உலக ஆசை


             HD wallpaper: person holding blue globe, global, map, round ...                    
        கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. [கலாத்தியர் 5:24]
                
     உலகத்தில் உள்ள மனிதர்களிடம் பலவிதமான ஆசைகள் உள்ளது. அதில் உலக ஆசையும் ஒன்று. ஆசைகள் அனைத்தும் வலிமையானவைகள். ஆசைகளை மேற்கொள்ளாத மனிதனால் அதை எதிர்த்து ஜெயிக்க முடியாது. ஒவ்வொரு ஆசைகளுக்கும் ஒவ்வொரு விதமான வலிமை உள்ளது. உலக ஆசைக்கும் வலிமை(POWER) உள்ளது. அந்த வலிமை எப்படிப்பட்டது?
       
    பரிசுத்த வேதத்தில் தேமா என்ற ஒரு மனிதனைக் குறித்து பார்க்கலாம். இவன் அப்போஸ்தலனாகிய பவுலின் உடன் ஊழியக்காரன் [பிலேமோன் 24] இந்த தேமா இந்த பிரபஞ்சத்தின் மீது ஆசை வைத்து அப்போஸ்தலனாகிய பவுலை விட்டு பிரிந்து சென்றுவிட்டான். [ 2 தீமோத்தேயு 4:10]
               
     உடன்  ஊழியக்காரனாக இருக்கும்போது தேவாதி தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தன்னுடைய ஊழியக்காரனாகிய அப்போஸ்தலனாகிய பவுலை பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருப்பான். அற்புதங்களை கண்ணாரக் கண்டிருப்பான். அவனுடைய வாழ்க்கையிலும் அற்புதங்கள் நடந்திருக்கும். எதிகாலத்தைக் குறித்து தரிசனங்களை பெற்றிருப்பான். தேவப்பிரசன்னத்தில் எப்பொழுதும் இருந்திருப்பான். வேதச்சத்தியங்களை கேட்டு கொண்டிருந்திருப்பான்.


                        
         இவ்வளவு ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இருந்தும் உலகத்தின் மீது ஆசை வந்தவுடன் அந்த ஆசையே அவனை பிரித்துக்கொண்டு போய்விட்டது. உலக ஆசை அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை வீழ்த்திவிட்டது. எனவே, உலக ஆசைக்கு எச்சரிக்கையாக இருங்கள். உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாதிருங்கள் என்று வேதம் எச்சரிக்கின்றது.
         
   பரலோக குடிமக்களுக்கும் பரலோகத்தை சுதந்தரிக்க காத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் கூறும் ஆலோசனை உலக ஆலோசனையை வெறுத்துவிடுங்கள் என்பதாகும். உலகமா? ஊழியமா? என்று கேட்டால் ஊழியம் என்று யார் சொல்வார்களோ  அவர்கள்தான் அவருக்கு பிரியம். எனவே உலகத்தை ஜெயித்திடுங்கள். ஊழியம் செய்திடுங்கள் !

(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே.  எனக்கு அல்ல கர்த்தருக்கே  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக  இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள்.  உங்கள் Comment –ஐ பதிவு செய்யுங்கள் மற்றும் நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். நீங்களும் இந்த செய்தியை WHATS APP - ல் தினமும் பெற  Prophetic Words Ministries  8608833150, 8608096748)

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..