சீரழிக்கப்பட்டவள்
எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான். இவன் பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயை மறுமனையாட்டியாகக்
கொண்டான். அவள் அவனுக்கு துரோகம் செய்து பிறர் முகம் பார்த்து விபச்சார பாவம் செய்துவிட்டாள்.
ஏன் அவள் அவனுக்கு துரோகம் செய்தாள்? ஏன் பிறர் முகம் பார்த்து பாவம் செய்தாள்? கொஞ்சம்
விரிவாக ஆராய்ந்துப் பார்த்தால் அந்த லேவியன் அவளை மனைவியாக கொள்ளாமல் மறுமனையாட்டியாகக்
கொண்டான் என்பதுதான் அதற்கு காரணம் என்று புரியும்.
மறுமனையாட்டி
என்பவள் மனைவியை விட தாழ்ந்த நிலையில் நடத்தப்படுபவள். அவளுக்கு மனைவிக்குரிய எந்த
கனமும், அன்பும், பாசமும், சுதந்திரமும், மரியாதையும் கிடைக்காது. அவளுடைய எந்த பேச்சும்
எடுபடாது வேலைகளுக்கும், தேவைகளுக்கும், இச்சைகளுக்கும் மாத்திரமே அவளை பயன்படுத்துவார்கள்.
இதனால், அந்த ஸ்திரீ அவனுக்கு விரோதமாக துரோகம் செய்தாள். இதைக்குறித்து கடந்த நாட்களில்
இவனுக்காக இப்படி? என்ற தலைப்பில் வெளிவந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானித்தோம்.
நீங்கள் இதை வாசிக்கவில்லை என்றால் அந்த செய்தியை வாசித்துப் பாருங்கள். (நியா 19)
”ஒரு பெண்ணுக்கு
தேவையான அன்பு, பாசம், மரியாதை, கனம் கிடைக்கவில்லை என்றால் அவள் அப்படித்தான் துரோகம்
செய்வாள்” என்று உலக மனிதர்கள் கூறுவார்கள். ”கணவனே என்னை மனைவியாக மதிக்கவில்லை, அன்பு
காட்டவில்லை, தாம்பத்திய உறவு கொள்ளவில்லை, எதிர்ப்பார்த்த பாசம் கிடைக்கவில்லை இதனால்
அவனுக்கு துரோகம் செய்தேன். பாசம் தந்த என் நண்பனோடு பழகினேன்” என்று சொல்லும் மனைவிமார்கள்
உண்டு.
இந்தச் செய்தியில்
அவள் செய்தது சரியா? தவறா? என்பதனைக் குறித்து விவாதம் செய்யவில்லை. கணவனுக்கு துரோகம்
செய்த அவளுடைய முடிவு எப்படி இருந்தது? என்பதனைக் குறித்து தியானிக்கப் போகின்றோம்.
பரிசுத்த ஆவியானவர் துணையுடன் ஜெபத்துடன் வாசியுங்கள். இதில் நிறைய ஆவிக்குரிய அர்த்தங்கள்
உள்ளன.
தனக்கு துரோகம்
செய்த தன் மறுமனையாட்டியுடன் நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்து வரவும், இரண்டு
கழுதைகளையும் ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக் கொண்டு அவளிடத்திற்கு போனான்
அந்த லேவியன். அவளும், அவள் தகப்பனும் அவனை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள். அவள் தன்
தப்பை உணர்ந்து அவனுடனே சேர்ந்து வாழ சம்மதித்தாள். ஐந்தாம் நாள் மாலையில் அவன் அவளைக்
கூட்டிக் கொண்டுப் புறப்பட்டான். நெடுந்தூரம் பயணம் செய்தார்கள் சூரியன் அஸ்தமான நேரத்தில்
கிபியாவிலே வந்து, வயதான ஒரு கிழவன் வீட்டிலே
இராத்தங்கினார்கள் புசித்துக் குடித்து மனமகிழ்ச்சியாய் இருந்தார்கள்.
அந்த நேரத்தில்
அந்த ஊரில் பேலியாளின் மக்களாகிய சிலர் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள். கடைசியில்
அந்த லேவியனே தன்னுடைய மறுமனையாட்டியை அவர்களுக்கு
ஒப்புக்கொடுக்க வேண்டிய நிலைமை. அந்தப் பேலியாளின் மக்கள் அவளைக் கூட்டாக கற்பழித்து,
இரவு முழுவதும் இலச்சையாக நடத்தினார்கள். விடியற்காலத்திலே அந்தப் பெண் இறந்துப் போனாள்.
சமாதானமாக நல்ல வாழ்க்கை வாழ்ந்து, முதிர் வயதிலே மரிக்க வேண்டியவள், இளம் வயதிலேயே
பலரால் கூட்டாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். ஏதோ கணவன் சரியில்லை என்று பிறர்
முகம் பார்த்து துரோகம் செய்தாள் விபச்சார பாவம் செய்தாள். அவளுடைய முடிவு மிகவும்
கொடுமையாக இருந்தது.
இன்றைய கடைசி
காலத்திலும் கூட இவளைப் போல் உள்ள பெண்கள் உண்டு. கணவன் தன்னை ஒரு மனைவியாக மதிக்கவில்லை
என்பதற்காகவும், என் பேச்சை கேட்பதில்லை என்பதற்காகவும், என் மேல் கோபப்படுகின்றார்,
எரிச்சல்படுகின்றார், குடிக்கின்றார், வெறிக்கின்றார், என்னிடம் அன்பாகவே இல்லை என்று
சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு பிற ஆண்மகனைத் தேடிச் செல்கின்றார்கள். சிலர்
தன்னுடைய கல்லூரி காதலனை முகநூலில் தேடுகின்றார்கள். அவர்களுடன் இரவு முழுவதும் பேசுவதும்
Chat செய்வதும் என்று பழக ஆரம்பிக்கின்றார்கள். தன் கணவன் கொடுமைப்படுத்துவதாக சொல்லி
புலம்புகின்றார்கள்.
ஆரம்பத்திலேயே சாதாரனமாக
வந்த இந்தப் பழக்கம், நெருக்கம் அதிகமாக அதிகமாக கடைசியில் கள்ளக்காதலில் முடிகின்றது.
அப்பெண் தன்னுடைய கணவனுக்கு விரோதமாக துரோகம் செய்கின்றாள். விபச்சாரம் செய்து தன் சரீரத்தைக் கறைப்படுத்திக்
கொள்கின்றாள். இப்படியே வாழ்க்கை சென்றுவிடும் என்றும், எல்லாமே நன்றாக இருக்கும் என்று
நினைக்கின்றாள்.
ஆனால், அப்படி
இருக்க முடியாது. பாவம் ஒரு மனிதனைத் தொடர்ந்துப் பிடிக்கும் என்று பரிசுத்த வேதம்
கூறுகின்றது(எண் 32:23). அவளைத் தொடர்ந்து வரும் பாவம் பல பேர்களிடம் அவளைக் குறித்து
இச்சைகளைக் கொடுக்கும். அவர்கள் அனைவரும் அவளைத் தாறுமாறாக இச்சிப்பார்கள். சமயம் கிடைக்கும் போது தாறுமாறாக
இலச்சையாக நடத்திவிடுவார்கள். பலபேர் அவளை இலச்சையாக நடத்துவார்கள் அவள் முடிவு மிகமிக
கொடுமையாக இருக்கும். ஒருவேளை பலரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படலாம்.
இதை வாசிக்கின்ற
தேவனுடைய பிள்ளையே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரத்தத்தினாலே கழுவப்பட்டவர்களே!! யார்
வீட்டில்தான் பிரச்சனை இல்லை எல்லாருடைய வீட்டிலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.
அதற்காக பிறர் முகம் பார்த்து கணவனுக்கு விரோதமாக துரோகம் செய்வது தீர்வாகாது. அது
ஆசீர்வாதமாகவும் அமையாது. பரலோகமும் கூட்டிக்
கொண்டு செல்லாது.
புத்தியுள்ள
ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுவாள் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது.(நீதி 14:1) கணவன்
எப்படி இருந்தாலும் சரி; அவன் குடிகாரனாக இருந்தாலும் சரி; கெட்டவனாக இருந்தாலும் சரி;
நான் பிறர் முகம் பார்க்க மாட்டேன்; என் கணவருக்கு விரோதமாக துரோகம் செய்ய மாட்டேன்;
எல்லாவற்றிற்கும் மேலாக என்னையும் நேசித்து,
எனக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்த, என் பரலோக தேவனுக்கு விரோதமாக துரோகம் பண்ணமாட்டேன்;
அவரைத் துக்கப்படுத்த மாட்டேன்; என்று வைராக்கியமாக இருப்பவள் புத்தியுள்ள ஸ்திரீ.
அவள் ஜெபத்தையும் தேவசமூகத்தில் அவள் வடிக்கும்
கண்ணீரையும் காண்கின்ற தேவன் சீக்கிரத்தில் அவள் கணவனைத் தொடுவார். அவனோ மனந்திரும்புவான்.
மாறாக கட்டின
கணவனுக்கு துரோகம் செய்கின்றவளையோ கண்டவனும் கண் வைத்து வாழ்க்கையை சீரழித்துவிடுவான்.
இந்த லேவியனின் மறுமனையாட்டி துரோகம் செய்தாள். மிகக் கொடுமையாக மரித்தாள் அவளுடைய
வாழ்க்கை சீரழிக்கப்பட்டது. இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளையே உன்னுடைய வாழ்க்கை எப்படி
இருக்க வேண்டும் என்று விரும்புகின்றாய் ஆராய்ந்துப் பார்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Antha lesbian nallavana keitavana
ReplyDeleteஅருமையான விளக்கம்
ReplyDeleteGood message
ReplyDeleteThank you Jesus
ReplyDeleteKarthar nallavar
ReplyDeleteநன்றி brother and sister இந்த செய்தி எனக்கு ரெம்ப பயனுள்ளதாக இருந்தது
ReplyDelete