இக்கால மனநிலை




         கொள்ளை நோயின் காலத்தில் எங்குப் பார்த்தாலும் மரண செய்திகளை இந்நாட்களில் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்தக் காலக் கட்டங்களில் மனிதர்களின் மனநிலையில்  மாற்றங்கள் ஏற்படுகின்றது.   பயத்தினாலும், நம்பிக்கையற்ற நிலையிலும், விரக்தினாலும், எதிர்காலத்தை குறித்த குழப்பத்திலும் அனேகர் இருக்கின்றார்கள், மனநிலையில் ஏற்படும் மாற்றம்  இரண்டுவிதமான காரியங்களைச் செய்யும் ஒன்று நன்மையானது மற்றொன்று தீமையானது. நன்மையென்றால் யாருக்கும் பிரச்சனை இல்லை. பரிசுத்தத்திற்கு நேராக வழி நடத்தும். தீமை என்றால்தான் பிரச்சனை ஆரம்பிக்கும். இந்த கொள்ளை நோயின் நாட்களில் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தினை  குறித்தும் அதனால் ஏற்படும் தீமைகளை குறித்தும் இந்தச் செய்தியில் தியானிப்போம்.
          


    ஆதியாகமம் 19ம் அதிகாரத்தில் சோதோம் கொமோரா பட்டணங்களின் அழிவினைக் குறித்து  வாசிக்கலாம். வானத்தில் இருந்து கந்தகம் அக்கினியும் இறங்கி அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும் அழித்துப் போட்டது. அதிலிருந்து லோத்துவும் அவனுடைய இரண்டு குமாரத்திகள் மாத்திரமே தப்பினார்கள். அவர்கள் மலையில் வாசம் பண்ணினார்கள். ஒரு கெபியில் குடியிருந்தார்கள்.(வசனம் 30)
         
      சுற்றி நடந்த அழிவைப் பார்த்த அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இனி நமக்கு பூமியெங்கும் நடக்கின்ற முறைமையின் படி திருமணம் நடக்காது; குடும்பம் இருக்காது என்று சொல்லி,  பரலோகத்திற்கு விரோதமான பெரிய பாவங்களைச் செய்தார்கள். சபிக்கப்பட்ட சந்ததியைப்  பெற்றெடுத்துவிட்டார்கள்.  இந்த நாட்களிலும் அழிவின் செய்தியைக் கேட்கும் போது, பலருடைய மனநிலை மாற்றங்கள் ஏற்படுக்கின்றது. பயத்தினாலும், விரக்தியினாலும் கட்டப்பட்டுள்ளது. இனிப் பூமியில் வாழ முடியாது; பூமியில் பெரிய அழிவு வந்துவிட்டது என்று எண்ணி சிலர் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைகின்றார்கள். சிலர் இருக்கும் வரை இனிமையாக வாழ்வோம் என்று சொல்லி துணிகரமாக பாவம் செய்கின்றார்கள்.  இது பிசாசின் தந்திரம் ஆகும். அப்படி, துணிகரமாக  பாவம் செய்யும்பொழுது அழிவுதான் நெருங்கி வரும். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் செல்ல முடியாது. சில நேரங்களில் சபிக்கப்பட்ட சந்ததியையும் சாபத்தினையும் பெற்றெடுக்க நேரிடும்.
        
      எனவே, இக்காலக் கட்டங்களில் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரக்தியான மனநிலையைக் கொடுத்து, இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்; கண் கண்ட பாவங்களை  செய்யலாம்; கொஞ்சம் ஆபாச படம் பார்க்கலாம்; விபச்சாரம் செய்யலாம்;   திருடலாம் என்ற எண்ணம் இருதயத்திற்குள் வந்தால் அதைக் குறித்து தேவனுடைய பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பரிசுத்ததினையும் அழைப்பையும் இழந்துவிடக்கூடாது.

(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே.  எனக்கு அல்ல கர்த்தருக்கே  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக  இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள்.  உங்கள் Comment – பதிவு செய்யுங்கள் மற்றும் நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். நீங்களும் இந்த செய்தியை WHATS APP - ல் தினமும் பெற  Prophetic Words Ministries  8608833150, 8608096748)

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..