள் சொன்னார்கள் (ஆதி 19:16). மலைக்கு சென்று தன்னையும், தன் குடும்பத்தையும் அவன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது தேவனுடைய ஆலோசனை தேவ சித்தம். ஆனால், லோத்து மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது. தீங்கு என்னை தொடரும் என்று விண்ணப்பம் பண்ணுகின்றான். தேவசி...