ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை 1 பேதுரு 1:15,16-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். ENGLISH OR HINDI
இந்த நாட்களில் வரலாறு
காணாத அளவுக்கு தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவான அனைவரின்
கரங்களிலும் SMART PHONE உள்ளது. இதை நாம் நேரில் பார்க்கலாம். இந்த SMART
PHONE-ல் நன்மைகள் பல உள்ளன. அதை விட தீமைகளும் மிக அதிகமாகவே உள்ளன. எங்கே
நன்மையும், தீமையும் ஒரு சேரக் காணப்படுகின்றதோ, அங்கே எச்சரிக்கையாக இருப்பது
மிகவும் அவசியம். தேவனுடைய பரிசுத்த வார்த்தைகளை SMART PHONE மூலமாக இருக்கும்
இடத்திலே கேட்கலாம், அதை வாசிக்கவும் செய்யலாம். அதே நேரத்தில் பிசாசின் ஆவிகளை
சுமந்து கொண்டு வரும் அசுத்த ஆபாசக் காட்சிகளையும் பார்க்கலாம்.
சுமார் நான்கு இலட்சம் ஆபாச இணையத்தளங்கள் உள்ளதாக செய்திக்குறிப்பு
ஒன்றுக் கூறுகின்றது. இந்த ஆபாச இணைத் தளங்களுக்கும், ஆபாச படங்களுக்கும் அநேக
வாலிபர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி அடிமையாகவே
உள்ளார்கள். தினமும் தவறாமல் பார்ப்பவர்களும் உண்டு, வாரம் ஒரு முறை இரு முறை
என்றும், மாதம் ஒரு முறை இரு முறை என்றும் நாட்களைக் குறித்து
பார்ப்பவர்களும் உண்டு.
இரட்சிக்கப்படாதவர்கள்
இதற்கு அடிமையாக இருந்தால் பிரச்சனை ஒன்றும் இல்லை. இந்தச் செய்தியை எழுத
வேண்டிய அவசியமும் ஏற்ப்பட்டிருக்காது. ஆனால், இரட்சிக்கப்பட்டவர்கள், பரிசுத்த
ஆவியின் அபிஷேகத்தினைப் பெற்றவர்கள், தண்ணீரில் மூழ்கி ஞானஸ்தானம் பெற்றவர்கள்,
விசுவாசிகள், ஊழியர்கள் என பலர் இன்னும் அடிமையாகவே உள்ளார்கள். இது ஓன்றும் பாவம் இல்லை என்று சொல்லிக்
கொண்டு துணிகரமாக இப்பாவத்தை செய்பவர்களும் உண்டு.
எந்த ஒரு
அடிமைத்தனத்திற்கும் பின்னால் பிசாசின் மிகப் பெரிய தந்திரம் மறைந்திருக்கும்.
அப்படியே இந்த ஆபாசப் படங்களின் பின்னால் பிசாசின் மிகப் பெரிய தந்திரம் ஒன்று
உள்ளது. இந்தச் செய்தியில் ஆபாசப் படத்தில் காணப்படும் தந்திரங்கள் என்னென்ன?
இவைகளால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பவைகளைக் குறித்துக் கொஞ்சம் விரிவாக
பரிசுத்த வேத வசனத்தின் துணையுடன் தியானிப்போம். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு
மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
காண்டமிருகத்துக்கொத்த பெலனைக் கொண்ட இஸ்ரவேல்
மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, கானானுக்கு செல்கின்றார்கள். மோசே என்ற தீர்க்கதரிசி
அவர்களை வழி நடத்துகின்றான். அந்த ஜனங்கள் யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமான வெளிகளில்
பாளயமிறங்கினார்கள். ஜனங்கள் ஏராளமாய் இருந்தபடியால் மோவாபின் ராஜா பாலாக் மிகவும்
பயந்து, கலக்கமடைந்தான். எப்படியாவது இஸ்ரவேல் மக்களை அழிக்க வேண்டுமென்று
துடிக்கின்றான். நேருக்கு நேர் அவர்களோடு மோதாமல் பிலேயாம் என்ற தீர்க்கதரிசியை
அழைத்து முதலில் அவர்களை சபித்து, பின்பு அவர்களோடு மோதி, அவர்களைத் துரத்த
வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.(எண்ணாகமம் 23)
இதன்படி பிலேயாம் என்னும்
தீர்க்கதரிசியை பல ஆயிரம் செலவு செய்து இஸ்ரவேல் மக்களை சபிப்பதற்காக கொண்டு
வருகின்றான். ஏனென்றால் பிலேயாம் யாரை ஆசீர்வதிக்கின்றானோ அவன்
ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பான். யாரை சபிக்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவனாகவே இருப்பான். ஆதலால்
இந்தக் காரியத்தில் பிலேயாம் தீர்க்கதரிசியை அவன் பயன்படுத்துகின்றான்.
ஆனால், பிலேயாம்
தீர்க்கதரிசியால் எவ்வளவு போராடியும் இஸ்ரவேல் மக்களை சபிக்கவே முடியவில்லை. மாறாக
ஆசீர்வாதத்தினைக் கூறினான். ஏனென்றால் சர்வவல்ல தேவனுடைய பாதுகாப்பின் கரம் அவர்களோடு இருந்தது. எனவே,
தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக ஒரு சதித் திட்டம் தீட்டினான்.
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்குக்கொடுத்த தேவன்,
யாக்கோபில் அக்கிரமத்தைக் காண்கிறதுமில்லை; இஸ்ரவேலிலே குற்றம்
பார்ப்பதுமில்லை; இராஜாவின் ஜெய கெம்பீரம் அவர்களுக்குள் இருக்கின்றது(எண்ணாகமம்23:21) என்பதனை உணர்ந்து, தேவனை விட்டு எப்படியாவது இஸ்ரவேல் மக்களை பிரிக்க
வேண்டுமென்று திட்டம் தீட்டினான். இத் திட்டத்தின்படி எப்படி அவர்களை பிரிப்பது
என்று யோசித்தான்.
மோவாபின் இராஜாவாகிய பாலாக்கை நோக்கி, ’உங்கள் குமாரத்திகளை
அவர்களிடத்தில் அனுப்பி, அவர்களை கவர்ந்திழுத்து, உணர்ச்சிகளைத் தூண்டி முதலில்
வேசித்தனம் செய்ய சொல்லுங்கள்; பின்பு, உங்களுடைய தேவர்களுக்கு இட்ட பலிகளை
புசிக்கும்படி அழையுங்கள்; அவர்கள் அதை புசித்தவுடன் உங்கள் தேவர்களை பணிந்துக்
கொள்ள செய்யுங்கள்; இஸ்ரவேல் ஜனங்கள் விக்கிரகங்களாகிய உங்கள் தேவர்களை பணிந்துக்
கொள்ளும் போது, தேவனுடைய கோபம் அவர்களை அழித்துவிடும்’ என்று சூதான ஆலோசனைகளைக்
கூறினான்.
அப்படியே அவர்களும் தங்கள் குமாரத்திகளை அனுப்பி, இஸ்ரவேல் மக்களோடு
வேசித்தனம் செய்து, தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை புசிக்கும்படி அழைத்து,
தங்கள் தேவர்களை பணிந்துக் கொள்ளச் செய்தார்கள். இதனால் கர்த்தருடைய கோபம் அவர்கள்
மேல் மூண்டது. சுமார் 24000 பேர் வாதையினால் செத்தார்கள். (எண்ணாகமம் 25)
அதேபோல் தான் இன்றும்,
இன்றைய நாட்களிலும் இரட்சிக்கப்பட்டு சபைக்கு ஒழுங்காக தவறாமல் செல்லும் தேவனுடைய
பிள்ளைகளை அழிக்கவும், அவர்களிடம் உள்ள அபிஷேகத்தை பிடுங்கவும் பிசாசு
திட்டமிடுகின்றான். இதில் பிசாசு வெறித்தனமாகவே சுற்றித் திரிகின்றான்.(1 பேதுரு5:8, யோபு 1:7) ஆனால், அவனால் ஒன்றும் பண்ண முடியவில்லை. ஏன் தேவனுடைய பிள்ளைகளின்
தலையில் உள்ள ஒரு முடியைக் கூட தொடமுடியவில்லை.(மத்தேயு 10:30) எனவே, அவனை
தேவனிடத்தில் இருந்து பிரிக்க வேண்டுமென்பதற்காக Internet, Smart Phone சமூக வலைத்தளங்கள் மூலமாக உணர்ச்சிகளைத் தூண்டும் ஆபாசப் படங்களை
அனுப்பி, முதலில் பார்க்க வைக்கின்றான். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று எண்ணத்தை
படித்த மேதாவிகள் மூலமாக ஆலோசனையாக கொடுக்கின்றான். இது உண்மை என்று நம்பி அநேகர்
இந்தப் படங்களை பார்க்கின்றனர்.
பிசாசினால் இயக்கப்படும் ஆபாசப் படத்திற்கு ஒரு வல்லமையுண்டு. இதில்
சிக்குபவர்களின் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி, வேசித்தனம், விபச்சாரத்தனம்,
கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, சுயப்புணர்ச்சி, ஒரினைச் சேர்க்கை,
விலங்குகளோடு புணர்ச்சி, பிரமியம் உண்டாகுதல், இந்திரியம் கழிதல், காமவிகாரம்,
அசுத்த கனவுகள், வெறித்தனம் போன்ற ஏதாவது ஒரு பாவத்தை செய்ய வைக்காமல்விடாது.
அப்படி பாவம் செய்கின்ற நேரத்தில்தான் குற்ற மனச்சாட்சியைக்
கொடுத்து, பிசாசு தாக்குகின்றான். ’நீ பெரிய பாவி; தேவன் உன்னைக்
கைவிட்டுவிட்டார்; உன் எதிர்கால வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று சிந்தனையில் பொய்யைக்
களையாக விதைக்கின்றான். இந்த வார்த்தைக்கு செவிக்கொடுக்கும் தேவனுடைய பிள்ளைகள்,
அது உண்மை என்று எண்ணி குற்ற மனச்சாட்சிக்கு இடங்கொடுத்து, தினமும் ஜெபிக்காமல்,
பரிசுத்த வேதத்தினை வாசிக்காமல், சபைக்குச் செல்லாமல் தேவனுடைய சமூகத்தைவிட்டு
பிரிந்து சென்றுவிடுகின்றார்கள். இந்த நேரத்தில் மாந்திரீகம், பில்லி
சூனியம், செய்வினை, ஏவல் போன்ற அசுத்த ஆவிகளை அனுப்பி தாக்குகின்றான். சில
நேரங்களில் வியாதிகளையும், நோய்களையும், உபத்திரவத்தையும், சோதனைகளையும்
கொடுக்கின்றான். இதுதான் ஆபாச படங்கள் மூலம் பிசாசு செய்யும் பெரிய தந்திரம்
ஆகும்.
இந்த தீர்க்கதரிசனச் செய்தியை ஆவலாய் வாசிக்கும் தேவனுடைய பிள்ளையே, வாலிபர்களே,
விசுவாசிகளே ஒருவேளை இந்த ஆபாச படத்திற்கு அடிமையாக இருந்தால், சீக்கிரத்தில்
வெளியே வந்துவிடுங்கள். இதிலிருந்து மெய்யான விடுதலையைப் பெற தொடர்ந்து ஜெபியுங்கள்.
அனுதினமும் உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்குள்ளாக ஒப்புக்கொடுங்கள்.
இது என்ன பெரிய பாவமா? இது என்ன தவறா? என்று உங்கள் ஆத்துமாவை வஞ்சிக்க
இடங்கொடாதிருங்கள் ஆமென்.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப
திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது
உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment