கானானியர் ஆவி


                   

       நெருங்கின உறவினர்கள் மற்றும் இரத்த சம்பந்தமானவர்கள் அசுத்தமாகவும், ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருப்பது போல் கனவுகளில் வருவதுண்டு. இப்படிப்பட்ட கனவுகள் வருவது ஏன்? என்பதனைக் குறித்து இந்த செய்தியில் தியானிக்கலாம். செய்தியை வாசிப்பதற்கு முன்பு லேவியராகமம் 18-ம் அதிகாரத்தை முதலில் நன்றாக வாசித்து விட்டு, பின்பு இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள். உங்களுக்கு மிக எளிமையாக புரியும். ஆசீர்வாதமாகவும் இருக்கும்.

        தாய், தகப்பன், குமாரன்,  குமாரத்தி, அண்ணண், தம்பி, அக்கா, தங்கை, மருமகள், பேரன், பேத்தி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை போன்ற நெருங்கின இனமானவர்களை சேரும்படி அவர்களை நிர்வாணமாக்கக்கூடாது என்று பரிசுத்த வேதம் தெளிவாகக் கூறுகின்றது. இது தேவன் அருவருக்கின்ற பாவங்களில் ஒன்றாகும். இதை செய்கின்றவர்கள் தங்களை தீட்டுபடுத்துவது மட்டுமல்லாமல், தாங்கள் வசிக்கும் தெரு, கிராமங்கள், பட்டணங்கள் மற்றும் தேசத்தையும் தீட்டுப்படுத்துகின்றார்கள்.

      இப்படிப்பட்ட தாறுமாறான பாவங்களைச் செய்யத்தூண்டுவது கானானிய ஆவியாகும். நோவாவின் குமாரனாகிய காமின் வம்சத்தை சேர்ந்த கானானியர்களும், எகிப்தியர்களும் இந்தப் பாவத்தினை சர்வசாதாரணமாக செய்து வந்தனர். இதனால், தேசம் அவர்களைக் கக்கிப்போட்டது.

    இந்தக் கடைசி நாட்களிலும், கானானிய ஆவி முழுபெலத்துடன் கிரியை செய்கின்றது. நெருங்கின இரத்த சம்பந்தமான உறவினர்களிடம், பாலியல் பாவங்களைச் செய்ய தூண்டுகின்றது. அவர்களைக் குறித்து தாறுமாறான சிந்தனைகளை இச்சைகளாக விதைக்கின்றது. இந்த ஆவியினால் தாக்கப்பட்டவர்கள் தாறுமாறான இந்த பாவங்களைச் செய்து அதில் சிக்கியுள்ளார்கள். இதை கேள்விப்பட்டிருக்கலாம்.

      இந்த ஆவி பாவம் செய்ய தூண்டுவதற்கு இராக்கால தரிசனமாகிய கனவுகளையும், பயன்படுத்துகின்றது. முதலில் நெருங்கின உறவினர்களிடையே தாறுமாறாக இருப்பது போல் அசுத்த   ஆபாச கனவுகளைக் காண்பிக்கின்றது. பின்பு உணர்ச்சிகளைத் தூண்டி, அதைக் கறைப்படுத்தி தாறுமாறான இச்சைகளைக் கொடுக்கின்றது. இந்த ஆவியின், தூண்டுதலுக்கு இடம் கொடுக்கின்றவர்கள் தாறுமாறான இச்சைகளுக்கு இடம் கொடுத்து சுபாவ அன்பில்லாமல் பாவம் செய்கின்றார்கள். இதனால், தன்னையும், தன் வீட்டையும், தான் வசிக்கும் பட்டணத்தையும், தேசத்தையும் தீட்டுப்படுத்துகின்றார்கள். கடைசியில் ஜனங்களில் இல்லாதப்படிக்கு அறுப்புண்டு போவார்கள்.

     எனவே, தேவனுடைய பிள்ளைகள் நெருங்கின இனமானவர்களைக் குறித்து வரும் அசுத்த ஆபாச கனவுகளுக்கு எச்சரிக்கையாய் இருந்து, அது கானானிய ஆவியின் கிரியை என்பதை முதலில் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். பின்பு அந்த ஆவிகளையும், அதின் கிரியைகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கடிந்து அப்புறப்படுத்த வேண்டும். இனி  நம்முடைய ஆவியைத் தாக்காதபடிக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே வேலி அடைக்க வேண்டும்.      

    இவ்வாறு செய்யும் போது கானானிய ஆவி நம்மையும் நம் குடும்பத்தையும் தாக்காதபடிக்கு பாதுகாத்துக் கொள்ளலாம். பரலோக ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளலாம்.  ஆமென்.

 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்CLICK HERE 

Switch To ENGLISH    HINDI


Comments

  1. எனக்கு ஒரே கையெழுத்து வராது மத்தபடி இது பரிசுக்கா எழுதவில்லை ஒரு ஆத்ம திருப்தி மற்றும் ஒவ்வொரு நிருபம் எழுதி முடித்ததும் ஒரு அற்புதம் மற்றும் அதிசயங்கள் எதிர்ப்பால் கர்த்தர் நடத்தினார் ஆமென்

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..